அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

             அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு  


      177 ஆண்டுகளை கடந்த பழமையும், பெருமையும் பெற்ற தஞ்சை மாவட் டம், அணைக்கரையில் உள்ள கீழணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியா ளர் சர் ஆர்தர் காட்டன்  என்பவர் பிரிட்டிஷ் பொறியாளர் மற்றும் படைத்தள பதி ஆவார்இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்துதரவும், கால்வாய்களை அமைப்பதிலும் அர்ப்பணித்தார். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் .

      1829-ல் காவிரி பாசனப் பகு திக்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட ஆர் தர் காட்டன், மணல்மேடு களால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணை யில் மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, “ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தை பண் டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்என்றார் கல்லணைக்கு கிராண்ட் அணை கட்என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே.

      காவிரி ஆறு முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகி றது. கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நீர் அதிகமாக பாய்ந்து காவிரியில் உரிய நீர் வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர் துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை ஆர்தர் காட்டனிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு. இதை யடுத்து, கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு 1835-36 இல் கொள்ளி டத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார். இதனால் கொள்ளிடம் ஆற் றில் வீணாக நீர் செல்வது தடுக்கப்பட்டது தவிர கும்பகோணம் அணைக் கரை கீழணை, வெண்ணாறு, வெட்டாறு நீர்ப் பாசனங்களையும் இவர் முறைப்படுத்தினார்.

 

1860 ஆம் ஆண்டே பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிவிட்டார். தனது 96 வயது வரை வாழ்ந்த அவர், 1899ஆம் வருடம் இறந்துவிட்டார்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி 149 மைல் கடந்து வந்து மேட்டூர் அணையை அடைகிறது மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 117 மைல் கடந்த வந்து கல்லணையை அடை கிறதுமீண்டும் கல்லணையிலிருந்து 67 மைல்கள் கடந்து வந்து கீழணை யை அடைகிறது .முடிவாக கீழணையிலிருந்து 33 மைல் கடந்து போய் வங்கக்கடலில் சங்கமிக்கிறது.

      தஞ்சையை ஆண்ட ராஜாராஜசோழன்,  கங்கை வரை தனது ஆட்சியை நிறுவி அதன் வெற்றிச் சின்னமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோயிலை நிறுவினான். அதன் மதில் சுவர்களை கொண்டு ஆங்கிலே யர்களால் கீழணை கட்டப்பட்டதுகி.பி. 1836-ம் ஆண்டு பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கிராமத்தில் கீழணை கட்டப்பட்டுள்ளதுகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டுள்ளது. இக்கீழணை மூலம் கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பாசனம் பெறுகின்றனஇக்கீழணை வெள்ளக் காலங் களில் 4.50 லட்சம் கனஅடி உச்சக்கட்ட வெள்ளநீர் வடிகாலாக பயன்பட்டு வருகிறது. கீழணை கட்டப்பட்டதிலிருந்து கல்லணையிலிருந்து உள்ளாறு மூலம் கொள்ளிடத்தில் விடப்படுகிறதுகீழணைப் பாசனத்துக்காக வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வீராணம் ஏரி, கஞ்சங் கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாறு, மேலராமன் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 1,26,839 ஏக்கர் பாசன பரப்புக்குப் பயன்பட்டு வருகிறது.

    கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இரண்டாகப் பிரிந்து வடக்குப் பிரிவு கொள்ளிட ஆறு, தெற்குப் பிரிவு கொள்ளிட ஆறு என அணைக்கரை என்ற கிராமத்தை தீவு போல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீ. தூரத்தில் இரண்டும் சங்கமித்து பின் 33 மைல்கள் சென்று வங்கக்கடலில் கலக்கிறதுகீழணை உபகோட்ட அலுவலகம் மற்றும் கீழணைப் பாசன பொறியாளர் பிரிவு ஆகிய இரண்டு அலுவலகங்கள் அணைக்கரையில் சென்னை மண்டலம், வெள்ளாறு வடிநில வட்டம், கடலூர், சிதம்பரம் கொள்ளிடம் வடிநிலை கோட்டம், பொதுப்பணித்துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது






Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு