பஞ்சலோக சிலைகள்

                                        முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்           


பஞ்சலோக சிலைகள்

பஞ்சலோக சிலைகள் உருவாக்கத்தில் பொன் [Gold], வெள்ளி [Silver], செம்பு [Copper], நாகம் [Zinc], ஈயம் [Lead] போன்ற ஐந்து உலோகங்களை சேர்கிறார்கள். இதில் பொன்னும் வெள் ளியும் பொதுவில் பயனர்களின் தேவைக்கு மட்டுமே சேர்க்கிறார்கள். அதுவல்லாது செம்பு மற்றும் நாகமும் ஈயமும் இணைந்த கலப்பு உலோகமாக வெண்கல சிலை உருவாக்கத் தில் மேற்கொள்கின்றனர். இதில் தேவைக்கேற்ப தரம் நிர்ணயம் செய்யப்படு கிறது. செம்பு தான் வெண்கல சிற்ப உருவாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. செம்பின் பங்கு அதிக மாக சேர்க்கப்படும் போது அதன் நிறம் மற்றும் சிற்பத்தின் திடமும் தன்மையும் மாறு கிறது.

 

சோழர்கால சாமிமலை சிற்ப உருவாக்கத்தில் இந்த பஞ்சலோகங்களும் பஞ்சபூத தத்து வங்களுடன் இருப்பதாக ஸ்தபதிகள் கூறுகிறார். உலோகங்கள் பற்றிய தெளிவான அறிவே அதனை சரியான பதத்தில் கலப்பு செய்யும் அறிவியல் உண்மையையும் தரு வதாக சொல்கிறார். அவ்வாறு செய்யப்படும் சிற்பங்கள் உயிரோட்டத்துடன் இருப்ப தற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்கிறார்.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு