பெருங்குடி மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரி விவரம்
பெருங்குடி மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரி விவரம்
தஞ்சாவூர் வடகுரங்காடுதுறை என்ற இடத்தில் கிடைத்த
கல்வெட்டில்
வீரபாண்டித்
தேவரின் கல்வெட்டு (கிபி.1263) ஒன்றில் வேளாண் மற்றும்
வணிகப்
பெருங்குடி மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரி
விவரம்
போகம் ஒன்றுக்கு ஏர் ஒன்றுக்கு = ஒரு தூணி நெல் ( 4 மரக்கால் அல்லது
8 படி)
ஆள் ஒன்றுக்கு = ஒரு பதக்கு நெல் ( 2 ம்ரக்கால் அல்லது 4 படி)
ஏவலாளி ஆள் ஒன்றுக்கு = ஒரு குறுணி நெல் ( ஒரு
மரக்கால் அல்லது 2 படி )
வணிகப் பெருங்குடி மக்களிடம் வசூலிக்கப்பட்ட
வரி விவரம் :
மடிப்பன - புடவை ஒன்றுக்கு = அரைப்பணம்
நிறுப்பன = நிறை ஒன்றுக்கு = ஒரு காசு
அளப்பன = மிளகுப் பொதி / பாக்குப்
பொதி ஒன்றுக்கு = கால் பணம்
உரைப்பன = பொன்
ஒன்றுக்கு = கால் பணம்
தூக்கிச் செல்வன = அரிசிப் பொதி = இரண்டு காசு
நெல் பொதி / தலைச் சுமை ஒன்றுக்கு = ஒரு காசு
Comments
Post a Comment