கடலூர் - வாலாஜா ஏரி வரலாற்றுக் குறிப்பு
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
இவ்வேரியானது
வடலூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் நைனார் குப்பம் கிராமத்தின் தெற்கு பகுதியில்
அமைந்துள்ளது. தற்போது வாலாஜா ஏரியானது 1664 ஏக்கர் பரப்பளவையும், 12 பாசன மதகு
களையும், 15 கதவு களைக் கொண்ட கதவணையையும் கொண்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு
இந்த ஏரியை தூர்வரும் போது துருப்பிடித்த நிலையில் 15 கதவுகளை கொண்ட ஷட்டர்
பகுதியும் அதனருகே 1851 என்று பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது.
கடலூர் பகுதியை கி.பி. 1749 முதல் கி.பி. 1795 வரை 46 ஆண்டுகள் ஆர்க்காட்டைத்
தலைநகராகக் கொண்டு முகமது அலி வாலாஜா என்ற நவாப் ஆட்சி செய்து வந்துள்ளார். இவரது
ஆட்சியின் கீழ் பழைய வடஆற்காடு மற்றும் தென்னாற்காடு பகுதிகளும் உட்பட்டிருந்தன.
இம்மன்ன னது ஆட்சிகாலத்தில் வாலாஜா ஏரி வேட்டப்பட் டிருக்க வேண்டும். மேலும் இவரது காலத்தில்
வெளியிடப்பட்ட நாணய மொன்று விருத்தாசலத்தில் கிடைத்துள்ளது. காசின் முன்பக்கம்
‘’ வாலாஜா ‘’ ஸனா ஹஜரி ‘’ 1208 என பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. வாலாஜா
என்பது முகமது அலி வாலாஜா என்ற நவாபின் பெயர்ச் சுருக்கமாகும். ‘’ ஹிஜிரி ‘’
என்பது இஸ்லாமியரின் ஆண்டு முறையாகும். ‘’ ஸனா ‘’ என்பது இஸ்லாமியரின் ஆண்டு
பெயராகும். ஹிஜிரி 1208 – ல் இந்நாணயம் வெளியி டப்பட்டுள்ளது. அதாவது கி.பி. 1788 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்ட தாகும். இவ்வளவு புகழ் பெற்ற நவாப் முகமது அலிவாலாஜா பெயரில்
வெட்டுவிக்கப்பட்டுள்ள இந்த ஏரியின் மூலம் சுமார் 12000 ஏக்கர் விவசாயா நிலங்கள்
பாசனம் பெறுகின்றன.
Comments
Post a Comment