வரலாற்றில் போர்வாட்கள்

 

                  வரலாற்றில் போர்வாட்கள்

 






 பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர்

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

 

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – (புறம்: 312)

 

எனப் புறநானூற்றில் கூறியுள்ளார்.

 

-- இதில் வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே என்று கொல்லர்களை சிறப்பிக்கிறார் .பிறகு அங்கே வடிக்கப்பட்ட வாளைக்கொண்டு அதாவது ஒளிறு வாள் கொண்டு ,யானையே  வெல்லும் காளையர் வீரம் பற்றி சிறப்பிக்கிறார் .

சமுதாயத்தில் வேலும், வாளும் செய்யும் கொல்லர் இன்றும் அதேபெயரில்கொல்லர் என்று  2000 ஆண்டுகள் கழித்தும் வழங்குவது தமிழின் சிறப்பு .

வேளாளர்க்கு இணையாக அவர்களை கம்மாளர் என்று அழைத்திருக்கிறார்கள் .

 

தென்னிந்தியாவில் செய்யப்பட்ட போர்வாட்களுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு இருந்தது எகிப்தில் பிரமிடுகள் கட்டும் பொது அங்கு பாறைகளை வடிக்க தென்னிந்திய உளி முதலிய கருவிகள் பயன்பட்டதாகக்கூறப்படுகிறது .

 

இங்கிருந்து போன போர்வாட்களுக்கு ஒருதனி சிறப்பு அப்போது இருந்திருக்கிறது .தொல்தமிழகத்தின் வெளி நாடுகளுக்கான ஏற்றுமதியில் போர்வாட்களுக்கு சிறப்பான இடம் இருந்திருக்கக்கூடும் .

 

ஒவ்வரு  குடியிருப்பு கிராமங்களிலும் பலவித தொழில் நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர் .அவர்களில் கொல்லர்களுக்கு தனி இடம் இருந்தது .அவர்களின் முக்கியபணியாக மன்னர்களின் படைகளுக்குவேண்டிய போர்க் கருவிகள் தொடர்ந்துசெய்தல் முக்கியப்பொறுப்பாக இருந்திருக்கிறது .

 

அதேசமயம் அத்தகைய கொல்லர்களுக்கு வேண்டிய எககு இரும்பு தனியே அடர்ந்த காடுகளின் நடுவே இரும்பு தாதுக்களும் ,அவைகளை உருக்கத்தேவையான எரிபொருளாக மரங்களும் கிடைக்கும் இடங்களில் அமைந்திருந்தன .   

 

அவர்கள் இத்தகையைரும்புத்தாதுக்களை உருக்கவும் நுண்ணிய தரம் வாய்ந்த இரும்பாக மாற்ற சில மூலிகைகளையும் அப்போது பயன்படுத்திருக்கின்றனர் .

 

அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் என்னிடமும் இருந்தது .19 நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்த ஒருஆய்வு கட்டுரையில் அந்த மூலிகை ஆவாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இதை பயன்படுத்திப்பார்க்கவேண்டும் 

 

.அத்தகைய உயர்வெப்பம் கிடைக்க சில தனி வகை மரங்களும் அறிந்திருக்கக்கூடும் .இத்தகைய  தொழில் நுட்பங்கள் இப்போது மறைந்துவிட்டது .

 

நம்மை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இங்கிருக்கும் தொழில் நுட்பம் ,தாதுஇவைகளை தாங்கள் மட்டுமே பயன்படுத்தி இலாபம் அடைய அவர்களும் இத்தகைய தொழில் நுட்பங்களை அழிக்க துணைபோயினர் .

 

தொழில்புரட்சி காரணமாக ஐரோப்பியாவிலும் பல்வேறு தொழில்கள் பெருகின .அவர்கள் அப்போது நிலக்கரி பயன்படுத்த அறிந்திருந்தனர் .இந்தியர்களுக்கு அப்போது நிலக்கரி என்பது அறிந்திருக்கவில்லை .

 

இந்தியாவில் உருக்குஇரும்புசெய்தால் 40% செலவு மிச்சம் ஆகும் என்று இந்தியாவில் இரும்புதயாரிக்க எண்ணினர் அதற்க்கு ஆசியாவிலேயே முதலில் அமையவிருந்த இரும்பு தாதுவை உருக்கு ஆலை அமைந்த இடம் தமிழ் நாட்டில் இருந்த பரங்கிப்பேட்டைதான் .இதில் இருந்தே இரும்பு உருவாக்கத்தில்  தமிழ் நாடு பெற்றிருந்த முக்கியத்தை உணரலாம் .

 

கடலூரிலிருந்து 35கி.மீ. தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை முன்பு "போர்டோ நோவோ' என்று அழைக்கப்பட்டது! இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து அங்கே ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மன்னருக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும்  இடையே போர் நடந்தது. 

 

பல நதிகள் கடலில் சங்கமிக்கும் கழிமுகப் பகுதியான இம்மாவட்டத்தினை தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய நதிகள் கடந்து செல்கின்றன.

 

இவ்வூர் முகமதியர் காலத்தில் மஹ்மூதுபந்தர், எனவும் போர்ச்சுகீசியர், காலத்தில் போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் நாயக்கர் காலத்தில் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்பட்டிருக்கிறது 

 

வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.

 

1830 இல் ஆசியாவின் முதல் பெரிய அளவிலான இரும்பு ஊருக்கு ஆலை  பரங்கிப்பேட்டையில் கிழக்கிந்திய நிறுவனத்தில் முதலில் வேலை செய்த திரு ஹீத்( JOSHUA MARSHALL HEATH )என்பவரால் வெள்ளாறு கடலில் சேரும் முகத்துவாரத்தில் அருகே ஆரபிக்கப்பட்டது .ஆரம்பத்தில் POTONOVO IRON WORKS  எனும் பெயரில் இரும்பு  ஆலை நடத்தப்பட்டது. பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கிழக்கிந்திய கம்பனியில் இருந்து வாங்கிய கடனால் The Indian Iron and Steel Company என்று பெயர் மாற்றம் பெற்றது .

 

பின்பு தொடர்ந்து நீடித்த நெருக்கடியால் ழக்கிந்திய கம்பனியால் எடுக்கப்பட்டு  The East India Iron Company’என்று பெயர் மாற்றம் பெற்று சில ஆண்டுகள் கழித்து 1874 இல் நிரந்தரமாக மூடப்பட்டது .

 

ஆனால் இதில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்புகள் அதன் தரத்தால் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது .இன்றும் எழும்ப ர் ரயில் நிலையத்தில் அதன் இரும்புத் தூண்களில்  Made in Porto Novo'. என்ற பொறிப்பைக்காணலாம் என்று கூறப்படுகிறது .

 

மேலும் பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR  மற்றும்   STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில்  பயன் படுத்தப்பட்டது- மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில்  பயன் படுத்தப்பட்டது என்று S.B. JOSHI  எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (pp97)தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

 

இத்தகைய உயர்தர  இரும்பு உருக்கு சேலத்திற்கு அருகில் இருக்கும் கஞ்சமலை எனும் மலையில் சுற்றி உதிரியாகக்ககுவிந்திருந்த தாதுக்களில் இருந்து பெறப்பட்டது .

 

கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை சித்தர்கள் அதிகம் 

வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. . மலையின் உச்சியில் மேல்சித்தர் கோயில், கரியபெருமாள் கோயில் ஆகியன உள்ளன. சித்தர் கோயிலின் அருகில் ஒரு நீரோடை ஓடுகிறது. இந்த மலையில் காளங்கிநாதர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்பதற்கான குறிப்பு திருமூலர் திருமந்திரத்தில் உள்ளது. மலையின் தென்பகுதியில் சடையாண்டி ஊற்று உள்ளது. மேல்சித்தர் கோயில் அருகில் ஒரு ஊற்றும் நீரோடையும் நல்லணம்பட்டி அடிவாரத்தில் உள்ளது.  இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது. இந்த மலையில் இரும்புத்தாது அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இம்மலையில் மூன்று அடுக்குகளாக இரும்புத்தாதுகள் உள்ளன.இவை நல்ல தரம் வாய்ந்தவை.

 

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் நான் கஞ்சமலை சென்று அங்கே இருக்கும் நீர்நிலையில் குளித்து சித்தரை வழிபட்டதுண்டு ..

நான் சில நாட்களாக கஞ்சமலையைப் பற்றியும் சித்தர் காலாங்கி நாதர் பற்றியும் படித்து வந்தபோது ,சென்னை மறைமலை நகரில் வசிக்கும் திரு சரவணன் என்பவரும் எனோ சித்தர் காலாங்கி நாதர்க்குறித்து கஞ்சமலைக்குறித்து சில ஐயங்களை எழுப்பினார் .அப்போதுதான் இவைகளைக்குறித்து சிந்தித்திருக்கும் போது இவரும் காலாங்கி நாதர் பற்றி கேட்டது எனக்கு வியப்பாகவே இருந்தது .சித்தர்களின் ஆளுமை உலகில் பரவும் காலம் விரைவில் வரும் .

 

கஞ்ச மலையைச் சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப் பட்டிருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாகத் தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை.  

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில்  வசதி  இல்லை. சுமார் 

இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை சலேத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு எப்படிக் கொண்டு சென்றிருப்பார்கள் ?

 

இப்போது வியப்பாக இருக்கலாம் ஆனால் அப்போது . காவேரி-கொள்ளிடம்- வெள்ளாறு  வழியே  பரிசல்களில் கொண்டு  சென்றிருக்கிறார்கள். அப்போது வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது அப்போது கர்நாடகாவில்  கே.ஆர். சாகர், கபினி அணை , இங்கே மேட்டூர் எதுவும் இல்லை   ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முந்நூறு கி.மீ. கஞ்சமலை இரும்புத் தாது.  காவிரியில் மிதந்து வந்திருக்கிறது, இது ஆங்கிலேயருக்கு சாத்தியம் ஆகிஇருந்திருக்கிறது .

 

சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு  சுமார் 75 மில்லியன் டன்கள். மலையைச் சுற்றியும் கீழே விழுந்த தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. 

1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து  ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து 

ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல;இரும்பு  உருட்டாலை. இங்கே எந்தக்  கனிமமும் உருக்கப்படுவதில்லை. மாறாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு உருட்டி அனுப்பப் படுகின்றன.

 

(இந்தத்தகவல்களைப்பற்றி மறைந்து விட்ட நண்பர் சிங்கநெஞ்சம் சம்பந்தம்.அவரது பிளாகில் எழுதி இருக்கிறார் ,இவைகளைக்காணும் போது  அவரின் நினைவுகள் என்னை கனியவைக்கிறது )

 

இவைகளை அறியும் போது என்ன வளம்  இல்லை இந்த திருநாட்டில் ! என்றுதான் ஏங்கத்தோன்றுகிறது நம்மிடம் கிராமங்களில் இருந்த கொல்லர்கள் இரும்பை பயன்படுத்தி வேளாண்மை ,மற்றும் போர்கருவிகளான வேல் ,வாள் இவைகளை செய்து குவித்தனர்  ,  அடர்ந்த காடுகளில் உள்ளே  ,இரும்புத்தாதுக்கள் கிடைக்கும் ,அவைகளை உருக்க எரிபொருளாக தனித்துவமான மரங்கள் மூலிகைகள் அங்கே கிடைக்கும் அத்தனைப்பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே சிறிய அளவில் இரும்பு உருக்கி தொழில் செய்தவர்கள் உயர்தரஇரும்பைத்தந்தவர்கள் எப்படி மறைந்து போனார்கள் ,?

எப்படி அழித்தொழிக்கப்பட்டார்கள் என்ற சோக வரலாற்றை இன்னமும் சொல்ல நினைக்கிறேன் .

 

இது ஒரு புறம் என்றால் நமது பண்டைய சித்த மருத்துவர்கள் இரும்பை உண்ணும் மருந்தாகச் செய்து அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் .

உடம்பு இரும்பு போல் இருக்கிறது என்றுகூறுவார்கள் 

,நமது வைத்தியர்கள் இரும்பையே எளியமுறையில் உண்ணத்தக்க மருந்தாக மாற்றி இருந்திருக்கிறார்கள் .

 

அயபற்பம் எத்தகைய நோயையும் தீர்க்கும் என்று அறியப்பட்டுள்ளது .இன்னம் அயசெண்தூரம் ,அய வெள்ளை என எத்தனையோ அற்புத மருந்துகள் இன்னமும் கிடைக்கிறது .இவைகளின் செய்முறைகளில் எத்தகைய அதிக வெப்பம் தேவைப்படாமல் ,சில எளிய மூலிகைகளைப்பயப்படுத்தியே இரும்பின் தன்மையை மாற்றி இருந்திருக்கிறார்கள் 

 

.இத்தகைய மருத்துவ தயாரிப்பில் விழுதி இல்லை , பொற்றிலை கையான் ,புளிப்பு மாதுளை இன்னமும் நிறைய மூலிகை கள் பயன்படுத்தி இத்தகைய அற்புதங்களை சாதித்திருக்கிறார்கள் .பெரிய அளவில் இரும்பை உருக்க ஆவாரம் பயன்பட்டதை முன்பே சொல்லி இருக்கிறேன் .இவைகளை இன்னமும் நாம் மறைத்து வைத்திருந்து பயனில்லை .

இத்தகைய தொழில் நுட்பம் நம்மிடம் இருந்து பறிபோவதற்கு முன் அல்லது மறக்கடிக்கப்படுவதற்குமுன் , இவைகளைப்பற்றி எழுதி அவைகள் நம்முடையவை என்று உலகிற்கு அறிவிக்கும் கடமை தமிழருக்கு உண்டு .இன்னமும் சொல்ல நிறைய இருக்கிறது நன்றி !#அண்ணாமலைசுகுமாரன் 24/4/2020

படம் பரங்கிப்பேட்டையில் 1830 செயல்பட்ட ஆசியாவின் முதல் இரும்பு உருக்காலை

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு