ஓம்படைக்கிளவி

 

        

முதல் ஓம்படைக் கிளவி

  பொதுவாகக் கல்வெட்டுகளில் இறுதிப் பகுதியில் இந்தக் கொடைக்கு தீங்கு நினைப் பவர்கள் இந்தப் பாவத்தில் போவார்கள் என்று குறிப்பிடும் பகுதி இடம்பெறும். இவற் றிற்கு முன்னோடியாக ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. ஸாஞ்சியில் தூணில் உள்ள அந்தக் கல்வெட்டு பொயுமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக் கப்பட் டுள்ளது. இந்தக் கல்வெட்டு தோரணத்தையோ வேதிகையையோ காகணா வத்தி லிருந்து எவரேனும் எடுத்தாலோ அல்லது பிறரைக் கொண்டு எடுப்பித் தாலோ வேறு ஆசார்ய குலத்தில் வைத்தாலோ அவர்கள் தாயைக் கொன்ற வர்களா கவும் தந்தை யைக் கொன்றவர்களாகவும் துறவியைக் கொன்ற வர்களாகவும் புத்தஸங் கத்தை உடைத்தவர்களாகவும் ஆவார்கள் என்று கூறுகிறது. இத்தகைய ஒம்படைக் கிளவி களுக்கு இது மூலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காகணாவம் என்பது ஸாஞ் சியின் பழைய பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி