அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு



சோழர் கால  கல்வெட்டு   கண்டுபிடிப்பு

               
   கடலூர் மாவட்டம் வடலூர்  அருகே  உள்ள  சந்தவேளிப்பேட்டை , பாச்சாரப்பாளையம் , கீழூர்  போன்ற ஊர்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறையை  சார்ந்த தொல்லியல் ஆய்வாளரும் பேராசிரியருமான சிவராமகிருஷ்ணன் தலைமையில் அத்துறையை  சார்ந்த மாணவர்கள் சுசிந்திரன் ,ராஜராஜன் , பிரபாகரன், பாலாஜி  ஆகியோர் கடந்த  ஐந்து நாட்க ளாக களஆய்வு  மேற்கொண்டு வருகின்றனர். இதன்  மூலம் இப்பகுதியில் பல வரலாற்றுச் சான்றுகளை கண்டறிந்துள்ளனர்.

சோழர்காலத்தியக்   கல்வெட்டு 


                    கீழூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் பாச்சாரப்பளையத்தை சார்ந்த பளையக்கரர்களின்  இடிந்த  அரண்மனை பகுதி  ,  அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏரிகள் , குளங்கள்  , கிணறுகள்  போன்ற   இடங்களில் ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டன. அப்போது கீழூர் கிராமத்தில் தற்பொழுது வாழ்த்து வரும்  பாச்சாரப்பாளையத்தின்  வாரிசுகளில் ஒருவரான ''சின்னக் குழந்தைசாமிதுரை பாஷா''  அவர்கள்  தங்களது  அரண்மனை  இடிக்கப்பட்ட போது  கல்வெட்டு ஒன்று  கிடைத்ததாக  கூறினார். அவற்றை  ஆய்வு  செய்ததில் சுமார்  900  ஆண்டுகள்  பழமையான   கல்வெட்டு  என்பது  கண்டறியப்பட்டது.
  

கி.பி. 11 ஆம்  நூற்றாண்டை  சார்ந்த கல்வெட்டு


              60 செ.மீ. நீளம்  , 35 செ.மீ. அகலம் கொண்ட செவ்வக வடிவ  கருங் கல்லில் கல்வெட்டானது பொறிக்கப்பட்டுள்ளது . ஏழு வரிகளைக் கொண்ட இக் கல்வெட்டனது  ஒரு  துண்டு  கல்வெட்டாகும். இதோடு இணைக்கப்பட்டிருந்த  மற்றொரு  கல்வெட்ட கிடைத்தால்  இக்கல்வெட்டின்  முழுத் தகவல்களையும்  அறியமுடியும். கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்தமைதியை  பார்க்கும்போது  இதன் காலம்  கி.பி. 11 ஆம்  நூற்றாண்டகும் .

கல்வெட்டு செய்தி 


      எட்டு  வரிகளைக்கொண்ட இக் கல்வெட்டானது  ஒரு  துண்டு கல்வெட்டாகும் . பொறிக்கப்பட்டுள்ள  சில வரிகள்  முற்றிலும் அழிந்த நிலையில் உள்ளதால்  அதன்  பொருள்  முழுமையாக  அறிய முடியவில்லை. கிடைக்கப்பட்ட கல்வெட்டில்  

''....இவர்கள் இருவருமே தேக..... 
 .... காக  இப்படி ஸம்மதித்து .....
 .....தோம் இவ்வானை  வொ......
.....இவ்வூர்  காரணத்தான்  த......
.....களான  பெரியா ............
.......றும்  முடையான்...''   என்ற  தகவல் உடன்  கல்வெட்டானது முடிவடைகிறது.  

தீர்ப்பு  பற்றிய  செய்தி

     
      இக் கல்வெட்டில்   இரண்டு பேர்களுக்கு  இடையே  நிலவிய  தீர்க்கமுடியாத வழக்கு  ஓன்றினை   இவ்வூர்ப்  பகுதியில் இருந்த கரணத்தான்   முன்னிலையில் அதாவது அக்காலத்தில்  ஏற்படும் வழக்குகளை விசாரித்து   நியாயம்  வழங்கு வதற்காக ஏற்படுத்தப்பட்ட சபையின்  உறுப்பினர்களுக்கு கரணதார் என்று  பெயர். இவ்வாறு    இப்பகுதியில்  இருந்த கரணத்தான் முன்னிலையில்  வழக்கானது  நன்கு  விசாரிக்கப்பட்டு  வாதிகள்  இருவரும் சம்மதித்து   கரணத்தான்   முன்னிலையில்  ஒப்பந்தம்  செய்துள்ளதை   இக்கல்வெட்டு மூலம்  அறியமுடிகிறது.
          எனவே  கீழூர் கிராமத்தில் கிடைக்கப்பட்டுள்ள இந்த  துண்டு கல்வெட்டின் மூலம்.  கி.பி. 11  ஆம்  நூற்றாண்டில்.  அதாவது  சோழர்கள் ஆட்சியில் . இப்பகுதியில்  வாழ்ந்த  மக்களிடையே  ஏற்படும்  வழக்குகளைவிசாரித்து சரியான  தீர்ப்பு  கிடைக்க  வழி வகைகளை   சோழ மன்னர்கள்  ஏற்படுத்தி  இருந்தமைப் பற்றி  இக்கல்வெட்டின்  மூலம் அறியமுடிகிறது. இது போன்ற  உறுப்பினர்களை  தங்களது  ஆட்சிக்கு  உட்பட்ட  பகுதிகளில்  மக்களுக்கு   சரியான  நீதி   கிடைக்கவேண்டி   சோழ  மன்னர்கள்  ஊர் மற்றும்  சதுர்வேதிமங்கலங்களில்  ஏற்படுத்தி இருந்தனர்  என்பதை    சோழர் காலத்தியக் கல்வெட்டுக்களில்  குறிப்பிடப்பட்டுள்ளன.
  

சந்தவெளிப் பேட்டை  கல்வெட்டு

      
       இக்கல்வெட்டானது வடலூர்  அருகே உள்ள  சந்தவெளிப்பேட்டை கிராமத்தில்  உள்ள  துர்க்கையம்மன் கோயில் முகமண்டப படிக்கட்டில்  பொறிக்கப்பட்டுள்ளது. 14 வரிகளைக் கொண்ட  இக்கல்வெட்டானது  அழிந்த  நிலையில்  உள்ளது . அதில்  ''மதியமுது'' , ''நயினார்'' , ''ஆண்டியப்ப நயினார் '' என்ற   வரிகள்  மட்டும்  தெளிவாக  உள்ளன.  இதன்  மூலம்  ஆண்டியப்ப நயினார்  என்பவர்  எப்பகுதியில் இருந்த  கோயில் ஒன்றின் இறைவனுக்கு  மதிய  வேளை அமுது பூசைக்காக  தானம்  வழங்கப்பட்ட  செய்தியை  இக்கல்வெட்டு  கூருகிறது. 
  

ஆண்டியப்ப நயினார் 

          கீழுரில்  பாச்சாரப் பாளையத்தின் பாளையக் காரர்களாக இருந்தவர்களின் தற்போதைய வாரிசான ஏகநாதசாமிதுரை அவர்களிடம்  உள்ள ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியார் கொடுத்த காவல் ஆவணத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தைப் பற்றிய பல வரலாற்று தகவல்களை அறியமுடிகிறது. குறிப்பாக அவ்வாணம் கி.பி. 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கடலூர் கவுன்சிலின் தலைவராக இருந்த ஜார்ஜ் டேட்சன் அவர்களால் சின்னம நாயக்கன் பாளையத் தலைவராக இருந்த ஆண்டியப்ப நயினாரை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பேனியின் ஜாகீர் கிராமங்களான சின்னம்மநாயக்கன் பாளையம் மற்றும் நாயுடுபேட்டை ஆகியவற்றுக்கு அடங்கிய பன்னிரெண்டு தாலுக்காக்களையும்  ஒரு மாநகராட்சியையும் ஐந்து கம்யூன்ரீக்களையும் ( ஒரு சிறு நிலப்பகுதி ) காவல் காத்து வருதல் வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது . மேலும் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று வகைப் பிரிவுகளிலுமுள்ள ஊர்களையும் , நெசவாளர் பேட்டைகளையும் காத்து வருவதோடு அங்கு வாழ்வோரின் சொத்துக்களையும் திருடர்கள் திருடிச் செல்லா வண்ணம் பாதுகாத்து வருதல் வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் கம்பெனிக்குச் சொந்தமான பொருட்கள் யாதேனும் களவாடப்பட்டால் அதற்கான நஷ்டத்தை பாளையக்காரர்தான் ஈடு செய்ய வேண்டும் என்ற மிகக் கடுமையான வாசகமும் அவ்வாணையில் உள்ளது. இப்பாதுகாப்பு பணிக்காக ஆண்டிற்கு 410 பகோடாக்கள் ஊதியமாக ஆண்டியப்ப நயினாருக்கு வழங்கப்படுள்ளது
           மேலும் இந்த ஆண்டியப்ப நயினார் பாச்சாராப் பாளையத்து பாளையக்காரரின் வரிசுகளுள் ஒருவர். இவர் சின்னம்ம நாயக்கன் பாளையத்துக்கு தத்துப் பிள்ளையாகச் சென்றவர். பிற்காலத்தில் சின்னம்ம நாயக்கன் பாளையத்திற்கு வாரிசுகள் இல்லாமல் போகவே கடலூர் கவுன்சில் தலைவர் ஜார்ஜ் டேட்சன் கொடுத்திருந்த காவல் ஆவணம் பிற்பாடு பாச்சாரப் பாளையத்தாரிடம் வந்து விட்டது.

       எனவே கி.பி.1772 ஆம் ஆண்டு சின்னம்ம நாயக்கன் பாளையத்தின் தலைவராக இருந்த ஆண்டியப்ப நயினார் சந்தவெளிப்பேட்டையில் இருந்த கோயிலுக்கு மதிய வேளை அமுது பூஜைக்காக தானம் வழங்கப் பட்ட செய்தியை அக்கல்வெட்டுக் கூறுகிறது. இப்பகுதியில் வரலாற்றுத்துறை  மாணவர்களோடு  நடைபெற்ற கோடை விடுமுறைக் கால தொல்லியல் களஆய்வில் பதினான்கிற்கும் மேற்பட்ட வரலாற்றுத் தடையங்க கண்டறியப்பட்டுள்ளன என்று பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
         
          


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி