பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி

 

 பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி

பாண்டிய நாட்டில் விளையும் முத்துக்கள் மீது நம் நாட்டுப் பெண்கள் கொண்டுள்ள மிகுதியான மோகத்தால் பெருமளவில் முத்துக்கள் அங்கி ருந்து இறக்குமதி செய்யப்பட்டு நம் நாட்டின் செல்வங்கள்  தீர்ந்து போகும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் அரசே" என புலம்பித் தீர்த்த ரோமானிய அமைச்சரைப் பற்றியக் குறிப்பு வரலாற்றில் உண்டு.

 முத்துக்கள் மட்டுமா!? கரூர்,காங்கேயம் பகுதிகளில் விளைந்தக் கற் களையும், குஜராத் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டக் கற்களை யும் கொண்டு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட மணிகளை வாங்கிச்செல்வதற்காக கொடுமணல்'க்கு வந்து குவிந்த ரோமானிய வணிகர்கள் குறித்த தகவல்களை சங்கப் பாடல் களும்,தொல்லியல் சான்றுகளும் பகர்கின்றன .

 "மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் விளைந்த மிளகு,ஏளக்காய் மற்றும் வாசனைப் பொருட்கள் டன் கணக்கில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு ஏற்றுமதி செய்ததற்கான சான்றுகளை சங்கப்பாடல்களும் ,மேலைநாட்டு அறிஞர்களின் குறிப்புகளும் நமக்கு உணர்த்துகின்றன".

 "கிபி இரண்டாம் நூற்றாண்டில்(பொயு150) முசிறித் துறைமுக வணி கர்களும் எகிப்து நாட்டு அலெக்சாண்டிரியா துறைமுக வணிகர்களும் செய்துக்கொண்ட பேப்பிரசு தாள் உடன்படிக்கை"யும் இங்கு பெருமள வில் வாணிபம் நடந்ததை உறுதிப்படுத்துகின்றது.

 

ஏற்றுமதிக்கு உகந்த இடங்களாக சேரநாட்டின் முசிறித் துறைமுகமும் , பாண்டிய நாட்டில் கொற்கையும்,சோழநாட்டில் காவிரி பூம்பட்டினமும், பாண்டிச்சேரியின் அரிக்கமேடு துறைமுகப்பகுதியும்,தொண்டை மண்ட லத்தில் மல்லபுரமும் விளங்கியுள்ளது.

 

  இரண்டாயிரமாண்டுகளுக்கு முற்பட்ட துறைமுகப்பட்டினங்கள் உள் ளன என்றால், பொருட்களைத் துறைமுகங்களுக்கு கொண்டுச் செல் வதற்கான தரைவழியும் இருந்திருக்க வேண்டும்.  அதனைப் "பெருவழி கள்" எனச் சங்கப்பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

 

தமிழகத்தில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பெருவழிகள் இருந்திருக் கின்றன. அதியமான் பெருவழி,மகதேசப் பெருவழி, இராஜகேசரி பெரு வழி, வீரநாராயணன் பெருவழி, அயிரமலை பெருவழி, உட்பட பல பெருவழிகள் இருந்திருந்தும் அவற்றில் பெரும்பாலானவை கால ஓட் டத்தில் தடையங்களின்றி மறைந்து போய்விட்டன.

 

 இவற்றில், உலகின் மிகத் தொன்மையானப் பெருவழிகளில் ஒன்றா னதும்,, கிழக்குத் துறைமுகங்களை மேற்குத்துறைமுகப் பட்டினத்தோடு (முசிறி) இணைக்கும் "பாலக்காட்டு கணவாய்" வழிக்கு "இராஜகேசரிப் பெருவழி" எனப்பெயர். சரி, இரண்டாயிரமாண்டு பழமையான இந்தப் பாதைக்கு, ஆயிரமாண்டுக்கு முன் ஆட்சிசெய்த  அரசனின் பெயர் எப் படி வந்தது? ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் அபாரஜித பல்லவனை வீழ்த்தி,முதல் சோழப் பேரரசிற்கு வலுவான அடித்தள மிட்டவர் முதலாம் ஆதித்தன்.இவரது காலத்தில் இந்தப் புகழ்மிக்கப் பெருவழி யின் பாலக்காட்டுக் கணவாய் நுழைவாயிலான "கோவை-சுண்டக்காமுத்தூர்" வனப்பகுதியில் ,

 

"ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப்

பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப ஒருநிழல் வெண்டிங்

கள் போலோங்கி ஒருநிழல்போ

ல் வாழியர் கோச்சோழன் வளங்

காவிரி நாடன் கோழியர் கோக்கண்ட

ன் குலவு". 

 

என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று வைக்கப்பட்டது.

இது வெறும் அறிவிப்பு பலகை மட்டுமல்ல!."இராஜகேசரி,கோச்சோழன், காவிரிமைந்தன்,கோக்கண்டண்"என  அக்காலகட்டத்தின் வலிமைமிகுந்த பேரரசனின் கீர்த்திகளைக் கொண்டிருக்கும் கல்வெட்டு அது.

    பாலக்காட்டுக் கணவாய் வழியாகப்  பெருவழியினுள் நுழையும் அனைவரையும் முதலாம் ஆதித்த சோழன்,தானே நின்று பாதுகாப்பது போல ஒரு "நிழற்படை" அமைத்துள்ளார் என்பதாகத் தகவல் சொல்கி றது அந்தக் கல்வெட்டு. ஒரு அரசனின் நிழல் போல ஒரு படைநின்று பாதுகாப்பதாகக் கல்வெட்டுச் சொல்வதால் அதற்கு முன்பு அந்தப் பகு தியில் பயணிக்கும் மக்களுக்கும்,வணிகர்களுக்கும் ஏதோவொரு வகை யில் அச்சுறுத்தல் இருந்திருக்கலாம். இதனையறிந்த ஆதித்தன் தன் நிழலைப் போல் படைவீரர்கள் நின்று உங்களைப் பாதுகாப்பார்களென அறிவித்து மக்களும்,வணிகர்களும் அச்சமின்றி பயணிக்க வழிவகைச் செய்துள்ளான்.

 

கால்நடைச் சமூகமாக மக்கள் வாழ்ந்தக் காலத்தில் இடப்பெயர்வடை யும் போது பயன்படுத்திய  இந்தப் பாதைகள் பின்னர் வேட்டை சமூகத் திலும், அதனைத் தொடர்ந்து உலோகக்காலத்திலும், சங்க காலத்திலும் பின்னர் வரலாற்றுக் காலம் தொட்டும் பல நூற்றாண்டுகளாக தொடர்ச் சியான பயன்பாட்டில் இருந்திருந்தப்போதிலும்,தன் ஆட்சிக் காலத்தில் தம் மக்களைக் காக்கும் பொருட்டுப் பாதையை சீர்படுத்தி அறம் காத்த மன்னனின் பெயரை இந்தப்பாதை தனதாக்கிக் கொண்டதில் வியப் பில்லை..!!

 





Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு