கடலூர் மாவட்டம் - கீழூர் பாளையக்காரர்கள்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
மதுரையை ஆட்சி செய்த
விசுவநாதர் நாயக்கர் தனது நாட்டை நிர்வாக வசதிக்காக எழுபத்திரண்டு பிரிவுகளாக
பிரித்தார். அவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகளை பாளையங்கள் எனப் பெயர்சூட்டினார்.
ஒவ்வொரு பாளையத்திற் கும் ஒரு பாளையத் தலைவரை நியமித்தார். இப்பாளையத்
தலைவர்களுக்கு பாளையத்தின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வரிவசூல் செய்தல், மக்க ளுக்கு பாதுகாப்பு
அளித்தல் , போர் காலங்களில் மன்னருக்கு படையுதவி வழங்குதல் போன்றவை கட்டாயக்
கடமையாக்கப்பட்டது. விசுவநாத நாயக் கரால் தொடங்கப்பட்ட பளையக்காரர்கள் முறையானது
பிறகு தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்களால் சிறுக சிறுக ஒழிக்கப் பட்டது .
பாச்சாரப்பாளையம்
இவ்வூர் பாளையக்காரர்கள் ஆரம்பத்தில் டில்லியை
ஆட்சி செய்த இசுலா மிய மன்னரின் கீழ் போர் வீரர்களாகப் பணிபுரிந்து
வந்தவர்கள். ஒரு கட்டத் தில் டில்லி பாஷாவை எதிர்க முற்பட்டனர் . இதனால் கோப முற்ற
பாஷா பெரும் படையைத் திரட்டி இவர்களை எதிர்க்க முற்பட்டார். பாஷாவால் தாங்கள் தோற்கடிக்கப்பட்டால் அது
பெருத்த அவமனமாகும் எனக்கருதி இரவோடு இரவாக தங்கள் குடிகள் மற்றும் சேனைகளுடன்
புறப்பட்டு தமிழ கத்திற்கு வந்தனர். பிற்பாடு அவர்கள் வடலூருக்கு வடக்கே
உள்ள நிலப் பகுதியில் வந்து நிரந்தரமாகத் தங்கினர். டில்லி பாஷாவின் கீழ் பணி
புரிந் ததன் நினைவாக இவர்கள் தங்கியப் பகுதிக்கு ‘’ பாஷாரப்
பாளையம் ‘’ என பெயரிட்டனர். ஆற்காடு நவாப்பின் கீழ் இப்பகுதி வந்த போது பதினாறுகி ராமங்களில் வரிவசூல்
செய்யும் உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டது. நவாப்பின் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்பு
பதினாறுகிராமங்களின் நிர்வாக மைய மாக பாச்சாரபாளையம் விளங்கியது. இதில் வடலூர்
பகுதியை சார்ந்த ஆபத் தாரணபுரம், ஆண்டிக்குப்பம், செரக்குப்பம் போன்ற ஊர்களும்
அடங்கும்.
பளையக்காரர்கள்
பாளையத்தின் தற்போதைய வாரிசான ஏகநாதசாமிதுரை
என்பவரிடம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியார் கொடுத்த காவல் ஆவணம் ஒன்று உள்ளது. அதன்
மூலம் கடலூர் மாவட்டத்தைப் பற்றிய பல வரலாற்றுத் தகவல்களை அறியமுடிகிறது. இந்த ஆவணத்தில்
கி.பி. 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கடலூர் கவுன்சிலின்
தலைவராக இருந்த ஜார்ஜ் டேட்சன் என்பவர் சின்னமநாயக்கன்பாளையத்தின் தலைவராக இருந்த
ஆண்டியப்ப நயினாரை ஆங்கிலேய கிழக் கிந்தியக் கம்பேனியின் ஜாகீர் கிராமங்களான
சின்னம்ம நாயக்கன் பாளையம் மற்றும் நாயுடுபேட்டை ஆகியவற்றுக்கு அடங்கிய பன்னிரெண்டு
தாலுக்காக் களையும், ஒரு மாநக ராட்சி ஐந்து கம்யூன்ரீக்களையும் ( ஒரு சிறு நிலப் பகுதி )
காவல் காத்து வருதல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது . மேற்குறிப் பிட்டுள்ள மூன்று
வகைப் பிரிவுகளில் உள்ள ஊர்களையும் , நெசவாளர் பேட்டைக ளையும் காத்து வருவதோடு அங்கு வாழ்வோரின்
சொத்துக்களை திருடர்கள் திருடிச் செல்லா வண்ணம் பாதுகாத்து வருதல் வேண்டும் என்று ஆணையிடப்பட் டுள்ளது. மேலும்
கம்பெனிக்குச் சொந்தமான பொருட்கள் ஏதேனும் களவாடப் பட்டால் அதற்கான நஷ்டத்தை பாளையக்காரர்தான் ஈடு
செய்ய வேண்டும் என்ற மிகக் கடுமையான வாசகமும் அவ்வாணையில் உள்ளது. இப்பாதுகாப்பு
பணிக்காக ஆண்டிற்கு 410 பகோடாக்கள் ஊதியமாக ஆண்டி யப்ப நயினா ருக்கு வழங்கப்படுள்ளது.
ஆண்டியப்ப நயினார்
இந்த ஆண்டியப்ப நயினார் பாச்சாராப்பாளையத்து
பாளையக்காரரின் வரிசு களுள் ஒருவர். இவர் சின்னம்ம நாயக்கன் பாளையத்துக்கு
தத்துப் பிள்ளை யாகச் சென்றவர். பிற்காலத்தில் சின்னம்ம நாயக்கன் பாளையத்திற்கு
வாரிசு கள் இல்லாமல் போகவே கடலூர் கவுன்சில் தலைவர் ஜார்ஜ் டேட்சன்
கொடுத்திருந்த காவல் ஆவணம் பிற்பாடு பாச்சாரப்பாளையத்தா ரிடம் வந்து விட்டது.
துர்க்கையம்மன் கோயில் கல்வெட்டு
சந்தவெளிப்பேட்டை துர்க்கையம்மன் கோயிலின் முகமண்டப படிக்கட்டில் 14 வரிகளைக் கொண்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் ‘’ மதியமுது ‘’ ‘’ இந்நாயினாற்கு ‘’ ‘’ஆண்டியப்ப நயினார் ’’ ஆகிய வாசகங்கள் மட்டுமே தெளி வாக உள்ளன. எனவே கி.பி.1772 ஆம் ஆண்டு சின்னம்ம நாயக்கன் பாளையத் தின் தலைவராக இருந்த ஆண்டியப்பநயினார் சந்த வெளிப்பேட்டை சிவன் கோயிலுக்கு மதியவேளை அமுது பூஜைக்காக தானம் வழங்கப்பட்ட செய் தியை இக்கல்வெட்டுக் உறுதிப்படுத்துவதாக உள்ளது. தற்பொழுது குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டிக்குப்பம் இவரது பெயரில் உருவாக்கப்பட்டதாகும்.
ஆனதாண்டவ பாஷா நயினார்
பாச்சாரப்பாளையப் பகுதியின் முதல் பாளையக்காரர்
ஆனதாண்டவ பாஷா நயினார் ஆவர். இவருக்கு இரு மனைவியர். ஒருவருக்குக் குழந்தை இல்லை.
மற்றவருக்கு ஆறு குழந்தைகள். இவ்வாரிசுகளே தொடர்ந்து இப் பாளையத்தை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனதாண்டவ
பாஷா நயினார் மற் றும் அவரது இரு மனைவியர் சிலையை தற்போது கீழூர்
பெரியாண்டவர் கோயிலில் வைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இப்பாளையத்தின் கொடி ரிஷபக் கொடியாகும். பாச்சாரப்
பாளையத்தில் துரையப்ப துரை பாஷா நயினார் என்பவர் 1902 ஆம் ஆண்டு முதல் 1923 வரை
பளையக்காரக இருந் துள்ளார். இவருடைய மகன் முத்துதாண்டவ துரை பாஷா நயினாராவார்
. இவருக்கு இரு மனைவிகள் முதல் மனைவி இராமாமிர்த வல்லி ஆயாலுக்கு இரு குமார்கள்
பெரியமகன் பெரியசாமி துரை பாஷா நயினார் . சிறிய மகன் ஏகநாதசுவாமி பாஷா நயினார்.
இரண்டாவது மனைவி சண்முகவல்லி ஆயா லுக்கு பிறந்தவர் சின்ன குழந்தைசாமி துரை பாஷா
நயினார். கி.பி. 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிக்கிந்தியக் கம்பெனி கொடுத்த காவல்
ஆவணம் தற் போது பெரியசாமிதுரை பாஷா நயினாரிடம் உள்ளது. இத்தகவல்கள்
அனைத் தையும் நேர்க்காணளின் போது தந்தவர் ஏகநாத சாமிதுரை பாஷா
நயினார் ஆவார்.
மேலும் கீழூரை அடுத்துள்ள ஏரிக்கு ‘’ பெரியதுரை
ஏரி ‘’ என்று பெயர். இது 200 ஏக்கர்
பரப்பளவில் உள்ளது. இவ்வேரியும் அதைசார்ந்த விளைநிலங்க ளும் இப்பளையக்கரர்களால் மக்களுக்கு தனமாக
வழங்கப்பட்ட வையாகும். இதுதவிர கொல்லன் ஏரி , தட்டான் ஏரி மற்றும் வடலூருக்கு அருகே உள்ள ஐய்யன்ஏரி போன்ற
ஏரிகளும் அதன் பாசன நிலங்களும் அப்பகுதி மக்களுக்கு தனமாக விடப்பட்வைகளாகும்.
ஆனால் சோழன் ஏரி, ஆயாகுளம் ஆகியவற் றின் கீழ் உள்ள பாய்ச்சல் நிலங்கள் அனைத்தும் பாளையக்காரார்களு டையதாகும். கி.பி. 1902 பிப்ரவரி
திங்கள் 12 ஆம் தேதிக்குச் சரியான பிலவ வருடம் ( பிலவங்க ) மாசி மாதம் ஒன்றாம்
தேதி எழுதப்பட்டுள்ள பாளையத் தைச் சார்ந்த கடன் பைசல் ஆவணத்தில். கீழூர் பாளையக்காரர்
துரைசாமி பாஷா நயினாரின் மனைவி முத்தாயாள் அரியலூரை சார்ந்த லேட் ஜமீன்தார்
குமாரர் விஜய கோவிந்த மழவராய நயினார் அவர்களின் குமாரத்தி என்ற தகவலை
அவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்ன குழந்தைசாமி துரை பாஷா நயினாரின் அத்தை பார்வதி ஆயால்
சிதம்பரம் பிச்சாவரம் ஜமீனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன்
வாயிலாக பாச்சரப்பாளை யத்தவர்கள் தங்களது திருமண உறவுகளை அரியலூர் மழவராயர்கள்
மற்றும் பிச்சாவரம் ஜாமீன்களுடன் வைத்துக் கொண்டனர் என்பதை அறியமுடிகிறது.
கீழூருக்கு வருதல்
பாச்சாரபாளையக்காரரிடம் சிறிய குதிரைப்படையொன்று
இருந்தது. அக்குதி ரைகளை பரமரிப்பதாற்காக முஸ்லீம் இனத்தவர்களை பணியமர்த்தி
இருந் தார்கள். இவர்களுக்குகென்று தனியாக நிலங்கள் தனமாக வழங்கப்பட்டு
இருந்தது. தற்போது இம்முஸ்லீம் இனத்தவர்கள் வெங்கடாம் பேட்டையில் உள்ளனர். ஒருமுறை
வடக்குத்து பாளையக்காரர் தமது இல்லா திருமண விழாவிற்காக பாச்சாரப்பாளையத்தார்களிடம்
குதிரைகளைக் கேட்டுள்ளார். அதற்கு பாச்சாரப்பாளையக்காரர் தமது குதிரைகளுக்கு
ஏதேனும் நேர்ந்துவிட் டால் அதற்கு இழப்பிடு தரவேண்டும் எனக் கூறினார். அந்த
உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்ட வடக்குத்து பாளையக்காரர் பாச்சாராப் பாளையக்காரரிடமி ருந்து குதிரைகளைப்
பெற்றுள்ளார். திருமணம் நடைபெற்ற இரவு மர்மமான முறையில் குதிரைகள் அனைத்தும்
இறந்து கிடந்தன. இந்த இழப்பிற்கு காரணம்
வடக்குத்து பாளையக்காரரின் அஜாகரத்தையான பாதுகாப்புதான் என்று கூறி ஒப்பந்தப்படி
குதிரைகளின் இழப்பிற்கு நஷ்டயிடு
கேட்டுள்ளார். எனவே தமது பாளையத்திற்கு உட்பட்ட கீழ் அதாவது கிழக்குப் பகுதியில்
இருந்த காட்டுப்பகுதி முழுவதையும் பாச்சாரப்பாளையத்தாற்கு நஷ்டயிடாக கொடுத்தார் . அக்காட்டுப்பகுதி
முழுவதையும் அழித்து நிலங்களாக்கி அப்பகுதியில் புதிய மக்கள் குடியேற்றங்களை
பாச்சாராப் பாளையக்காரர் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தமது அரண்மனையையும்
அந்தப்பகுதியில் புதியதாக அமைத்துக் கொண்டார். வடக்குத்து பாளையத்தின் கீழக்கு
பகுதியில் அமைந்திருந்த இப்பகுதிக்கு கீழூர் என பெயரிட்டுக் கொண்டனர். இவ்வாறு கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்று
விளங்கிய பாச்சார்ப்பா ளையம் பிறகு ஏற்பட்ட நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களால் வீழ்ச்சி
கண்டது. தற்போதும் பாளைய வாரிசுகள் கீழுரில் வாழ்ந்து வருகின்றனர்.
Dear Sir. I would like to get in touch with you! Kindly share your contact email.
ReplyDelete