வெங்கடாம்பேட்டை தண்ணீர் பந்தல் கல்வெட்டு

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்


 வெங்கடாம்பேட்டைக்கு வடக்கே உள்ள சந்தைதோப்பில் 144 செ.மீ நீளமும் , 67 செ.மீ. அகலமும் , 60 செ.மீ. உயரம் கொண்ட செவ்வக வடிவிளான கல் தொட்டி ஒன்று உள்ளது. அத்தொட்டியின் முன்புறம் தமிழ் மற்றும்தெலுங்கு மொழியிலான இரண்டு கல்வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. தமிழ் பகு தியில்....

1.       வேங்கட்ட

2.       ம்மாள் புண்

3.       ணியம் மோ

4.       ர்  தண்ணி

5.       ப்  பந்தல்

 

  தெலுங்கு பகுதி

 

1.       வெங்கடேஸ்வரா

2.       நைப்புன்யா

3.       சத்ரம்.

    அதாவது தமிழ் கல்வெட்டு வேங்கட்டம்மாள் என்பவர் இப்பகுதியின் வழியாக செல்லும் வழிப் போக்கர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்திருந் ததை கூறுகிறது. இரண்டாவது பகுதியான தெலுங்கு கல்வெட்டில் இதே பகுதியில் வெங்கடேஸ்வரர் பெயரில் புண்ணிய சத்ரம் ஒன்று ஏற்படுத்தப் பட்டிருந்ததையும் தெரிவிக்கிறது. இந்த கல்தொட்டியின் அருகேயும் இவ்வூ ருக்கு தெற்கேயும் செவ்வக வடிவ கற்பலகையில் நாயக்கர் கால கலைப் பாணியைக் கொண்ட அரசன் மற்றும் அரசியின் உருவங்கள் வணங்கிய நிலையில் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட் டுள்ளன. இவை செஞ்சி நாயக்க மன்னன் வேங்கடபதியும் அவரின் சகோதரி வேங்கட்டம்மாளா கவும் இருக்கலாம். மேலும் வடலூர் அருகே உள்ள வெங்கட்டங்குப்பம் என்ற கிராமம் இவரது பெயரில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி