சோழர் காலத்தில் வடலூர்

  முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

  உதவிப்பேராசிரியர்

 வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்


                                 


                      

                     சோழர் காலத்தில் வடலூர் 

         தமிழகத்தில் பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு வலிமை பெற்ற அரசாக சோழப் பேரரசு வளர்ச்சியுற்றது. இதற்கு அடித்தளமிட்ட பெருமை விஜயா லய சோழனையே சாரும். கி.பி. 880 ஆம் ஆண்டு தொடங்கிய சோழப் பேரரசு முதலாம் இராஜராஜசோழனது காலத்தில் சிறப்புற்று விளங்கியது. ஆனால் கி.பி. 1279 ஆம் ஆண்டு பிற்கால பல்லவர் மற்றும் பாண்டியர்களின் எழுச்சி யால் வீழ்ச்சியுற்றது. சுமார் 399 ஆண்டுகள் நடைபெற்ற சோழர்களின் ஆட்சி யில் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியினை எட்டியது என்பது மறுப்பதற்கில்லை.

சோழர்களின் ஆட்சியில் கடலூர் மாவட்டம்

      முதலாம் பராந்தகனின் ஆட்சிகாலத்தில் கடலூர் மாவட்டம் சோழப் பேரரசின் கீழ் முழுமையாக வந்துவிட்டது எனலாம். இவனது கல்வெட்டு இம் மாவட்டத்தில் கிடைக்கப்பட்டுள்ள சோழர் கால கல்வெட்டுக்களில் காலத் தால் மிகப்பழமையனதும் கூட. குறிப்பாக முதலாம் பராந்தக சோழன் தமது 18 வது ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 925 ஆம் ஆண்டு திருப்பாதிரிப்புலியூர் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் இதனை உறுதிப்படுத் தலாம். மேலும் வடலூரில் இருந்து தெற்கே சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ள எறும்பூரில் முதலாம் பராந்தகன் தமது 28 ஆம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 935 – ஆம் ஆண்டு கடம்பவனேஷ்வரர் என்ற சிவன் கோயிலை கட்டு வித்து ஏராளமான தானங்களை வழங்கியுள்ளான். 

 சோழர்களின் ஆட்சியில் வடலூர்

    பிற்கால சோழர்களின் கீழ் வடலூர் இருந்த தற்கான தொல்லியல் சான் றுகள் அதிகம் கிடைத்துள்ளன. குறிப்பாக வடலூர் கோட்டைக்கரை பகுதியில் உள்ள இராஜவன்னியன் என்பவரது வீட்டின் மேற்குப் பகுதியில் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 6 x 25 x 25 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் மற்றும் 10 செ.மீ அகலம், 19 செ.மீ நீளம் கொண்ட கூரை ஓடு கள் கிடைத்துள்ளன. இக் கூரை ஓடுகளை ஆய்வு செய்த புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் க. இராஜன் அவர்கள் இவ்வோடுகள் கி. பி. 9 ஆம் நூற்றாண்டை சார்ந்தது எனக் குறிப் பிட்டுள்ளார். மேலும் இப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள செங்கற்கள் மற்றும் மட்கல ஓடுகள் கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். 

     சோழ மன்னர்கள் தாம் வென்ற பெரும் நிலப்பரப்பை  நிர்வாக நலனுக் காக மண்டலங்களாகவும், மண்டலங்களை வளநாடுகளாகவும், வளநாடுகளை நாடுகளாகவும், நாடுகளை கூற்றங்களாகவும் பிரித்து நிர்வகித்தனர். இப்பிரி வுகள் இன்றைய மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற நிர்வாக பிரி வுக்கு நிகரானது. வடலூர் சோழர் காலத்தில் சோழமண்டலம், இராஜராஜ வள நாட்டு, மேற்காநாட்டில் அமைந்திருந்தது.  

 

சிவன் கோயில்

   வடலூர் ஐய்யன் ஏரியில் இருந்து தென் மேற்குப் பகுதியில் காளிக் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவலிங்கமும், துர்க்கை சிலை ஒன்றும் உள்ளன.

துர்க்கை சிலை

     இச்சிலையானது ஐந்தடி உயரமும் , மூன்றடி அகலமும் கொண்ட பல கைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் தலைப் பகுதி ஜடாமகுடத்துடன் மகரப்பூரிமத்தால் அலங்கரிக்கப்பட்டும், நெற்றியில் கல்மணிகளால் அழகுப்படுத்தப்பட்ட நெற்றிச் சுட்டியும், காதில் கனத்த குண்ட லம், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, ஹாரம் போன்ற அணிகலன்களும், அனைத்து கைகளிலும் காப்பும், மார்பு கச்சையின் கீழ் வயிற்றுப் பகுதியில் வீரசங்கிலியும் காணப்படுகின்றன. வலக்கைகளில் மேலிருந்து கீழாக சக்கரம் ,வாள், கபாலம் ஆகியவைகளைத் தங்கியும் (ஒரு கை உடைந்துள்ளது ) இடது கைகளில் சங்கு, வில் கேடையமும் மற்றொரு கையானது தர்ஜனிக ஹஸ்தத்தில் உள்ளது. சிலையின் முதுகுப்புறத்தில் அம்புத் தூரிகை காணப் படுகிறது. இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக்கச்சையனது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. துர்க்கையானவள் சாந்த நிலையில் எருமைத்தலை மீது நின்றவாறு காட்சியளிக்கிறாள். மேலும் துர்க்கையின் முகமானது சற்று சதைப்பற்றுடன் நீள்வட்டவடிவில் வடிக்கப்பட்டுள்ளதால். அதில் பல்லவர் கலைப் பாணியின் தாக்கம் காணப்பட்டாலும், உடல் அமைப்பில் சோழர் கலைப்பாணியின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுவதால் இச் சிலையானது கி.பி 9 - 10 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகக் கொள்ளலாம். மேலும் துர்க்கை சிலையானது இங்கிருந்த சிவன் கோயிலின் வடக்கு கோஷ்டத்தில் இருந்தி ருக்க வேண்டும்.

சிவலிங்கம்

     துர்க்கை சிலையின் அருகே சுமார் 12 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது. பிரம்ம குறியிடு கிழக்கு நோக்கியும் கோமுகை வடக்கு முக மாக உள்ளதால் இப்பகுதியில் கிழக்கு நோக்கிய சிவன் கோயிலொன்று இருந் திருக்கும் என்பதை அறியமுடிகிறது. ஆவுடையார் அலங்காரம் இன்றி எளிய தோற்றத்தில் வடிக்கப்பட்டுள்ளது. கோமுகையின் முனைப் பகுதியானது உடைக்கப்பட்டுள்ளது.

கட்டடப் பகுதிகள்

     சிவலிங்கம் அமைந்துள்ள இடத்தில் இருந்து கிழக்கே 50 அடி தூரத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்டப்பள்ளத்தில் மூன்றடி ஆழத்தில் கட்டட சுவர் பகுதி ஒன்று வெளிப்பட்டிருந்தது. இச்சுவர் வடக்கு தெற்காக செல்கிறது. 75 செ.மீ. அகலம் கொண்ட இச்சுவர் சுண்ணாம்புக் காரை கொண்டு கட்டப்பட் டதாகும். மேலும் கட்டடப் பகுதியினை ஒட்டியபடி தரைத்தளப் பகுதி ஒன்று மேற்கு நோக்கி செல்கிறது. இக்கட்டடப் பகுதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள செங் கற்கள் 6 x 18 x 20 செ. மீ அளவுகளை கொண்டவை. மேலும் இக்கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள மேட்டுப் பகுதியில் உடைந்த ’’ ட ‘’ வடிவ கூரை ஓடுகள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், உடைந்த செங்கல் துண்டுகள் கிடைத் துள்ளன. இக் கோயிலை மையமாக வைத்து நடத்கப்பட்டக் கள ஆய்வில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கோயிலுடன் கூடிய மக்கள் வாழ்விடப் பகுதியொன்று இருந்துதுள்ளதை அறியமுடிகிறது. எனவே வடலூர் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள மேற்கண்ட தொல்பொருட்கள் அனைத்தும் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரையிலானக் காலக்கட்டத் தைச் சார்ந்தவைகளாக இருப்பதால் வடலூர் சோழர்கள் காலத்தில் புகழ் பெற்ற ஊராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் வடலூர் பகுதியில் சோழர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டுக்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. மாறாக வடலூர் அருகே உள்ள சந்தவேளிப்பேட்டை, கீழுர் கிராமத்தில் சோழர்கால கல்வெட்டுக்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  






Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி