மல்யுத்தமும் சதியும் - கல்வெட்டு

 

                           மல்யுத்தமும் சதியும் - கல்வெட்டு


 

       கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ளது பெலத்தூரு கிராமம், இராஜராஜன் காலத்திலேயே இப்பகுதி சோழர் வசமானது. கன்னட பகுதி குறுநில மன்னர்கள், சோழர்களின் மேலாண்மையை ஏற்று, அவர்களுக்காய் பலபோர்களில் கலந்து வெற்றியை பெற்று தந்தும், இறந்தும் உள்ளனர். அதே போன்ற ஒரு குறுநில மன்னன்தான் "நவிலி" நாட்டை ஆண்ட எச்சா என்பவர், இவர் "நுக" நாட்டை ஆண்ட ரவிகா என்பவரின் மகளான தொகப்பை என்பவரை மணமுடித்தார். பெர்வய்யல் எச்சா மிகச்சிறந்த வீரர், மல்யுத்தத்திலே மிகுந்த பயிற் சியுடையவர். ஒருமுறை மல்யுத்த போட்டியிலே அரசகுமாரன் ஒரு வனை வீழ்த்திவிடுகிறார்அந்த அரசகுமாரன் எவர் என தெரிய வில்லை, எந்த அரசகுலம் என்ற தகவலும் இல்லை.   தவறு தலாய் அந்த அரசகுமாரன் இறந்துவிடுகிறார். உடனே அவருக்கு மரண தண்டனையும் அளிக்கப்பட்டு, கொன்றும் விடுகின்றனர். இதைகேள் விபட்ட, "தொகப்பை" சுற்றத்தார் தடுத்தும் கேளாமல், சதியேற தயாரா கிறார். தான் இறக்கும் முன்பு தனது உடைமைகள் அனைத்தும் தான மளித்து தன் கணவன் உடலின் மீது சதியேறி மாண்டு விடுகிறார். இந்த வீர தம்பதியர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லே இது.

 

"தமது தேகமதை தீயிற்களித்த தேகப்பை" என்பதே இக்கல்வெட்டின் முக்கிய வாசகம். இரண்டாம் ராஜேந்திரசோழன் கால நடுகல் இது.

 

புகைப்பட உதவி: John Peter sir

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி