அதியமான்குப்பம் கொற்றவை

  முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

  உதவிப்பேராசிரியர்

 வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி  

தஞ்சாவூர்

 

                    

                          அதியமான்குப்பம்

      கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் காட்டுக்கூடலூர் அருகே  அதியமான்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்குப் பகுதியில் உள்ள ஊத்துக்குட்டையின் மேற்கு கரையில் பல்லவர் கால சிற்ப அமைப்பை  கொண்ட கொற்றவையின் சிற்பம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இச்சிற்பமானது செவ்வக வடிவ கற்பலகையில் நின்ற நிலையில் புடைப்பு சிற்பமாக காட்சிய ளிக்கிறது. எட்டு கரங்களை கொண்ட கொற்றவை நீண்ட குறுகலான ஜடாம குடம் , கனத்த காதணிகள், ஹாரம், கேயுரம் , காப்பு , மேகலை போன்ற அணி கலன்களுடன் மார்புகச்சை, மற்றும் கீழா டையையும் அணிந்துள்ளார். கொற்ற வையின் முகம் நீள் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தோள் பகுதி அகல மா கவும், இடை சிறுத்தும் காணப்படுகிறது. கொற்றவையின் இடையில் சிறிய கத்தியொன்று செருகப்பட்டுள்ளது. வலது கரங்கள் மேலிருந்து கீழாக சக்கரம், அம்பு, மணி முதலிய வற்றையும். இடது கரங்கள் சங்கு, வில், கத்தி ஆகியவற்றை தங்கியுள்ளன. கொற்றவையின் வலது மற்றும் இடது கீழ்கரங் கள் இரண்டும் கடிஹஸ்த நிலையில் இடுப்பின் மீது வைத்தவாறு உள்ளன.


இச்சிற்பத்தின் கலை நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். அதியமான்குப்பம் மற்றும்  அருகில் உள்ள ஊர்களில் பல்லவர் கால கல்வெட்டுக்ளோ, சிற்பங்களோ இதுவரை கிடைக்கவில்லை. இருப்பி னும் இவ்வூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகையில் பல்லவர்கால கோயிலும், கல்வெட்டுக் களும் உள்ளன. மேலும் பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலப் பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த கொற்றவையின் வழிபாடு நடுநாட்டுப் பகுதியிலும் பரவி இருந்ததை இச்சிற்பம் உணர்த்துகிறது. மேலும் இவ்வூர் வடலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 316 ஆண்டுகள் தமிழ கத்தில் நடைபெற்ற பல்லவர் ஆட்சியை கி.பி. 891 ஆம் ஆண்டு முதலாம் ஆதித்த சோழனால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு