சிதம்பரத்தில் மாலிக்காபூர்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்


  பாண்டியப் பேரரசின் மன்னனாக விளங்கிய முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியன் கி.பி. 1310 ஆம் ஆண்டு தமது சொந்த மகனால் படுகொலை செய் யப்பட்டான். இந்நிகழ்வு பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. குலசேகர பாண்டியனுக்கு சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என இரு மகன்கள் இருந்தனர். சுந்தரபாண்டியன் பட்டத் தரசியின் மகனாவான் . இரண்டாவது மகன் வீரபாண்டியனோ வைப்பு மனைவிக்கு பிறந்தவன். வீரபாண்டியன் ஆட் சித்திறமையும் வீரமும் ஒருங்கே பெற்றிருந்ததால் அவனே தமக்கு பிறகு பாண்டியப் பேரரசை ஆளும் தகுதி படைத்தவன் எனக் கருதிய குலசேகர பாண்டியன் வீரபாண்டி யனுக்கு முடிசூட்டினான் . இதனை ஏற்காத சுந்தர பாண்டியன் தமது தந்தையான குலசேகரனை படுகொலை செய்து மதுரை அரியணையை கைப்பற்றிக் கொண்டான். இதனால் வீரபாண்டியன் திருச்சி அருகே உள்ள உறையூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். இருப்பினும் சுந்தரபாண்டியனுக்கும் , வீரபண்டியனுக்கும் இடையே அவ்வப்போது அரசுரிமை போர் நடந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் சுந்தர பாண்டியனை மதுரையில் இருந்தே விரட்டினான் வீரபாண்டியன். 

  நாட்டை இழந்த சுந்தரபாண்டியன் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் தென்னகம் நோக்கி படையெடுத்து வருவதை கேள்விபட்டான். இதற்கிடையே டில்லி படைகள் கர்நாடக பகுதியை ஆட்சி செய்து வந்த ஹொய்சால தேசத்தின் எல்லையில் முகாமிட்டிருந்தது. போர் செய்வதை தவிர்த்த ஹோய்சள அரசன் மாலிக்காபூரின் மேலாண்மையை ஏற்று மாலிக்காபூரை தமது தலைநகரில் தங்கவைத்திருந்தான். இதனை அறிந்த சுந்தரபாண்டியன் நேராக துவாரசமுத்திரம் சென்று மாலிக்காபூரை சந்தித்தான். தனது தனையனிடம் இருந்து மதுரை அரியணையை மீட்டுதர உதவி வேண்டினான். அதற்கு ஒத்துக் கொண்ட மாலிக்காபூர் தமது பெரும் படையுடன் மதுரை நோக்கி புறப்பட்டான். வழியல் இருந்த உறையூரை மாலிக்காபூரின் படைகள் சூறையாடியது. பிறகு ஸ்ரீரங்கம் கோயிலை முழு வதும் கொள்ளையிட்டது. உறையூரில் இருந்து தப்பித்த வீரபாண்டியன் தமது கஜானாவை காலி செய்து 120 யானைகளில் ஏற்றிக்கொண்டு தப்பிக்க முற் பட்டான். அப்போது வழி மறித்த மாலிக்காபூரின் வீரர்களிடம் தமது பொருட் கள் அனைத்தையும்  வீட்டுவீட்டு தப்பித்துக் கொண்டான். அதன் பிறகு சிதம் பரம் அருகே இருந்த தேவிக்கோட்டையில் பதுங்கிக்கொண்டான். மதுரைக் குச் சென்ற மாலிக்காபூரின் படைகள் அந்நகரை முழுவதும் கொள்ளையிட்டு கைப்பற்றியது. உதவிக்காக காத்திருந்த சுந்தரபாண்டியனுக்கு வெறும் ஏமாற் றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் சுந்தரபாண்டியன் தமது உயிரைக் காப்பாற் றிக் கொள்ள மதுரையை விட்டே ஓட வேண்டியதாயிற்று .

சிதம்பரத்தில் மாலிக்காபூர்

  வீரபாண்டியனை உறையூர் மற்றும் மதுரையிலிருந்து விரட்டி வந்த மாலிக் காபூர் ஒரு வழியாக சிதம்பரம் வந்தடைந்தான். வீரபாண்டியன் சிதம்பரத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த தேவிக்கோட்டையில் பதுங்கியிருப்பதாக வந்த இரகசிய தகவளின் அடிப்படையில் மாலிக்காபூர் தனது பெரும்படையை சிதம்பரம் நோக்கி திருப்பியதற்கு முக்கிய காரணமாகும். சிதம்பரம்பரத்தில் கால் பதித்த மாலிக்காபூர் நடராஜர் கோயிலின் பொன்னம் பலத்தின் கலை அழகைக் கண்டு வியந்தான். மாலிக்காபூர் அதனை விடுத்து கோயிலின் பிறப் பகுதிகளுகளை தீயிட்டு கொளுத்தி கருவூலத்தை முழுமையாகக் கொள்ளையிட்டான் . வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் தில்லையில் இருந்து பெருவாரியான பொருட்களும், 250 யானைகளும் மாலிக்காபூருக்கு கிடைத்தன. மாலிக்காபூர் சிதம்பரம் நோக்கி வருவதை முன்பே கேள்வியுற்ற தில்லை வாழ் தீட்சதர்கள் நடராஜர் சிலை மற்றும் ஆபரணங்களை பொன்னம்பலத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தனர். இந்த கொடூரத் தாக்குதளின் விளைவாக நடராஜர் கோயில் ஏறக்குறைய 70 ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் இருந்த பல கோயில்களின் பொக்கிஷங்கள் மாலிக்காபூரால் கொள்ளையிட்டு சென்றதாக அறிய முடிகிறது. தென்னகபடையெடுப்பின் மூலம் தமிழகத்திலிருந்து மாலிக்கா பூருக்கு 612 யானைகள் , 3583 டன் தங்க ஆபரணங்கள், 20,000 ஆயிரம் குதிரைகள், பல பெட்டிகளில் நிரப்பப்பட்ட முத்துக்கள் போன்றவை கிடைத்தன. அவைகள் அனைத்தையும் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு பரிசாக கொண்டு சென்றான்.


Comments