வரலாற்றுத் தொடக்ககாலத்தில் கடலூர் மாவட்டம்

   முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர் 

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி 

தஞ்சாவூர்

                     


        

              வரலாற்றுத் தொடக்ககாலத்தில் கடலூர் மாவட்டம்

   சங்க காலம்

      சங்ககாலம் என்பதன் காலவரையறை குறித்து வேறுபட்ட கருதுகோள் கள் வரலாற்று அறிஞர்களிடையே இருப்பினும், பெரும்பான்மையான அறி ஞர்கள்  கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 3 ஆம் நூற் றாண்டு வரை யிலான காலகட்டத்ததையே சங்ககாலம் என்று கூறுகின்றனர். சங்ககாலத் தில் தமிழகம் இலக்கிய வளர்ச்சியில் அபார உயர்வை பெற்றது. மேலும் உலக நாடுகளுடன் ஏற்பட்ட வணிக தொடர்பியல் காரணமாக பொருளாதாரத் தில் தன்னிறைவை பெற்று பொற் காலமாக திகழ்ந்தது. இக் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரங்களான மதுரை, உறையூர், கரூர், கொற்கை, அழகன் குளம், நாகைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு, கொடு மணல் , பொருந்தல், கீழடி போன்ற இடங்களில் கிடைத்த அகழாய்வு தரவுகள் மூலம் சங்ககாலப் பண்பாட்டுக் கூறுகளின் உயர்வைப் பற்றி விரிவாக அறியமுடி கிறது.  

    மேலும் சங்ககாலப் பண்பாடானது கிரேக்க, ரோம மற்றும் எகிப்திய நாகரி கங்களுக்கு இணையானது என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இப்பண்பாட்டின் தாக்கம் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாபாடி, சிதம் பரம், விருத்தாசலம் போன்ற வட்டங்களுக்கு உட்பட்ட ஊர்களான காரைக் காடு, குடிகாடு, தியாகவல்லி, அன்னப்பன் பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள் ளம், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், மணிகொல்லை, தர்மநல்லூர், வடஹரி ராஜபுரம், மருங்கூர், குருவப்பன் பேட்டை, கொண்டா ரெட்டிப்பாளையம், அவி யனூர், மாளிகைமேடு, செங்கமேடு போன்ற ஊர்களில் நிலைபெற்று இருந் துள்ளதை கள ஆய்வு மற்றும் அகழாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இப்பண்பாட்டின் தாக்கமானது கடலூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமன்றி மாவட்டத்தின் உட்பகுதியிலும் அதன் தாக் கம் விரவிக் காணப்படுவது குறிபிடத்தக்க ஒன்றாகும்.

காரைக்காடு அகழாய்வு

    காரைக்காடு கிராமம் வடலூரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் வங்கக்கடல் அருகே அமைத்துள்ளது. இவ்வூரில் பாரிஸ்நகரை சார்ந்த யூவாஸ் மார்டின் என்பவர் காந்த சக்திமுறை ஆய்வினை மேற்கொண்டு பூமிக்கடியில் இருந்த தொன்மையான ஊரிருக்கை பகுதியினைக் கண்டு பிடித்தார். மேலும் மாதிரிக் குழி ஆய்வின் மூலம் ரெளலட்டட் வகை மட்கல ஓடுகளையும், கருப்பு – சிவப்பு நிற மற்றும் வழுவழுப்பான சிவப்பு நிற மட்கல ஓடுகளையும் கண்டுபிடித்தார்.

    இச்சான்றுகளின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளரும் பேராசிரிய ருமான  K.V. இராமன் தலைமையில் 1966 – 67 ஆம் ஆண்டில் இங்கு அக ழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் காரைக்காடு கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் ரோமானியர்களுடன் நேரடி வாணிப தொடர்பு கொண்ட பகுதியாக இருந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

மட்கலன்கள்

    காரைக்காடு அகழாய்வில் ஊதா மற்றும் வெளிறிய நிறமுடைய ரெளலட் டட் மட்கலன்களும் , உள்ளூரில் செய்யப்பட்ட கூம்புவடிவ ஜாடிகளும், கிண் ணங்களும், வட்டில்களும் இங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ளன.

மணிவகைகள்

     கட்டடப் பகுதியுடன் சால்சிடனி, அமெதிஸ்ட், பெரில், ஜாஸ்பர், அகேட் போன்ற அரிய கற்களினால் செய்யப்பட்ட வண்ணக் கல்மணிகளும் இங்கு நடைபெற்ற அகழாய்வில் வெளிக்கொண்டு வரப்பட் டுள்ளன. மேலும் மணி கள் செய்யவதற்கு  பயன்படுத்தப்பட்ட மூலக்கற்கள் இப்பகுதியில் அதிக அள வில் கிடைத்திருப்பதால் கி.பி. 1 – 2  ஆம் நூற்றாண்டில் இப்பகுதி கல்மணி தயாரிப்பில் சிறந்து விளங்கியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 குடிகாடு அகழாய்வு

     காரைக்காடு அருகே குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிலவிய தொன்மையான நாகரீகத்தினை  முழுமையாக வெளிக்கொண்டு வரும் நோக்கில் சென்னை பல்கலைக் கழகத்தின் பண்டைய வரலாறு மற் றும் தொல்லியல்துறை பேராசிரியர் K.V.இராமன் தலைமையில் 1988 - 89 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு இடங்களில் காணப் பட்ட பண்பாட்டு மேடுகளில் 6 x 4 மீ அளவுள்ள குழிகள் தோண்டப் பட்டன. அவை முறையே குடிகாடு 1, குடிகாடு 2 எனப் பெயரிடப்பட்டது.

 குழி எண் ஒன்று

     முதல் அகழாய்வு குழியானது 2.5 மீ ஆழமுடையதாகும். மொத்தம் ஏழு மண்ணடுக்குகள் காணப்பட்டன. இவை தவிர இரண்டு தோண்டு குழிகளும் கண்டறியப்பட்டன. பொதுவாக மண்ணடுக்கு என்பது அப்பகுதியில் நிலவிய பண்பாட்டுக் கூறுகளின் காலவரையறையை சரியாக கணிப்பதற்கு உதவு கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

குழி எண் இரண்டு

    இக்குழியானது 3.2 மீ  ஆழமுடையாது . மொத்தம் எட்டு மண்ணடுக்கு களை கொண்டது . இங்கு இரண்டு தோண்டு குழிகளும் ஒரு கட்டடப்பகுதி யும் கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டடப் பகுதி

     குடிகாடு அகழாய்வு குழி இரண்டில் 0.47 மீட்டர் ஆழத்தில் 0.70 மீட்டர் அகலமுடைய  செங்கல் சுவர் காணப்பட்டது. இந்த சுவர் பகுதி  35 x 22 x 6 செ.மீ அளவுகளை கொண்ட செங்கற்களால் கட்டப் பட்டதாகும். இதே அள வுள்ள செங்கற்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், காஞ்சிபுரம், அரிக்கமேடு போன்ற அகழாய்வுகளில் கிடைக்கப்பட்டுள்ளன. இது தவிர வீட்டின் தரை தளப் பகுதியும் கண்டறியப்பட்டது.

     கட்டடத்தின் கூரை பகுதியை தாங்குவதற்காக மரக் கால்கள் நடப்பட்டு இருந்தன. இக்கால் நடப்பட்டிருந்த குழிகள் ( POST HOLES ) மட்டும் தரைத ளத்தை ஒட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இக்குழிகள் 0.08 மீ விட்டதையும் 0.04 மீ ஆழத்தையும் கொண்டிருந்தன. மேலும் ஊதுலை  ஒன்றும் அகழாய் வில் கிடைத்துள்ளது. வட்டவடிவிலான இவ்வுலை 0.70 மீ விட்டத்தினை கொண் டதாகும். இந்த ஊதுலை இரும்பு மற்றும் செம்பினை உருக்கப் பயன்படுத் தப்பட்டிருக்க வேண்டும். இங்கு அரியவகை கல்மணிகள், கண்ணாடி, சங்கு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் அதிக அளவில் கிடைத் துள்ளன . இவை கூம்பு , கோளம், உருளை, முட்டை போன்ற பல்வேறு வடி வங்களில் நீளம் , பச்சை, மஞ்சள், வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களை கொண்டவைகளாகும். முழுமை பெற்ற மணிகளுடன் துளையிடப்பட்ட மற் றும் துளையிடப்படாத கல்மணிகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன. மேலும் சுடுமண்ணாலான காதணிகளும், அகல் விளக்குகள் , விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பகடைகாய்கள், நூல் நுற்க பயன்படுத்தப்பட்ட தக்களி , செம்பினாலான காதணி போன்றவை இங்கு கிடைக்கப்பட்டுள்ள முக்கிய கலைப் பொருட்களாகும். குறிப்பாக இப்பகுதியில் இரும்பு உருக்கியதற்கான அதன் கசடுகள் பெருமளவில் கிடைத்துள்ளதால் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பை பிரித்தெடுக்கும் தொழிநுட்பத்தை அறிந்திருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

     மேலும் கி.மு.1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை யிலான  ஒரேபண்பாட்டை சார்ந்த மக்கள் குடிகாடு பகுதியில் வாழ்ந்துள்ள னர். இக் காலக்கட்டத்தில் குடிகாடு கல்மணிகள் செய்யும் தொழிற் கூடமாக விளங்கியுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட அரியவகை கல் மணிகள் அரிக்க மேடு வழியாக ரோம் மற்றும் உலகின் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட் டுள்ளதை இங்கு நடைபெற்றுள்ள அகழாய்வு தெளிவு படுத்துவதாக உள்ளது. மேலும் குடிகாடு கிராமத்தில் இருந்து தெற்கே உள்ள தியாகவல்லி, திருச் சோபுரம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, ஆண்டர்முள்ளிப்பள்ளம், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், மணிக்கொல்லை போன்ற ஊர்களில் நடை பெற்ற தொல் லியல் கள ஆய்வில் அரிட்டைன் மற்றும் ரௌலட்டட்வகை மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக அரிட்டைன் வகை மட்கலன்கள் பண்டைய இத்தாலி நாட்டில் உள்ள அரிட்டியம் என்ற இடத்தில் தயாரிக் கப்பட்ட வைகளாகும். இவை இளஞ்சிவப்பு – அரக்கு நிறத்தில் இருக்கும். இவை அரிக்கமேடு அகழாய்விலும் கிடைத்துள்ளன. குறிப்பாக தியாகவல்லி கிராமத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய நாட்டில் இருந்து மதுவகைகளை கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட ஆம்போரா ஜாடிகளின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளது.  அதோடுமட்டுமன்றி தொண்டைமானத்தம் கிராமத்தில் ரோமானிய நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சங்க காலத்தில் கிரேக்க மற்றும் ரோமானியர்களின் நேரடி வாணிப தொடர்பு இப் பகுதியில் இருந்துள்ளதை உறுதியாக நம்ப முடிகிறது.

செங்கமேடு அகழாய்வு

     கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு மேற்கே 24 கி.மீ. தொலைவில் மணிமுத்தாறு நதிக்கரையில் செங்கமேடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிரா மத்தின் தெற்குப் பகுதியில் நல்லூரும் , கிழக்கே இலங்கியனூர் என்ற கிராம மும் அமைந்துள்ளன. இவ்வூரில் உள்ள மேட்டுப்பகுதியில் அதிகம் செங்கற் கள் கிடைப்பதால் அதற்கு செங்கமேடு என்று பெயர் வந்துள்ளது. சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பண்பாட்டுப் பகுதியின் மேற்பரப்பில் உடைந்த செங்கற்கள் , பானை ஓடுகள் போன்றவை பரவலாக காணப்படுகின் றன. இப் பகுதியில் நிலவியிருந்த தொன்மையான நாகரிகச் சிறப்பை வெளிக் கொண்டுவரும் நோக்கில் இந்திய தொல்லியல் பரப்பாய்வுத் துறையை சார்ந்த N.K.பானர்ஜி தலைமையில் 1952 – 53 ஆம் ஆண்டில் இங்கு விரிவான அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மட்கலன்கள்

     செங்கமேடு அகழாய்வில் பெருங்கற்காலத்தை சார்ந்த கருப்பு – சிவப்பு நிற மட்கலன்கள் , பளபளப்பான கருப்பு நிற மட்கலன்களின் உடைந்த பாகங் கள் , மங்கலான மஞ்சள் நிறமுடைய ( BUFF WARE ) மட்கலன்களும் கிடைத் துள்ளன. இவை தவிர கருஞ் சிவப்பு மற்றும் பழுப்பு நிற ரெளலட்டட் வகை மட்கலன்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்தாகும். இங்கு நடைபெற்ற அக ழாய்வில் சில கருப்பு – சிவப்பு நிற மட்கலனில் கீறல் குறீயிடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. .

கட்டடங்கள்

     செங்கமேடு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டடப் பகுதிகள் செங்கற் களுடன் சுண்ணாம்பு சாந்து கலந்து கட்டப்பட்டுள்ளன. இச்செங்கற்கள் 30 X 18 X 7 செ.மீ அளவுகளை கொண்டவை. இதே அளவுகளைக் கொண்ட செங்கற் கள் அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம் , உறையூர் போன்ற ஊர்களில் நடை பெற்ற அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளன. மேலும் கட்டடப் பகுதியை ஒட் டியவாறு சுடுமண் உறை கிணறுகளும் கிடைத்துள்ளன.  

      குறிப்பாக ஒரு அகழாய்வு குழியில் மனித எலும்புகளும் மண்டையோ டும், கருப்பு – சிவப்பு நிற மட்கலன்களும் கிடைத்தன. மேலும் எலும்பினா லான அம்புமுனைகள் , சுடுமண் மணிகள், கண்ணாடியாலான மணிகள், சங்கினாலான கொண்டை ஊசிகள் மற்றும் வளையல்கள் போன்ற கலைப் பொருட்களும் கிடைத்துள்ளன. செங்கமேடுப் பகுதியில் நிலவிய பண்பாட்டின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டாகும்.

மாளிகைமேடு அகழாய்வு

     கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்திற்கு அருகே மாளிகைமேடு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் கடந்த 1999 – 2000 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் அகழாய்வை மேற்கொண்டனர். இங்கு நடைபெற்ற அகழாய்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. சங்ககால பண்பாட்டு பொருட்களோடு ரோம் நாட்டுடன் இப் பகுதி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை உறுதிபடுத்தும் வகை யில் அரிட்டைன் வகை மட்கலன்களின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளன. அதே காலகட்டத்தைச் சேர்ந்த கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகள் மாளிகை மேடு அகழாய்வில் அதிக அளவில் கண்டறியப்பட் டுள்ளன. ஒரு சில சிவப்பு நிற மட்கல ஓடுகளில் தமிழ் எழுத்துக்கள் ( தமிழ் பிராமி ) பொறிக்கப்பட்டி ருந்தன.           

                இங்கு கிடைக்கப்பட்ட தொல்பொருட்களில் கோழி உருவம் பொறித்த ரெளலட்டட் வகை மட்கல ஓடுகளும் கீறல், குறியீடுகள் பொறிக்கப்பட பானை ஓடுகளும் குறிப்பிடத்தக்க வைகளாகும். ஆரம்பக் காலத்தில் குறியீடு களாகத் தோன்றிய தமிழ் எழுத்து பிறகு தமிழ் பிராமியாக வளர்ச்சியுற்றது. குறிப்பாக பண்டையகால மக்களின் வாழ்விடங்களில் நடைபெரும் அகழாய் வுகளில் கீழ் மண்ணடுக்குகளில் பெரும்பாலும் குறியீடு கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும், மேல் மண்ணடுக்குகளில் தமிழ் பிராமி எழுத்துருக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைக் கின்றன. இதற்கு சிறந்த உதாரணம் கொடுமணல் , கீழடி , அழகன்குளம் போன்ற இடங்களில் நடைபெற்ற அக ழாய்வுகளில் கீழ் மண்ணடுக்குகளில் கீறல் குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானையோடுகளும் மேல் மண்ணடுக்குகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்திருப்பது தக்கச் சான்றாகும்.  

    மேலும் மாளிகைமேடு அகழாய்வில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மட்கல ஓடுகளில் தமிழ் எழுத்துக்கள் வரிவடிவம் பெற்றுள்ளதை காண முடிகிறது.  இதன் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் ஆரம்பத்தில் தமிழை குறியீடுகளாகவும் பிறகு எழுத்துருக்களுடன் கூடிய வரிவடிவமாக எழுதி யுள்ளனர் . இதனை பார்க்கும் பொழுது இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கல்வி மேம்பாட்டின் உயர்வினை அறியமுடிகிறது. மேலும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மண்ணடுக்கில் மௌரியர் காலத்தை சார்ந்த மெரு கூட்டப்பட்டட பளபளப்பான கருப்பு நிற பானை ஓடும்கள் கண்டறியப்பட்டுள் ளது. இதன் மூலம் மாமன்னன் அசோகர் காலத்தில் வட இந்திய மக்கள் மாளிகைமேடு பகுதியில் வாழ்ந்த மக்களுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின் றனர். மேலும் இங்கு செவ்வ கவடிவிலான யானை உருவம் பொறிக்கப்பட்ட செப்புக்காசு, பெண்கள் காலில் அணியும் தண்டை, மணிவ கைகள், மான்கொம்பு, சுடுமண்ணால் செய்யப் பட்ட தாயக்கட்டை, நூல்நுற்க பயன்படுத்தப்பட்ட தக்களி, புகைப்பான்கள் , துளையிடப்பட்ட கூரை யோடுகள், கட்டடப்பகுதி, அகல்விளக்கு, பெண்கள் விளையாடுவதற்கு பயன் படுத்தப்பட்ட வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள் போன்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவ்வகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது பருத்தி நூல் திரளாகும். இதேபோன்ற நூல்திரல்கள் உறையூர் , அரிக்கமேடு அகழாய் வுகளில் கிடைத்திருப்பதாக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்ற னர்.         

      மேலும் மாளிகைமேடு அகழாய்வில் நூல்திரள் கிடைத்திருப்ப தால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் நூல் நுற்றலுடன், நெசவு தொழிலிலும் ஈடுபட் டிருந்ததை உணர முடிகிறது. இங்கு தோண்டப்பட்ட நான்கு அகழாய்வு குழிகளிலிருந்து தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எட்டுப் பானை யோடுகள் கிடைத்துள்ளன. செங்காவி பூசப்பட்ட( RED SLIPPED WARE ) மட்கல ஓட்டிலும், சொரசொரப்பான சிவப்பு நிற (  COARSE RED WARE ) மட்கல ஓட்டி லும் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு மட்கல ஓட்டில் மட்டும் இரண்டு வரி எழுத்துருக்கள் இருந்தன. எழுத்து பொறிக்கப் பட்ட மட்கல ஓடுகள் அனைத்தும் 1 . 85 மீட்டர் ஆழம்முதல் 3. 70 மீட்டர் ஆழம் வரையில் மேலிருந்து கிழாக  4 முதல் 8  வரையிலான மண்ணடுக் குகளில் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.பி. 1 –2 ஆம் நூற்றாண்டாகும்.

தமிழ் எழுத்து பொறிப்புகள்

 1 . . . . . . வணாதல்

     மா அத

        மா

2. ப  அனய

3. அட . . . .

4. மன . . . . . .

5. . . . . . . . ச . . . .

6. . . . . . னஅவி . . .

7. . . . . தாய

8. . . . . மதினகொராம . . . .

   மாளிகைமேடு கிராமம் வடலூரில் இருந்து வடக்கே 26 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

மருங்கூர் தொல்லியல் களஆய்வு

      கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் மருங்கூர் கிராமம் அமைந் துள்ளது. கொள்ளுக்காரன்குட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலை யின் அருகே இராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலமுள்ளது. அந்நி லத்தில் இருந்த மெட்டுபகுதியை கனரக எந்திரம் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு சீர் செய்யும் பொழுது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. அங்கு நடைபெற்ற மேற்கள ஆய்வில் சிதைந்த தாழியின் உள்ளிருந்து எடுக்கப்பட உடைந்த கருப்பு – சிவப்பு நிற மட்கலன் ஒன்றில் எழுத்து பொறிப்புகள் இருப் பது கண்டறியப்பட்டது. மேலும் இதே பகுதியில் கிடைத்த கருப்பு – சிவப்பு நிற பானை ஓடுகளை ஆய்வு செய்ததில் மேலும் இரண்டு ஓடுகளில் எழுத் துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1.       முதுமக்கள் தாழியின் உட்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட மட்கல ஓட்டில் ‘’அ-தி(தீ)-ய-க-ன் ‘’ என்று பொறிக்கப்பட்டிருந்தது.

2.       மண்ணின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு ஓடுகளில் முதல் ஓட்டில் முதல் இரண்டு எழுத்துக்கள் ‘’ அ - ம் ‘’ என்றும் அடுத்த எழுத்துகள் குறியீடுகளாகும். மற்றொரு ஓட்டில் ‘’ (அ)-ம-ல-ன் ’’ என்று பொறிக்கப்பட்டிருந்தது.

     இப்பண்பாட்டுப் பகுதியில் ஐந்து முதுமக்கள் தாழிகள் வெளிப் படிருந் தன. புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பப் பிரிவை சார்ந்தவர் களாக இருக்கக் கூடும். இதே பகுதியில் இரும்பினாலான ஈட்டி , சிறிய வகை வாள் ஒன்றும் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. மேலும் முது மக்கள் தாழிகளை மூடுவதற்கு ( CAPING STONE SLAB ) பயன்படுத்தப் பட்ட பெரிய அளவிலான கற்பலகைகளும் இப்பகுதியில் இருந்து வெளிப்பட்டி ருந்தன.

காலம்

       தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைக்கப்பட்ட பகுதிக்கு புதுவை மத்தியப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைத் தலைவரும் பேராசிரியருமான K. இரா ஜன், தஞ்சை தமிழ் பல்கலைக் கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான Y. சுபுராயலு, தமிழ் நாடு அரசு தொல்லியல்துறையின் கல்வெட்டு ஆய்வாளர் V .வேதாசலம் ஆகியோர் மருங்கூர் வந்து நேரடியாக ஆய்வை மேற்கொண்டனர். இங்கு கிடைக்கப்பட்ட தமிழ் எழுத்து பொறிப்புகளை ஆய்வு செய்த அவர்கள் இவ் வெழுத்துருக்கள் கி. மு. முதல் நூற்றாண்டை சார்ந்தது என குறிப்பிட்டனர். ஆனால் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்கள் மருங்கூரில் கிடைக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு என வரையருத்துள்ளார்கள்.

மக்கள் வாழ்விடப் பகுதி

     மருங்கூர் மருத்துவமனைக்கு நேர் எதிரே அமைந்துள்ள குளத்தின் கிழக் குபுறம் உள்ள மேட்டுப்பகுதியில் நடத்தபட்ட கள ஆய்வில்  கருப்பு சிவப்பு நிற மட்கல ஓடுகளும் , செங்காவி பூசப்பட்ட மட்கல ஓடுகள் ,  ரௌலட்டட் வகை மட்கல ஓடுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்பண்பாட்டு மேட்டின் கீழ் பகுதியில் கட்டடப் பகுதிகள் காணப்படுகின்றன. இக்கட்டடப் பகுதிக்கு பயன்ப டுத்தப் பட்ட செங்கற்கள் 7 X 21 X 42 செ.மீ அளவுகளை கொண்டதாகும். இக் குளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இராமலிங்கம் என்பவரது நிலத்தில் மரக் கன்றுகள் நடுவதற்காக தோண்டியபோது நான்கு கால்களுடன் கூடிய அம்மி ஒன்று கிடைத்துள்ளது. மேலும் இதே பகுதியில் கட்டட சுவர் ஒன்றும் காணப்பட்டது. இதற்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் 8 X 21 X 40 செ.மீ அளவுள்ளவையாகும். இங்கு நடைபெற்ற களஆய்வில் நீளம், பச்சை வண் ணங்கள் கொண்ட கண்ணாடி மணிகள் மற்றும் பெண்கள் விளையாட பயன் படுத்திய சில்லுகள் ( HOP SCOTCH ) போன்ற தொல்பொருட்கள் கிடைத்துள் ளன. இவைகளை வைத்து பார்க்கும்போது மருங்கூர் குளத்தின் வடக்கே இடுகாடும், குளத்தை ஒட்டிய கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி பெருங்கற்கால மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளதை இங்கு நடைபெற்றுள்ள ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதுமக்கள் தாழிகள்

      மருங்கூர் மருத்துவமனையின் பின்புறத்தில் இருந்து கிழக்கே இராம லிங்கம் நிலம் முதல், மேற்கே ராஜசேகர் வீடு வரை சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 60 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இராமலிங்கம் நிலத்தில் கிடைத்த முது மக்கள் தாழிகள் 95 செ.மீ உயரம், 180 செ.மீ சுற்றளவுகளை கொண்டவை.  இதே பண்பாட்டுப் பகுதியை சுற்றி நுண்கற்காலத்தை சார்ந்த கற்சீவல்கள் , கூர்மைதன்மையான பிறைவடிவ கற்கருவிகள் அதிக எண்ணிக் கையில் கிடைந்துள்ளன. இதன் மூலம் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் பாகவே நுண்கற்கால மக்களும் அதை தொடர்ந்து பெருங்கற்கால மக்களும் மருங்கூர் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.

குருப்பம்பேட்டை

  குறிஞ்சிப்பாடியில் இருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் குருப்பம் பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஐயனார்கோயிலின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பண்பாட்டுப்பகுதி ஒன்றுள்ளது. அதன் மேற்பகுதியில் கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகள், செங்காவி பூசப்பட்ட மட்கல ஓடுகள், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகள் மற்றும் பச்சை, ஊதா, வெள்ளை , மஞ்சள் நிற கல் மணிகள் கிடைத்துள்ளன. இம்மேட்டுப் பகுதியில் இருந்து நேர் கிழக்கே 100 மீட்டர் தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில்  7 x 21 x 42 செ. மீ அளவுள்ள செங்கற்கள் கிடைகின் றன. மேலும் ஐயனார் கோயிலின் தெற்கு பகுதியில் 1992 ஆம் ஆண்டு மண் தோண்டும் போது முதுமக்கள் தாழி கிடைத்துள்ளன. அதனுள் இருந்து சிதைந்த மனித எலும்புகள், கருப்பு – சிவப்பு நிற மட்கலன்கள், தங்கத் துண்டுகள், வெண்கல தட்டின் உடைந்த பாகங்களும் கிடைத்துள்ளன. இக்கலைப்பொருட்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும்.


















Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி