கடலூர் மாவட்டத்தில் வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
கி.பி. 1567 ஆம்
ஆண்டிற்கு பிறகு செஞ்சியின் மன்னனாக அறியணை யேரி யவர் வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் ஆவார்.
இவரது ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டொன்று வடலூரில் இருந்து 20
கி.மீ. தூரத்தில் உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தில் உள்ளது. இந்த கல்வெட்டு கி.பி.
1584 ஆம் ஆண்டு வெளிடப்பட்டதாகும். அதில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும்
உஷாகால (அதிகாலை) பூஜை, அபிஷேகம், நெய் வேத்தியம் ஆகியவற்றிற்காக பத்திரக்கோட்டை
கிராமத்தை வையப்ப கிருஷ் ணப்ப கொண்டம நாயக்கர் தானமாக வழங்கியுள்ளதை சுட்டுகிறது.
மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கி.பி. 1593 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி
வெளியிடப்பட்ட கிருஷ்ணப்பரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் இக்கோயிலுக்கு
வழங்கப்பட்ட தானங்களைப் பற்றி குறிப்பிடுகிறது.
மேலும் விருத்தாசலம் சிவன் கோயிலில் உள்ள பெரிய மண்டபம் இவரது காலத்தில் கட்டப்பட்டதாகும்.
இம்மண்டபத்தூணில் கிருஷ்ணப்ப நாயகரின் உருவமும் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
செஞ்சி மன்னர் வெங்கடப்ப நாயக்கர் விருத்தாசலம்
கோயிலுக்கு கோபுரம் மற்றும் மதில் சுவர் போன்ற கட்டுமான திருப் பணிகளை
செய்துள்ளார். மேலும் இவ்வூரில் மக்கள் பயன்பாட்டிற்காக மிகப்பெரிய குளம்மொன்றை
வெட்டி அதற்கு தனது மனைவி மங்கம்மாள் நினைவாக அம்மாகுளம் என பெயரிட்டார். அக்குளம்
இன்றும் இப்பகுதியை மக்களால் அம்மாகுளம் என்றே அழைக்கப்படுகிறது.
இரண்டாம் கிருஷ்ணப்பநாயக்கர்
வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கரின் மகனான
இரண்டாம் கிருஷ் ணப்ப நாயக்கர் கி.பி. 1584 ஆம் ஆண்டு செஞ்சியின் மன்னாக
முடிசூட்டப் பட்டார். இவர் விஜயாநகர பேரரசர் இரண்டாம் வேங்கடபதிராயருக்கு
எதிரா கக் கலகம் செய்யவே கிருஷ்ணப்பர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக் கப்பட்டார். பிறகு தஞ்சை நாயக்க மன்னர் இரகுநாத நாயக்கரின்
வேண்டுகோ ளுக்கு இணங்கி விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணப்ப நாயக்கரை சிறையிலி ருந்து விடுவித்தார்.
இதற்கு கைமாறாக தனது மகளை இரகுநாதருக்கு திரு மணம் செய்து வைத்தார். இரண்டாம் கிருஷ்ணப்ப
நாயக்கரின் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டொன்று வடலூரில் இருந்து 17 கி.மீ.
தூரத்தில் உள்ள பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ் வரர் கோயிலில் உள்ளது. கி.பி. 1598
ஆம் ஆண்டு சூலை 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட இக்கல்வெட்டில் இவ்வூர் சிவன் கோயிலுக்கு
வத்தடிக்குப்பம் என்ற ஊரை தனமாக வழங்கப்பட்டதை கூருகிறது. மேலும் குள்ளஞ்சாவடி
அருகே உள்ள வழுதலம்பட்டு கிராமத்தில் அம்மன் கோயில் முன்பாக உள்ள கல்வெட்டில் தஞ்சை
மன்னர் இரகுநாத நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த அய்யன்
கோவிந்தப்பய்யன் என்ப வரால் இப்பகுதியில் புதியதாக ஏற்படுத்தப்பட்ட பேட்டையில்(பேட்டை
என்ற சொல் வணிகர்கள் குடியேற்றப்பட்ட இடம்)குடியேரியவர்களுக்கு வரிச்சலுகை கள் ஏற்படுத்தி
கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1594 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்டதாகும். மேலும் வடலூரில் இருந்து கிழக்கே 30 கி.மீ. தூரத்தி கடற்கரை
அருகே அமைந்துள்ள அய்யம்பேட்டை என்ற கிராமம் அய் யன் கோவிந்தப்பய்யன் பெயரால்
ஏற்படுத்தப்பட்டதாகும். எனவே இரகுநாத ருக்கும் கிருஷ்ணப்பருக்கும் இருந்த
நல்லுரவுக்கு வழுதலம் பட்டு கல் வெட்டே தக்க சான்றாக விலங்குகிறது.
வேலுரை ஆண்ட லிங்கம நாயக்கர் , சிதம்பரம் அருகே உள்ள தேவிக் கோட்டையை
தலமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த சோழகனார், கெடில நதி அருகே உள்ள திருவதிகை
பகுதியை ஆட்சிபுரிந்த கிருஷ்ணப்பர் ஆகி யோர் இரண்டா கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்சிக்கு
உட்பட்ட சிற்றரசர்களாக விளங்கினர். ஆனால் ஒரு கட்டத்தில் வேலூர் சிற்றரசன்
விஜயநகரப் பேரர சுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார். பேரரசர் வேங்கடபதி
கி.பி.1606 ஆம் ஆண்டு லிங்கம நாயக்கரை கைது செய்து வேலுரை தனது கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டுவந்தார். அதேபோல்
தேவிக்கோட்டையில் இருந்த சோழகனா ரும் தலைமைக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக
செயல்பட்டதை அறிந்த விஜயநகரமன்னர் , தஞ்சை மன்னரான இரகுநாத நாயக்கரை அனுப்பி
கி.பி. 1615 ஆம் ஆண்டு தேவிக் கோட்டையை முற்றுகையிட செய்தார். தஞ்சை மன்னரின்
படையானது தேவிக்கோட்டையை முற்றுகையிட்டு சோழகனை தோற்கடித்து கைது செய்தது.
இப்போரில் செஞ்சி மன்னர் மற்றும் போர்த்து கீசிய படைகள் சோழகனாருக்கு உதவி புரிந்தும் தமது
சிற்றரசரை காப்பாற்ற முடியாமல் போனது. செஞ்சி மன்னர் கிருஷ்ணப்பர் தமது உயிரை
காப்பாற்றி கொள்வ தற்காக போர்க்களத்திலிருந்து தப்பி ஓடவேண்டியதாயிற்று. ஆனால்
திருவதிகையை ஆண்டதாகக் கூறப்படும் அரசனை பற்றிய தகவல் கிடைக் கவில்லை.
கிருஷ்ணப்பர் காலத்தில் டச்சுக்காரர்களுக்கு
கடலூர் தேவனாம்பட்டினத் தில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன்
விளைவாக கி.பி.1623 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் கடலூரில் கோட்டை ஒன்றை கட்டி அதையே
தமது வர்த்தக தலைமையிடமாக உருவாக்கினர். இதற்கிடையே இப்பகுதியில் வாணிபம் செய்து
வந்த போர்ச்சுகீசியர்கள் விஜயநகரப்பேரரசர் முதலாம் வேங்கடனிடம் புகார் செய்தனர்.
பேரரசர் உடனே ஒரு தூதுவர் மூலம் டச்சுக்காரர்களை அங்கிருந்து விரட்டுமாறு செஞ்சி
மன்னருக்கு ஆணையிட்டார். இந்த ஆணையை கிருஷ்ணப்பர் மதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற
போர்த்துகீசியர்கள் பேரரசரை நேரில் சந்தித்துப் புதிய உத்தர வைப் பெற்று செஞ்சி மன்னரிடம் வழங்கினர்.
இவ்வுத்தரவை நடைமுறை படுத்துவதில் காலதாமதம் செய்தார். இதனை கேள்வியுற்ற விஜயநகர
மன்னர் உடனடியாக டச்சுகாரர்களை கடலூரில் இருந்து விரட்ட உத்தர விட்டார். அதன்பிறகு
கடலூர் போர்த்துகீசியர்களின் வணிகத்தளமாக மாறி யது.
பரங்கிப்பேட்டை உருவாக்கம்
இரண்டாம் கிருஷ்ணப்பர் வெள்ளாற்றின்
கழிமுகப்பகுதியில் கிருஷ்ணாப்பட் டினம் என்ற கடற்கரை நகரை தமது பெயரில்
நிறுவினார். அங்கு புதிய மக் கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினார். அந்நகரே இன்று
பரங்கிப்பேட்டை என அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் விவசாயம் பெருக புதிய
நீர் நிலை களையும் மக்களுக்கு ஏற்படுத்திதந்தார். இரண்டாம் குலோத்துங்க
சோழனால் ( கி.பி 1133 – 1150 ) கடலில்
வீசப்பட்ட சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளைப் போன்ற சிலையை வடித்து அதை மீண்டும்
அக்கோயிலில் பிரதிஷ்டை செய் தார். தில்லை தீட்சதர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு
இடையே நிறுவப் பட சிலைதான் தற்போதுள்ள கோவிந்தராஜர் சிலையாகும். தாம்
உருவாக்கிய கிருஷ்ணாப்பட்டினத்தில் கி.பி.1623 ஆம் ஆண்டு முதல் டச்சுகாரர்கள் வாணி பம் செய்து
கொள்வதற்கான அனுமதி யையும் வழங்கினார்.
புவனகிரிப் போர்
விஜயநகரப்
பேரரசில் வாரிசு உரிமைக்கான உள் நாட்டுப்போர் நடைபெற் றது. ஒருபுறம்
ஜக்கராயனும், மறுபுறம் யச்சமனும் போரிட்டுக் கொண்டனர். இதில் ஜக்கராயனுக்கு
கிருஷ்ணப்பரும், மதுரை மன்னர் வீரப்ப நாயக்கரும் உதவி புரிந்தனர். யச்சமனுக்கு
தஞ்சை மன்னர் இரகுநாதன் உதவினார். இக் கூட்டுப்படைகள் பல
இடங்களில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இறு தியாக வடலூரில்
இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள புவனகிரி கோட்டையில் செஞ்சிமன்னன் கிருஷ்ணப்ப
நாயக்கர் ஜக்கராயரின் சகோதரன் யதிராஜனு டன் இணைந்து தஞ்சை
மன்னன் இரகுநாதனின் படையை எதிர்க்கத் தீர்மா னித்தார். இதனை அறிந்த
இரகுநாதன் கி.பி.1644 ஆம் ஆண்டு தனது படையை புவனகிரி கோட்டையை தாக்க அனுப்பினார்.
புவனகிரி கோட்டையை நோக்கி வந்த இரகுநாதரின் படைகள் செஞ்சி மன்னனையும்,
யதிராசனையும் கோட் டையை
விட்டே விரட்டியடித்து. கோட்டையினுள்
இருந்த பெரும் செல்வத் தையும் கைப்பற்றியது.
இறுதியில் யச்சமனை தஞ்சைப் படைகள் சிறைபிடித் தது. ஆனால் கடைசி வரை
விஜயநகர அரசின் மேலாண்மையை ஏற்காமலே இருந்தார் கிருஷ்ணப்பர்.
செஞ்சி மன்னர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
காலத்தில் கடலூர் மாவட்டம் போர்த்துகீசியர்கள் மற்றும் டச்சுக் காரர்களின் வணிகத்
தலமாக் கப்பட்டதன் விளைவு பிறகு வந்த ஆங்கிலேயர்கள் கடலூரை தங்களது
வணிகத் தலைநகராக உருவாக்க ஏதுவாக இருந்தது. செஞ்சியின் சிறந்த மன்னராக விளங்கிய
கிருஷ்ணப்பரின் ஆட்சியின் கீழ் வடலூர் பகுதியும் சிறப்புற்று இருந்தது.
Comments
Post a Comment