கடலூர் மாவட்டத்தில் கூளப்பன் கல்வெட்டு
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
வெங்கடாம்பேட்டையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பேய்க்காநத்தம் என்ற ஊரில் செல்லியம்மன் என்ற பிடாரி கோயில் ஒன்று உள் ளது. இக்கோயிலின் முன்புறம் இரண்டடி அகலம் , நான்கு அடி உயரம், ஒரு அடி கனம் கொண்ட கற்பலகையில் பதிமூன்று வரிகளை கொண்ட கல் வெட்டு ஒன்று உள்ளது. அதில் கூளப்பன் என்பவர் பேய்க் காநத் தம் என்ற ஊரை பிடாரி அம்மனுக்கு அதாவது செல்லியம் மனுக்கு தானமாக வழங்கியுள்ளதை கூறுகிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 17 ஆம் நூற் றாண்டாகும். மேலும் இந்த கூளப்பன் பெயரில் வீரநாராயண ஏரியின் கரை யில் கூளப்பன் சாவடி என்ற ஊர் உள்ளது. மன்னர்களுக்கு நிகராக தமது பெயரில் புதிய ஊரை உருவாக்கியதையும், கோயில்களுக்கு தானம் வழங் கப்பட்டத் தையும் பார்க்கும்போது இந்த கூளப்பன் செஞ்சிநாயக்கர்களின் இறுதி காலத்தில் இப் பகுதியின் நிர்வாக அதிகாரியாக இருந்திருக்க வேண் டும். பிறகு நாயக்கர் அட்சி வீழ்ச்சி அடைந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இவன் இப்பகு தியின் தலைவனாக உயர்ந்திருக்க வேண்டும். கூளப்பனின் நிர்வாகத் தின் கீழ் வடலூர் பகுதியும் இருந்திருக்க வாய்ப் புள்ளது.
Comments
Post a Comment