கருங்குழி ஸ்ரீலக்ஷ்சுமி நாராயணப் பெருமாள் கோயில்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
கடலூர் மாவட்டம்
வடலூரில் இருந்து தெற்கே 6 கி.மீ. தூரத்தில் கருங் குழி என்ற கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில்
சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீலக்ஷ்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
அமைந் துள்ளது.
கோயில் அமைப்பு
சதுர
வடிவ கருவறையும் அர்த்த மண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் இக் கோயில் கிழக்கு
நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. முகமண்ட பத்தின் நேர் எதிரே காரியசித்தி
கருடாழ்வார் சன்னதியும், இதன் வடக்கு மாற்றம் தெற்கு பகுதியில் தச புஜசுந்தர
ஆஞ்சநேயர் சன்னதியும், அஷ்ட புஜலக்ஷ்சுமி வராக மூர்த்தி சன்னதியும் அமைந்துள்ளது.
தலவரலாறு
விஷ்ணு பக்தரான கோபில மகரிஷி சரயு நதிக்கரையில்
தங்கியிருந்த போது நாரதமுனிவர் அவரை சந்தித்தார். நாரதமுனிவர் முனிவரை வர வேற்ற கோபில
மகரிஷி நாரதமுனிவரை வரவேற்று உபசரித்தார்.
அப்போது நாரதரிடம் தாம் விஷ்ணுவை நேரில் கண்டு தரிசிக்க வேண்டும் என்று
வேண்டினார். அதற்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டு வந்தாள் விஷ்ணுவை நேரில் காணும்
பேற்றினை பெறுவாயாக என்று கூறி சென்றார். அன்றி லிருந்து கங்கை, யமுனை, போன்ற புண்ணிய
தீர்த்தங்களில் எல்லாம் நீராடி விட்டு தென்னக
நதிகளில் நீரடுவதர்க்காக காவிரி நதிக்கரையை வந்து அடைந்தார். காவிரியில்
நீராடிவிட்டு தனது தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டார். பிறகு தமது ஆஸ்ரமம் திரும்பும்
சமையத்தில் விஷ்ணுவை காணும் ஆவல் மிகுதியானது அதனால் தன் நிலை மறந்து தவத்தில்
அமர்ந் தார். கோபில மகரிஷியின் பக்தியை கண்ட திருமால் லஷ்மி
நாராயணராக காட்சி அளித்த பெருமைக்குரிய திருத்தலம் தான் கருங்குழி ஸ்ரீலக்ஷ்சுமி
நாராயணப் பெருமாள் திருத்தலமாகும்.
சைவ ஆக்கிரமிப்பால் சிதம்பரம் கோவிந்தராஜப்
பெருமாள் கோயில் மூல வர் சிலை கடலில் வீசப்பட்டது. அபோது உற்சவரை கருங்குழி
இருந்த திருமால் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காப்பாற்றி இத்திருத் தலத்தில் வைத்து
பாதுகாத்து வந்தனர். இந்தனை அறிந்த ஸ்ரீராமானுஜர் இவ்வாலயத்திற்கு எழுந்தருளி ஸ்ரீ
கோவிந்தராஜ பெருமாளை பெற்றுக் கொண்டு கள்ளக்குறிச்சி வழியாக சென்று திருப்பதியில்
பிரதிஷ்டை செய்த தாக ஒரு செவிவழி செய்தியும் முண்டு. வள்ளல் பெருமானார்
கருங்குழி கிராமத்தில் தங்கியபோது இப்பெருமால் மீது பக்தி கொண்டதால் தாம்மேற் றிய திருஅருட்பாவில் பத்து பாடல்கள் இப்பெருமாளைப்
பற்றி பாடிய பெருமைக்குரியது இத்தலம். மேலும் இக்கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீலக்ஷ்மி
நாராயணன் பெருமாள் தனது மார்பில் மஹாலக்ஷ்மியையும் இடது மடியில் லக்ஷ்மியை யும்
அமர்த்திக்கொண்டு அமர்ந்த திருக் கோலத் தில் காட்சியளிகின்றார். இப்பெருமாளை சேவித்தால்
குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் அன்பு அதிகமாகும், பகைவுணர்வு அகலும்,
குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
கோயிலின் சிறப்பு
‘’நடந்த கால்கள்
நொந்தவோ ‘’ என்ற ஆழ்வார் திருவாக்கின்படி மகாபாரதத் தில் தர்மத்தை காக்க பாண்டவர்களுக்குத் துணையாக
இருந்து பல இடங்க ளில் நடந்ததின் காரணமாக பகவான் ஸ்ரீ கண்ணனின் கால்களில் புண்கள்
ஏற்பட்டு தழும்பாக மாறியது. அத்தழும்புகள் உள்ள திருவடிகளுடன் கண் ணனே இங்கு
ஸ்ரீனிவாசனாக இக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இப்பெருமானை
திருவோணத்தன்று மாலையில் சாந்தி அர்ச்சனை
செய்து செவிப்பவர்களுக்கு திருமண தடை நீங்கி உடனே திருமண யோகம் ஏற்படும் , பிரிந்த
கணவன் மனைவியர் ஒன்று சேர்வர், தீராத கடன்சுமை அகலும் என்பது ஐதிகம். மேலும்
திருமணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த பெருமாளை வணங்கி இக்கோயிலில் உள்ள
சந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளசெய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கருங்குழி ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாளை
பக்தி சிரத்தையுடன் சேவித்து வந்தாள் தரித்திரனும் தனவான் ஆவான் என்பது
நிச்சயம்.
Comments
Post a Comment