வடலூரின் சிற்பி ஓ.பி.இராமசாமி ரெட்டியார்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்




  தென்னாற்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஓமந்தூர் கிரா மத்தில் 01 .02 .1895 அன்று முத்துராமரெடியாருக்கும் அரங்க நாயகி தம்பதின ருக்கு மகனாக ஒ.பி. இராமசாமிரெட்டியார் பிறந்தார். இவர் 1905 ஆம் ஆண்டு திண்டிவனம் வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1910 ஆம் ஆண்டு சிங்காரத்தம்மாளை மணமுடித்தார். ஓ.பி. ஆர். 1912 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக தன்னை அற்பணித்துக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக தமிழகத்தில் இராஜாஜி அவர்கள் நடத்திய உப்பு சத்தி யாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். மேலும் கதர்பிரசாரம், மது ஒழிப்பு போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார் . ஓ.பி.ஆர். அவர்கள் 1938 ஆம் ஆண்டு தமிழ் நாடு காங் கிரசின் தலைவராகவும் 23 .03 .1947 முதல் 06 . 04 .1949 வரை சென்னை இரா ஜதானியின் முதலமைச்சராக பதவிவகித்தார். 1951 ஆம் ஆண்டு தனது அரசி யல் வாழ்வில் இருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்ட இவர் வடலூர் வந்து நிரந்தரமாக தங்கினார். ஓ.பி.ஆர். 19 ஆண்டுகள் வடலூரில் வாழ்ந்தார். இக்காலக்கட்டத்தில் வடலூர் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் மகத்தான வைகளாகும்.

ஓ. பி. ஆர் வடலூர் வருகை

   திரு. வி. க. எழுதிய ‘‘ மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்’‘ என்ற நூலில் வள்ளலாரைப் பற்றி கூறப்பட்டிருந்ததை படித்த ஓ.பி.ஆர் அன்று முதல் வள்ளல் இராமலிங்க அடிகளாரின் மீது ஈடுபாடு கொள்ளலானார். அந்த ஈடுபாட்டின் விளைவாக 1930 ஆம் ஆண்டு முதல் முறையாக வடலூருக்கு வந்தார். ஓ.பி. ஆர். 1937 ஆம் ஆண்டு தென்னார்க் காடு மாவட்டத்தின் காவல் துறை தலைவராக இருந்த பொழுது வள்ளலார் மீதான பற்று அதிகமானது. கிருபானந்த வாரியார் சத்திய ஞானசபையின் திருப்பணியை முடித்தபோது அவ்விழாவிற்காக வந்த ஓ.பி.ஆர் வடலூரில் நிரந்தரமாக தங்க நினைத்தார். அப்போது வள்ளலார் வாழ்ந்த வடலூரில் சான்றோர் பெருமக்கள் பலரும் வாழவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக வடலூரில் குருகுலம் ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு வந்தார். இக்காலக் கட்டத்தில் தமது நண்பரான திரு.சென்னியப்ப முதலியார் மூலமாக புதுச் சேரியில் இருந்த சுவாமி சுத்தானந்த பாரதியாரை சந்தித்தார் ஓ.பி. ஆர். சுவாமி சுத்தானந்தபாரதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் . சிறந்த தமிழறிஞரான இவரை வடலூரில் தாம் துவக்க உள்ள குருகுலத்தை நடத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தார்.

சுத்த சன்மார்க்க நிலையம்

   வளரும் தலைமுறையினரை சன்மார்க்க சேவையில் ஈடுபட வைக்கும் நோக்கில் வடலூரில் சிறந்த குருகுலம் ஒன்றை ஏற்படுத்த நினைத்த ஒ.பி. ஆர் 18 . 06 . 1951 ஆம் ஆண்டில் பதிவு பெற்ற சங்கமொன்றை ஏற்படுத்தி னார். இச்சங்கத்திற்கு ரூபாய் 50,000 நன் கொடையாக கிடைத்தது. மேலும் தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் மூலம்  வடலூர் அருகே 300 ஏக்கர் நிலமும் ஓ.பி.ஆருக்கு கிடைத்தது.

வள்ளலார் குருகுலம்

   ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டு என்ற நோக்கத்தில் 1953 செப்டம் பர் 28 விஜய தசமி நாளில் வடலூரில் வள்ளலார் குருகுலத்தை ஓ.பி.ஆர் அவர்கள் ஆரம்பித்தார். அப்போது கட்டடம் எதுவும் கட்டப் படாததால், பண் ருட்டி விழாமங்கலம் திரு. சொக்கலிங்கம் ரெட்டியாருக்கு சொந்தமான சத் திரம் வடலூரில் இருந்தது. அக்கட்டடத்தில் வடைகை இன்றி தற்காலிகமாக குருகுலத்தை நடத்தினார். கிருபானந்தவாரியார் வடலூரில் இருந்த தமது சொந்த நிலத்தை ஓ.பி.ஆர். அவர்களுக்கு குருகுலம் கட்டுவதற்காக தானமாக வழங்கினார். அந்நிலத்தில் வள்ளலார் குருகுலத்திற்கான பள்ளி கட்டடம், தியான மண்டபம், மாணவர் விடுதி போன்றவை கட்டப்பட்டன. பள்ளி கட்ட டம் 16 . 10 .1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கல்வியமைச்சர் திரு சி.சுப் பிரமணியன் முன்னிலையில் ஸ்ரீசித்பவானந்த சுவாமிகளால் திறந்து வைக்கப் பட்டது. அப்பள்ளியானது உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்து இன்று மேல்நி லைப் பள்ளியாக உயர்வு பெற்று பல்லாயிரம் மாணவர்களின் வாழ்வில் ஞான ஒளியேற்றிவருகிறது.   

     இக்குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு கடவுள் பக்தியுடன் சுய ஒழுக்கமும், விவசாயத்துடன் கூடிய கல்வியை பயிற்று விப்பதே இதன் பிரதான நோக்கமாகும். மேலும் இங்கு பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு வரும் தங்கள் வாழ்நாளில் தன்னம்பிக்கையுடன் கண்ணியமாக வாழ்வ தற் கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்பதில் ஓ.பி.ஆர். அவர்கள் குறிக்கோளாக கொண்டிருந்தார்.

 அப்பர் அனாதை ஏழை மாணவர் இல்லம்

    பசி, பிணி, வறுமை, அறியாமை முதலிய சமூக அவலங்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்பது ஓ.பி.ஆரின் நீண்ட கால திட்டமாக இருந்தது. அதன் விளைவாக வடலூரில் அப்பர் அனாதை ஏழை மாணவர்கள் இல்லத்தை 14 . 09 . 1961 ஆம் ஆண்டு தொடங்கினார். மேலும் இவ்விடுதியின் வாயிலில் ஒரு கேணியை வெட்டி அதற்கு பொய்கை ஆழ்வார் வாவி எனப் பெயரிட்டார். இதன் மூலம் வள்ளலார் குருகுலத்தில் படிக்கும் அனாதை ஏழை மாணவர் களுக்கு இவ்விடுதி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

கல்வியில் ஆர்வம்

   ஒ.பி.ஆர் சிறுவயது முதலே கல்வியில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். அதனால்தான் குழந்தைகள் ஆறு வயதில் படிப்பைத் தொடங்குவது என்ற ஏற் பட்டால் பின் தங்கிய சமூகத்தினர் பாதிக்கப் படுவார்கள் எனக் கருதினார். எனவே ஐந்து வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விட வேண் டும் என்று முதல்வர் காமராசரிடம் சொல்லி அதற்கான அரசாணையை பிறப் பிக்க வைத்தார் ஓ.பி.ஆர்.

   மேலும் தமிழ் நாட்டில் கல்வி நிலையங்கள் நிறுவி நன்முறையில் நடத்தி யவர்களையெல்லாம் ஓ.பி.ஆர். வடலூரில் தாம் நடத்திய விழாக்களுக்கு அழைத்துப் பெருமைபடுத்தினார். குறிப்பாக திருப்பராய்துறை ஸ்ரீ சித்பவானந் தசுவாமிகள், மாம்பாக்கம் திரு. இலவழகனார், பெரியநாயக்கன் பாளையம் திரு தி.சு .அவினாசிலிங்கம்ரெட்டியார், வேதாரண்யம் சர்தார். வேதரத்தினம், மதுரை கருமுத்து, தியாகராசச்செட்டியார், வாலாஜாபாத் திரு. மாசிலாமணி முதலியார் போன்றோர் வள்ளலார் குருகுலம் பள்ளிக்கு வருகை புரிந்து சிறப்பித்துள்ளனர்.

 தியான மண்டபம்

   1955 ஆம் ஆண்டு ஒ.பி.ஆர். அவர்களின் மணி விழா நடை பெற்றது. அந் நாளில் கிளியனூர் திரு.கே.எஸ் . வெங்கடகிருஷ்ண ரெட்டியார், சிறுவந்தாடு திரு. சின்னசாமி ரெட்டியார் மற்றும் திரு. லெட்சுமி நாராயண ரெட்டியார் ஆகியோர் ரூபாய் 60,000 வசூலித்து ஒ.பி.ஆர். அவர்களுக்கு பணமுடிப்பாக வழங்கினர். மேலும் பலரால் வழங்கப்பட்ட பண முடிப்புகளை கொண்டு திருப்பராய்த்துறையில் சுவாமி சித்பவானந்தர் கட்டியிருப்பதை போன்று அழ கிய தியான மண்டபம் ஒன்றை வள்ளலார் குருகுலம் பள்ளி வளாகத்தில் கட் டினார். இந்த தியான மண்டபம் 1 . 9 . 1958 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் வராக இருந்த திரு . காமராசர் தலைமையில், சித்தலிங்க மடம் தவத்திரு ஞானானந்த சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டது.

அப்பர் சான்றோர் இல்லம்

   வள்ளலார் வாழ்ந்த வடலூரில் அவருடைய கொள்கைகளில் ஈடுபாடு உள்ள சான்றோர் பலர் எப்போதும் இருந்து வரவேண்டும் என்ற எண்ணம் ஓ.பி.ஆர். அவர்களுக்கு இருந்தது. அதற்காக ஓர் இல்லம் அமைத்தார். அதற்கு உழவாரப் பணி செய்த அப்பர் பெயரை இட்டார் . இந்த இல்லத்திற்கு திரு வண்ணாமலை திரு. நாராயணரெட்டியார் , கடலூர் திரு. அழகானந்த முதலி யார் போன்ற பல அன்பர்கள் மூலம் ரூபாய் 25,000 கிடைத்தது. இந்த நன்கொ டையை கொண்டு அப்பர் சான்றோர் இல்லம் கட்டப்பட்டது. இதை மயிலம் தவத்திரு. சிவஞானபாலய சுவாமிகள் திறந்து வைத்தார்.

 திலகவதியார் உணவு விடுதி

   திருச்சி திரு. சோம சுந்தர ரெட்டியார் வழங்கிய ரூபாய் . 12,000 உள்படக் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு ஓர் உணவு விடுதியை கட்டினார். அதற்கு சைவம் தழைக்க தொண்டாற்றிய திலகவதியார் பெயரை சூட்டினார். இக் கட்டடம் 1 . 9 . 1958 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

வளர்ச்சி பாதையில் வடலூர்

   1951 ஆம் ஆண்டு ஓ.பி. ஆர். அவர்கள் வடலூர் வந்தார். அப்போது வட லூரில் எவ்விதமான தொழிற்சாலைகளும் கிடையாது. சாப்பிடுவதற்கு நல்ல உணவுவிடுதிகள் கூட இல்லை. மின்சாரவசதி, வங்கி வசதி, தந்தி வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு வெற்றுப் பகுதியாக காணப்பட்டது. ஓ.பி.ஆர் அவர்கள் வடலூரில் கட்டிய கட்டடங்களுக்கு தேவை யான பொருட்கள் அனைத்தும் குறிஞ்சிப்பாடியில் இருந்தே வாங் கப்பட்டன. மேலும் கொத்தனார்கள் கூட குறிஞ்சிப்பாடியில் இருந்துதான் வரவேண்டும். அன்று வடலூர் என்றால் சத்திய ஞானசபை, தர்மசாலை, சத்திரங்கள், சில சாதுக்கள் இவைதான் அன்றைய வடலூரின் முகவரி. தற்போது உள்ள இர யில் நிலையம் கூட மூடப்படும் சூழலில் இருந்தது. வடலூரைப் பற்றி ஓ.பி. ஆர். அவர்கள் கூறும் போது வடலூரில் வெளிவூரில் இருந்து வருபவர்கள் ஒரு நாள் தங்குவதற்கு கூட வசதி இல்லை. மேலும் பேச்சுத் துணைக்கு கூட ஆள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார் . அந்த நிலையில் இருந்த வடலூ ருக்கு ஒ.பி.ஆர். அவர்களின் மூலமாக பல வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தன. குறிப்பாக .....

·         பிரதம சுகாதார நிலையம்

·         கால்நடை மருத்துவமனை

·         பெரிய அஞ்சலகம் மற்றும் தந்தி நிலையம்

·         அரசாங்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளி

·         அம்பர் சர்க்கா நிலையம் ( சரஞ்சன் காரியாலயம்)

·         குஷ்ட நிவாரண நிலையம்

·         மின்சார வசதி

·         காவல் நிலையம் போன்றவை குறிப்பிடத்தக்கன.

          

    மேலும் ஒ.பி.ஆர் அவர்கள் இப்பகுதியில் வாழும் மக்களின் பொரு ளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் சேஷசாயி இன்ட ஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் நெய்வேலி செராமிக் என்ற இரு பெரிய தொழிற்சா லைகளை வடலூருக்கு கொண்டுவந்தார். இந்த இரு தொழிற் சாலைக ளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 7,000 பேர் வேலைவாய்ப்பினை பெற்றனர்.

என்.எல்.சி  நிறுவனம் சுரங்கம் வெட்டுவதில் இருந்து விலக்கு

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுரங்கம் வெட்டி நிலக்கரி எடுப் பதற்கு அறிவிக்கப்பட்ட ஊர்களின் பட்டியலில் 67 ஊர்கள் இருந்தன. ஓ.பி.ஆர். அவர்களின் வேண்டுகோளுக்கினங்க 35 கிராமங்கள் நீக்கப்பட்டன. எனினும் சுரங்க வேலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட எஞ்சிய ஊர்களில் கருங் குழியும், வடலூரும் சேர்ந்திருந்தன. இவ்வூரையும் சுற்றுப்புறத்தையும் தோண்டக்கூடாது என்று ஒ.பி.ஆர் அவர்கள் தமிழக அரசைக் கேட்டுக் கொண் டார். இது குறித்து அரசு உடனடியாக ஆணை எதையும் பிறப்பிக் கவில்லை. தாம் கிளர்ச்சி செய்ய நேரும் என்று ஓ.பி.ஆர். அவர்கள் அன்றைய தமிழக முதலமைச்சர் இராஜஜிக்கும், பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கம் கடிதம் எழு தினார். இதைத் தொடர்ந்து அன்றைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியரை சந்தித்தும், மேலவையில் கேள்வி கேட்டும் பிரச்சனையை அரசின் கவனத் திற்கும் கொண்டு வந்த வண்ணமாக இருந்தார்.

    அரசாங்கத்தார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு இது குறித்து எழுதினர். ஆனால் அப்போது நிர்வாக இயக்குநராக இருந்த திரு. டி.என்.எஸ். மணி ஐ.சி.எஸ். அவர்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னர் சுரங்கம் வெட்டும் அறிவியல் துறை மேலும் வளர்ச்சியடைந்து இப்பகுதியை வெட்டுவது லாப கரமாக இருக்கலாம் என்ற எண்ணம் உண்டாகக் கூடும். எனவே இப்போதே இந்த ஊர்களையும் ‘’அக்குயர் ‘’ செய்து விடுவதே நல்லது. அப்படிச் செய்யா விட்டால் பலர் கட்டடங்களைக் கட்டி விடுவார்கள். அவற்றுக்கெல்லாம் சேர்த்து நஷ்ட ஈடு கொடுக்க நேரிடும் மேலும் நஷ்ட ஈட்டுத் தொகையும் பெருகும் என்று அரசுக்குப் பதில் எழுதினார்.

    ஆனால் ஓ.பி.ஆர். கொண்ட உறுதியால் அரசாங்கம் டி.என்.எஸ். மணி யின் யோசனையைப் புறக்கணித்து பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் வெட்டு வதற்காக நிலங்களை அக்குயர் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் 1953 ஆம் ஆண்டு சட்டத்தினின்றும் கருங்குழி, மேட்டுக்குப்பம் கிராமங்களை விடுவித்து ஆணையிட்டது .

சென்னைப் பயணம்

    1970 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓ.பி.ஆர். அவர்களின் உடல் நிலை யில் பாதிக்கப்பட்டதால் சென்னைக்குச் சென்றார். சாந்தோமிலுள்ள தனது தம்பி ஓ.எம். லட்சுமி நாராயண ரெட்டியார் இல்லத்தில் தங்கி மருத்துவர் இரத்தினவேலு சுப்பிரமணியத்திடம் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகவலை கேள்வியுற்ற அப்போதைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஓ.பி.ஆருக்கான மருத்துவ செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்று கூறி அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டு மென்று தகவல் அனுப்பினார். ஆனால் ஓ.பி.ஆர் அவர்கள் அவ்வேண்டுகோளை ஏற்க மறுத் துவிட்டார். மேலும் மருத்துவர்களின் சிகிச்சையில் முனேற்றம் ஏற்படாததால்  25 . 08 .1970 சாதாரண ஆண்டு ஆவணித் திங்கள் 9 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை பகல் 12 மணிக்கு ஓ.பி.ஆர். அவர்களின் உயிர் பிரிந்தது. தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய பிறகு சென்னையில் இருந்து வடலூ ருக்கு கொண்டுவரப்பட்ட ஓ.பி.ஆர் அவர்களின் உடல் தியான மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஓ.பி.ஆர் .அவர்கள் நிறுவிய வள்ளலார் குருகுலம் பள்ளி வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு சமாதிக் கோயில் கட்டப்பட்டு 11 .10. 1970 அன்று திறக்கப்பட்டது.

    ஓ.பி.ஆர் அவர்கள் இறக்கும் முன்பாக வடலூரில் தம்மால் தொடங்கப் பட்ட அத்துனை நிறுவனங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை அருட்செல்வர் பொள்ளாச்சி திரு ந. மகாலிங்கம் அவர்களிடம் ஒப்படைத் திருந்தார். அவ் வாறு ஒப்படைக்கப்பட்ட அத்தனை நிறுவனங்களையும் தமது திறன்மிக்க நிர்வாகத்தால் இன்று கல்லூரி வரை  உயர்ந்துள்ளது. ஓ.பி. ஆர் அவர்களின் கனவை நனவாக்கிய பெருமை அருட்செல்வரையே சாரும்.  மேலும் இன்று ஓ.பி.ஆர். அவர்களின் கல்வி நிறுவனங்களின் தாளாலராக விளங்கும் டாக்டர் செல்வராஜ் அவர்கள் இக்கல்வி நிறுவனத்தை உலக அளவில் சிறந்த நிகர்நி லைப் பல்கலைக் கழகமாக உருவாக்குவதே தமது வாழ்வியல் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருவது போற்றத்தக்க ஒன்றாகும்.       

ஓ.பி.ஆர் - முத்துராமலிங்க தேவர் நட்பு

      வடலூருக்கும்  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர் களுக்கும் உள்ள தொடர்பை பற்றி பார்வதிபுரம் ஆசிரியரும் சன்மார்க் கியுமான தவத் திரு இராமானுஞ்சம் அவர்களிடத்தில் கேட்டபொழுது .... வள்ளலாரின் சன்மார்க்க கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவர் தேவர் அவர்கள். அத னால்தான் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று வடலூருக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் . அப்போது எனக்கு பதினோரு வயது அந்த ஆண்டு தைப்பூச விழா. தர்மசாலை மேடையில் திரு ஓ.பி.ஆர் அவர்கள் அவருக்கு பக்கத்தில் தேவர் அவர்கள் அவருக்கு அருகில் திருக்குறள் முனு சாமி அவர்கள். விழா தொடங்குவதற்கு முன்பாக சமுட்டிக்குப்பதை சார்ந்த துறவி கந்தசாமி அவர்கள் என்னையும் எனது வயதை ஒத்த சிறுவர்களை யும் அழைத்து விழா மேடையில் ‘’ எல்லா முடைய அருட்பெருஞ் ஜோதி அற்புத கடவுளே ‘’ எனத்தொடங்கும் விண்ணப்பத்தை பாட சொன்னார்கள் அதனை பாடி முடித்ததும் தேவர் அவர்களும் , ஓ.பி. ஆர் அவர் களும் எனது முதுகில் தட்டிக் கொடுத்ததை என்னால் என்றுமே மறக்க முடியாதது என் றார். மேலும் தைப்பூசத்தன்று தேவர் அவர்களின் சொற் பொழிவை கேட் பதற்காகவே பெறும் கூட்டம் வரும். 

     ஒருமுறை தேவர் ஐயா பேசுவதற்கு முன்பாக ஓ.பி.ஆர் அவர்கள் வள் ளலார் உறவினர் ஒருவருடைய வீட்டில் அடிகளார் பாடிய, இதுவரை அச் சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுவடி உள்ளது அதை தந் தால் அச்சில் ஏற்றி நூல்வடிவமாக்கப்பட்டால் அனைவருக்கும் பயன்னுள் ளதாக இருக்கும் என்று கூறினார் . மேலும் நாங்கள் பலமுறை அவரிடத் தில் கேட்டும் அவர் தரமறுக்கிறார் இதற்கு தாங்கள்தான் ஒருவழி செய்ய வேண்டும் என்றார். அந்தச் சுவடிகளை வரவழைக்க வேண்டிய விதத்தில் வர வழைப்போம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஒ.பி.ஆர் அவர்களிடம் தெரிவித்தார் தேவர் அவர்கள். அக்கூட்டத்தில் வள்ளலார் இயற்றிய அருட்பா பற்றி ஒரு மணிநேரம் பேசிவிட்டு அடிகளாரால் பாடப்பட்டு இதுவரை அச் சுக்கு வராமல் உள்ள ஏட்டு சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும் அந்த சுவடிகளை அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துக் கொண்டு அதை தர மறுப்பதாக ஓ.பி.ஆர். அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அடிகளாரின் உறவினருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒன்றை கூறிகொள்ள விரும் புகிறேன் , அந்த சுவடிகளை தந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அல்லது தாங்களே அந்தச் சுவடிகளை நூலாக வெளியிடுங்கள் இரண்டையும் செய்யாமல் தாங்கள் பிடிவாதமாக இருப்பதால் அடிகளார் எழுதிய அந்த ஒன் பது பாடல்களும் உலகத்திற்குத் தெரியாமல் போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் . இதுவரை உலகத்திற்கு தெரியாமல் நீங்கள் மறைத்து வைத்துள்ள அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன் கேளுங்கள் என்று மடமடவென அந்த ஒன்பது பாடல்களையும் தன் வெண்கல குரலில் பாடி முடித்தார் .

   தேவர் அவர்கள் பாடி முடித்த சற்று நேரத்தில் வள்ளலாரின் உறவினர் அந்த எட்டுச் சுவடியோடு வந்து தேவரின் பாதத்தில் விழுந்து வணங்கி ஐயா தாங்கள் தேவரல்ல நீங்கள்தான் வள்ளல் இராமலிங்க அடிகளார் என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். பிறகு தாங்கள் பாடிய அந்த ஒன் பது பாடல்கள்தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அந்த சுவடிகள் முழுவதையும் தேவரிடம் தந்தார். அச்சு வடிகள் ஓ.பி.ஆர். அவர்களிடம் தேவர் அவர்கள் கொடுத்தார்கள். ஒ.பி. ஆர். இதனை தங்கள் உருவில் வள்ளலாரே என்னிடம் தருவதாக உணருகிறேன் என்றார். இந்நிகழ்வு என் வாழ்வில் எப்பவுமே மறக்கமுடியாதது என்று பெரு மையாக கூறினார்.  

    மேலும் நான் ஆறாம் வகுப்பு வள்ளலார் குருகுலம் பள்ளியில் படிக்கும் போது பள்ளி வளாகத்தில் சுமார் 300 மரக்கன்றுகள் நடும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் . ஒருநாள் பள்ளியின் முன்பகுதியில் பூச் செடி களை நடுவதற்காக மண்வெட்டியால் நிலத்தை கொத்திக்கொண்டு இருந் தேன். அப்போது ஓ.பி.ஆர். அவர்கள் அந்தவழியாக சென்று கொண்டிருந்தவர் சட்டென்று என் அருகில் வந்து என் கையில் இருந்த மண்வெட்டியை வாங்கி எப்படி நிலத்தை கொத்தவேண்டும் என்று என்கையை பிடித்து கத்து கொடுத் தார்கள். சென்னை மாகணத்தின் முன்னாள் முதல்வர் அவர்கள் மண் வெட் டியை பிடிக்க காற்றுக்கொடுத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனு பவம் என்றார். மேலும் ஓ.பி.ஆர். அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது சுயதேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதுதான் உண்மை யான காந்திய கொள்கையாகும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். வள்ளலார் குருகுலப் பள்ளிக்கு வருகை புரிந்த இராஜாஜி, குமாரசாமி ராஜ, பிரகாசம் போன்றோர்களை வரவேற்கும் போது அவர்களுக்கு சால்வை, மலர் மாலை கள் அணிவிப்பதை தவிர்த்து கையால் நூர்க்கப்பட்ட சிட்டம் என்ற நூலை மாலையாக அணிவிப்பதை ஓ.பி.ஆர். அவர்கள் தமது கொள்கையாகவே கொண்டிருந்தார்கள். இப்பள்ளி மட்டும் வடலூரில் இல்லை எனில் நான் ஆசிரியாராக உயர்ந்திருக்கவே முடியாது என்று கூறினார்.


 

 

 

 

   

    

  

               

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி