பரங்கிப்பேட்டையின் சுருக்க வரலாறு

 முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர் 

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்    

 

             



   கிருஷ்ணப்பர் காலத்தில் டச்சுக்காரர்களுக்கு கடலூர் தேவனாம்பட்டினத் தில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன் விளைவாக கி.பி.1623 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் கடலூரில் கோட்டை ஒன்றை கட்டி அதையே தமது வர்த்தக தலைமையிடமாக உருவாக்கினர். இதற்கிடையே இப்பகுதியில் வாணிபம் செய்து வந்த போர்ச்சுகீசியர்கள் விஜயநகரப்பேரரசர் முதலாம் வேங்கடனிடம் புகார் செய்தனர். பேரரசர் உடனே ஒரு தூதுவர் மூலம் டச்சுக்காரர்களை அங்கிருந்து விரட்டுமாறு செஞ்சி மன்னருக்கு ஆணையிட்டார். இந்த ஆணையை கிருஷ்ணப்பர் மதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற போர்த்துகீசியர்கள் பேரரசரை நேரில் சந்தித்துப் புதிய உத்தர வைப் பெற்று செஞ்சி மன்னரிடம் வழங்கினர். இவ்வுத்தரவை நடைமுறை படுத்துவதில் காலதாமதம் செய்தார். இதனை கேள்வியுற்ற விஜயநகர மன்னர் உடனடியாக டச்சுகாரர்களை கடலூரில் இருந்து விரட்ட உத்தர விட்டார். அதன்பிறகு கடலூர் போர்த்துகீசியர்களின் வணிகத்தளமாக மாறி யது.

பரங்கிப்பேட்டை உருவாக்கம்

  இரண்டாம் கிருஷ்ணப்பர் வெள்ளாற்றின் கழிமுகப்பகுதியில் கிருஷ்ணாப்பட் டினம் என்ற கடற்கரை நகரை தமது பெயரில் நிறுவினார். அங்கு புதிய மக் கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினார். அந்நகரே இன்று பரங்கிப்பேட்டை என அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் விவசாயம் பெருக புதிய நீர் நிலை களையும் மக்களுக்கு ஏற்படுத்திதந்தார். இரண்டாம் குலோத்துங்க சோழனால் ( கி.பி 1133 – 1150 )  கடலில் வீசப்பட்ட சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளைப் போன்ற சிலையை வடித்து அதை மீண்டும் அக்கோயிலில் பிரதிஷ்டை செய் தார். தில்லை தீட்சதர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நிறுவப் பட சிலைதான் தற்போதுள்ள கோவிந்தராஜர் சிலையாகும். தாம் உருவாக்கிய கிருஷ்ணாப்பட்டினத்தில் கி.பி.1623 ஆம் ஆண்டு முதல் டச்சுகாரர்கள் வாணி பம் செய்து கொள்வதற்கான அனுமதி யையும் வழங்கினார்.

            

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு