வடலூர்- வரலாற்றில் பெரிய கோயில்குப்பம்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
வடலூர்- வரலாற்றில் பெரிய கோயில்குப்பம்
சந்தவெளிப் பேட்டை கிராமத்தில் இருந்து
இரண்டு கிலோமீட்டர் தூரத் தில் பெரியக்கோயில்குப்பம் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள
குளத்தின் அருகே 120 செ.மீ. உயரம் கொண்ட சிவலிங்கம் ஒன்றும் அதன் அருகே கி.பி. 10
- 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த தட்சிணாமூர்த்தி சிலையும் உள்ளன. சிவ லிங்கம் உள்ள
இடத்தைச் சுற்றி கட்டடத்தின் அடிப்பாகம், சிதைந்த செங்கற் சுவரும் காணப்படுகின்றன.
சந்தவெளிப் பேட்டையில் இருந்ததைப் போன்று கி.பி. 10 - 11 ஆம் நூற்றாண்டில் பெரிய
கோயில் குப்பம் கிராமத்திலும் சிவன் கோயில் ஒன்று இருந்துள்ளது. பிற்காலத்தில்
நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால் இக்கோயில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment