கடலூர் மாவட்டத்தில் ரோமானிய நாணயம்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
சங்ககாலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் கடலூர்
மாவட்டத்து டன் வணிக தொடர்பு கொண்டதற்கான தொல்சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.
குறிப்பாக குள்ளஞ்சாவடி அருகே உள்ள தொண்டைமாநத்தம் என்ற கிராமத்தில் ரோமானிய
நாணயம் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக தொண்டைமாநத்தம் பகுதி மக்களுடன் ரோமானியர்
வணிக உறவு கொண்டி ருந்துள்ளதை அறியமுடிகிறது. மேலும் இவ்வூரில் உள்ள இராமசாமி
என்பவர் தமது நிலத்தை சீர் செய்யும் போது உடைந்த கிரேக்க - ரோமானியர்கள் மது ,ஆலிவ் எண்ணெய் போன்ற திரவப்பொருட்களை
தமிழகத்திற்கு கொண்டுவ ரப் பயன்படுத்திய கூம்பு வடிவ அடிப்பாகத்தைக் கொண்ட ஆம்போரா
ஜாடி களின் உடைந்த பாகங்கள் மற்றும் வெளிர் சாம்பல் நிற ரௌலட்டட்
வகை மட்கல ஓடுகளும், ஒருசில கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகளும் அப்பகு தியில் இருந்து
கிடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொண்டை மாநத்தம் மக்களுடன் கிரேக்க, ரோமானியர்கள்
வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை உறுதியாக நம்பப்படுகிறது.
Comments
Post a Comment