வடலூரில் இரும்புக் காலப் பண்பாடு

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

 உதவிப்பேராசிரியர்

 வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி  

தஞ்சாவூர்

                   

                 

                      வடலூரில் இரும்புக் காலப் பண்பாடு

       தமிழகத்தில் நிலவிய இரும்புக் கால பண்பாட்டின் தாக்கம் மற்றும் அதன் தடையங்கள் வடலூர் பகுதியிலும் கிடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடலூர் செல்லியம்மன்   கோயில் தெருவில் இராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு செங்கல் சூலை அமைப்ப தற்காக நிலத்தை தோண்டும் பொழுது சுமார் மூன்றடி ஆழத்தில் முதுமக்கள் தாழி வெளிப்பட்டது. சிதைந்த அத்தாழியில் இருந்து கருப்பு – சிவப்பு நிற மட் கலன்கள், சிதைந்த இரும்புத் துண்டுகள், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகள், மனித எலும்பு துண்டுகளும் கிடைத்தன. மேலும் வடலூர் அருகே உள்ள பொன்னங்குப்பம், சந்தவெளிப்பேட்டை, ஆபத்தாரண புரம், பார்வதிபுரம் போன்ற ஊர்களில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி களில் நடைபெற்ற ஆய்வின் மூலம் கி.மு. 600 – ஆண்டுகளுக்கு முன்பா கவே இரும்பு கால பண்பாட்டைச் சார்ந்த மக்கள் வடலூர் பகுதியில் வாழ்ந்துள்ள னர் என்பதை அறியமுடிகிறது.

 இரும்புக் காலத்தைச் சார்ந்த பானை ஓடுகள்

     கடந்த 05 . 07 . 2017 அன்று அய்யன் ஏரியில் அமைந்துள்ள ஊத்துக் குட் டையின் தென் கிழக்குப் பகுதியில் சுமார் ஒரு மீட்டர் ஆழ அளவில் வண் டல் மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் ஏராளமான கருப்பு – சிவப்பு நிற பானை யோடுகள் கிடைக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் இருந்து செங்காவி பூசப் பட்ட சிவப்பு நிற பானையோடுகள், வழுவழுப்பான கருப்பு நிற பானையோடு கள், பளபளப்பான சிவப்பு நிற பானையோடுகள் மற்றும் செங்கற் துண்டுகள் போன்றவை சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆய்வு செய்ததில் மூன்று கருப்பு – சிவப்பு நிற மூடிகளின் உடைந்த பாகங்களில் சுவஸ்திக், பெருக்கல்  மற்றும் திரிசூல கீறல் குறியீடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பெருக்கல், திரிசூல குறியீடுகள் தமிழகத்தில் இரும்புக் கால மக்கள் வாழ்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் பரவலாக கிடைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடஹரிராஜ புரம், தர்மநல்லூர், கொண்டாரெட்டிப்பாளையம் போன்ற ஊர்களில் நடத்தப் பட்ட களஆய்வில் இக்குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத் திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 குறியீடுகள்

     குறிப்பாக இங்கு கிடைக்கப்பட்டுள்ள ‘’ சுவஸ்திக் ‘’ குறியீடை  தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையை சார்ந்த முன்னாள் துணை கண்காணிப் பாளர் திரு . ஸ்ரீதரன் மற்றும் சிவகங்கை அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் திரு சு .கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இது போன்ற கீறல் குறியீடுகள் கடந்த 1965 – 69 ஆண்டு உறை யூரில் நடைபெற்ற அகழாய்வு, 1962 – 63 ஆம் ஆண்டு குளித் தலை அருகே உள்ள திருக்காம்புலியூர் நடைபெற்ற அகழாய்வு, 1989 – 90  ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழாய்வு,  2015 – 16 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் அம்பல் கிராமத்தில் நடைபெற்ற அகழாய்விலும் கிடைக்கப்பட் டுள்ளன. அதோடு மட்டுமன்றி சிந்துசமவெளி பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த முத்திரைகளில் சுவஸ்திக் குறியீடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இக்குறியீடு வடலூர் பகுதியில் கிடைத்திருப்பது ஆய்விற்குரிய ஒன்றாகும். மேலும் இக்குறியீடு களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டாகும் என தெரிவித்தனர்.

      இரும்பு காலத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்த இப்பகுதியில் தான் பிற் காலத்தில் அய்யன் ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு வாழ்ந்த மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய மேற்கே 300 மீட்டர் துரத்தில் உள்ள மேடான பகுதியை பயன்படுத்தியுள்ளனர். காரணம் இப்பகுதியில் அதிக எண் ணிக்கையிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் தமிழ் மொழியானது குறியீடுகளாக வடிவம் பெற்று பிறகு படிப் படியாக வளர்ந்து வரிவடிவம் பெற்றது. இதனால்தான் பெருங்கற்கால மற்றும் இரும்பு கால மக்கள் வாழ்ந்த பகுதிகளில் நடத்தப் படும் பெரும்பாலான அகழாய்வுகளில் கீழ் மண்ணடுக்குகளில் கீறல் குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் அதற்கு மேல் மண்ணடுக்குகளில் தமிழ் பிராமி எழுத்துருக் கள் பொறிக்கப்பட்ட பானையோடுகளும் கிடைக்கின்றன. எனவே வடலூர் அய்யன் ஏரிப் பகுதியில் கிடைத்துள்ள இக்குறியீடுகளின் வாயிலாக இப்பகுதி யில் வாழ்ந்த மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் கருத்துருக்களாக இக்கீறல் குறியீடுகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். 




 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு