சங்ககாலத்தில் வடலூர்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

  உதவிப்பேராசிரியர்

 வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி   

தஞ்சாவூர்

                          

                      சங்ககாலத்தில் வடலூர்

கடலூர் மாவட்டத்தில் பெருங்கற்கால பண்பாட்டை தொடர்ந்து சங்க கால பண்பாடு எழுச்சியுற்றது.  இதே காலகட்டத்தில் வடலூர் பகுதியிலும் அப் பண்பாட்டின் தாக்கம் நிலைபெற்றிருந்தது. குறிப்பாக வடலூர் கோட்டை கரை பகுதியில் கடந்த 2007 ஆண்டு தங்கம் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரம் கொண்ட பெரிய கட்டடத்தின் சுவர் வெளிப்பட்டது. கிழக்கு, மேற்காக செல்லும் அக்கட்டடப் பகுதிக்கு 8 X 24 X 42  செ.மீ. அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விஜய ராகவன் என்பவர் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில்  6 X 22 X 35 மற்றும் 7 X 19 X 36 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் கிடைத்தன. இதே அளவுள்ள செங்கற்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், அரிக்கமேடு அக ழாய்வில் கிடைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வடலூர் பகுதியில் வாழ்ந்த சங்ககால மக்களும் கட்டுமான வீடுகளில் வாழ்ந்துள்ளனர் என் பதை அறியமுடிகிறது . வடலூரில் கிடைக்கப்பட்ட செங்கற்களை ஆராய்ந்த புதுவை மத்தியப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை தலைவரும் பேராசிரி யருமான முனைவர்  K .இராஜன் அவர்கள் இதன் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு என வரையறுத்துள்ளார். மேலும் வடலூர் கோட்டைக்கரை பகுதியில் வீடு காட்டுவதற்காக  தோண்டப் படும் பள்ளங்களில் இருந்து கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகள், செங்காவிப் பூசப்பட்ட மட்கல ஓடுகள், கருப்பு நிற மட்கல ஓடுகள், தானியங்களை சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான மட்பாண்டங்களின் ஓடுகளும் கிடைக்கப்பட்டுள்ளன. மேலும் 8 x 24 x 42 செ.மீ அளவுகளை கொண்ட செங்கற்கள் பார்வதிபுரம் மாரியம்மன் கோயில் அருகே யும் கிடைக்கப்பது ஆய்விற்குறிய ஒன்றா கும்.  

 வண்ணக் கல்மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை

      கடலூர் மாவட்டதில் சங்ககால மக்கள் வாழ்ந்த பகுதிகளில் அதிக எண்ணிகையிளான கல்மணிகள் கிடைக்கின்றன. குறிப்பாக மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்களான காரைக்காடு, குடிகாடு, தியாகவல்லி, திருச்சோபுரம், அன்னப்பன் பேட்டை, ஆண்டர்முள்ளிப் பள்ளம், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், மணிக்கொல்லை போன்ற ஊர்களில் இவ்வகை மணிகள் கிடைக்கின்றன. குறிப்பாக மணிக்கொல்லை, சிலம்பி மங்கலம், ஆண்டர்முள் ளிப்பள்ளம் போன்ற ஊர்களில் அதிக எண்ணிக் கையிலான மணிகள் தயாரிக் கும் தொழில் கூடங்கள் இருந்துள்ளன. மேலும் இவ்வூர்களில் கல்மணிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலக்கற்கள் மற்றும் கற்களை உருக்கப் பயன் படுத்தப்பட்ட ஊதுளைகளின் உடைந்த பாகங்கள், துளையிடப்பட்ட மற்றும் துளையிடப்படாத மணிகள், பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத  மணிகள், அறுக்கப் படுவதற்கு முன்பாக நீண்ட குழல் போன்று உருவாக்கப் பட்ட கண்ணாடிக் குழல்கள் ,  மட்பாண்டங்களின் உள் மற்றும் வெளிப்புறங் களில் பச்சை, கருநீல நிற கண்ணாடிப்பூச்சு பூசப்பட்ட சீன நாட்டை சார்ந்த மட்கலங்களின் ( வண்ண கண்ணாடி பூச்சு பூசப்பட்ட மட்கல ஓடுகளை PRESUMED TO BE TURQUOISE GLOZED POTTERY – TGP. PROBALY BELONGING TO THE SANANION PERIOD. 5 th – 7 th A.D என சில ஆய்வாளர்கள் கூருகின்றனர் ) உடைந்த பாகங்கள் சிலம்பிமங்கலம், மணிக்கொல்லை ஊர்களிலுள்ள மணல் மேடுகளில் கிடைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் ஊதா, பச்சை, மஞ் சள், கருப்பு, சிவப்பு, வெள்ளை, கருநீலம் போன்ற நிறங்களை கொண்ட மணி கள் அதிக அளவில் மண்ணின் மேற்பரப்பில் கிடைக்கின்றன. குறிப்பாக கட லூர் பகுதியில் இயங்கிவந்த மணி தயாரிப்பு தொழிற் சாலைகளுக்கு தமிழ கத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிவன்மலை, பெருமாள்மலை , வெங்க மேடு, காங்கேயம், படியூர், எடப்பாடி, எருமைப்பட்டி, தாத்தயங்கார்பேட்டை, புதூர் போன்ற ஊர்களில் இருந்து சிவப்பு, பச்சை, கருப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய வண்ணங்களைக் கொண்ட மூல கற்களைப் பெற்றுள்ளனர்.

     மேலும் கடலூர் மாவட்ட கடற்கரையை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதி களில் அரிட்டைன்  (ARRETINE), மற்றும் ஆம்போரா ஜாடிகளின் ( AMPHORAE JAR) உடைந்த பாகங்கள் மண்ணின் மேற்பரப்பில் கிடைப்பதால் கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க, ரோமானியர்கள் இப்பகுதியில் வாழ்ந்த வண்ண மணிகளை விற்பனை செய்யும் வணிகர்களோடு நேரடி வர்த்தக உறவு கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.   

வடலூரில் வண்ண கல்மணிகள்

      வடலூரில் உள்ள கோட்டைகரை பகுதியில் வீடு காட்டுவதற்காக தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து நீலம், பச்சை, கருப்பு, வெள்ளை, மஞ் சள் போன்ற நிறங்களைக் கொண்ட சிறியவகை கல் மணிகள் மற்றும் பட்டைதீட்டப்பட்ட கருநீலநிறம் கொண்ட கண்ணாடி மணிகள் கிடைக் கின்றன. இவைகளின் அமைப்பு மற்றும் வடிவங்கள் குடிகாடு, ஆண்டர்முள் ளிப்பள்ளம், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், மணிகொல்லை போன்ற ஊர்க ளில் தயாரிக்கப்பட்ட மணிவகைகளோடு ஒத்துள்ளது. எனவே மேற்கண்ட ஊர்களில் தயாரிக்கப்பட்ட இம்மணிகளை வடலூரில் வாழ்ந்த சங்க கால மக்களும் அணிகலன்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.  

     வடலூர் காளிக்கோயிலின் மேற்குப்பகுதியில் தொடங்கி பார்வதிபுரம் அம்மன் கோயிலின் கிழக்கு பகுதி, இஸ்லாமிய பள்ளி வாசலின் தெற்குப் பகுதி வரை, சுமார் 19 .5  ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட தொல்லியல் கள ஆய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்தற்கான தொல்லியல் சான்றுகள் பரவலாக கிடைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தையும் ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் வடலூர் பகுதியில் மக்கள் வாழ்ந்துள் ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.     

                          

             

                           
                       
                            
                 
                              
                    
                          



Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு