வடலூரின் சிற்பி ஓ.பி.இராமசாமி ரெட்டியார்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி தஞ்சாவூர் தென்னாற்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஓமந்தூர் கிரா மத்தில் 01 .02 .1895 அன்று முத்துராமரெடியாருக்கும் அரங்க நாயகி தம்பதின ருக்கு மகனாக ஒ.பி. இராமசாமிரெட்டியார் பிறந்தார். இவர் 1905 ஆம் ஆண்டு திண்டிவனம் வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1910 ஆம் ஆண்டு சிங்காரத்தம்மாளை மணமுடித்தார். ஓ.பி. ஆர். 1912 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக தன்னை அற்பணித்துக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக தமிழகத்தில் இராஜாஜி அவர்கள் நடத்திய உப்பு சத்தி யாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். மேலும் கதர்பிரசாரம், மது ஒழிப்பு போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார் . ஓ.பி.ஆர். அவர்கள் 1938 ஆம் ஆண்டு தமிழ் நாடு காங் கிரசின் தலைவராகவும் 23 .03 .1947 முதல் 06 . 04 .1949 வரை சென்னை இரா ஜதானியின் முதலமைச்சராக பதவிவகித்தார். 1951 ஆம் ஆண்டு தனது அரசி யல் வாழ்வில் இருந்...