வடலூர் அருகே உள்ள சந்தவேளிப்பேட்டை
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
வடலூர் அருகே உள்ள சந்தவேளிப்பேட்டை
வடலூரில் இருந்து மேற்கே
5 கி.மீ. தூரத்தில் சந்தவேளிப் பேட்டை கிரா மம் அமைந்துள்ளது. பொதுவாகபேட்டை என்ற சொல் வணிகர்கள் குடியேற்ற
பகுதிகளை குறிக்கும் சொல்லாகும். பேட்டை என்ற சொல் சோழர், பாண்டி யர், விஜயநகர
கல்வெட்டுக்களில் பரவலாக காணமுடிகிறது. எனவே சந்த வெளிப்பேட்டை ஒருகாலத்தில்
கடைகள் நிரம்பப்பெற்ற வணிகர்கள் வாழ்ந்த ஊராக இருக்கவேண்டும். இவ்வூரில் இருந்து
பெரியவாய்க்காலுக்கு செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ள கோட்டைமேடு பகுதியில் சாலை
விரி வாக் கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 6 x 25 x 25 செ.மீ அளவுள்ள செங்கற்
கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், சொர சொரப்பான சிவப்பு நிற மட்கல ஓடு கள் ,
தானியவகைகளை சேமிக்க பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான மட் கல ஓடுகள், வண்ணக் கல்மணிகள்
மற்றும் ’’ட’’ வடிவக் கூரை ஓடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக இங்கு சேகரிக்கப்பட்ட’’
ட’’வடிவ கூரை ஓடுகள் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டதை
போன்று உள்ளது. மேலும் கோட்டைமேடுப் பகுதியானது சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவினைக்
கொண்டது. இப்பண்பாட்டுப் பகுதியில் இருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தூரத்தில்
கோட்டைப்பள்ளம் என்றப்பகுதியும், மேற்கே 250 மீட்டர் தூரத்தில் பெரிய வாய்க்காலில்
இருந்து வடக்கு தெற்காக செல்லும் ஓடையை அகழிப்பள்ளம் என்றும், இதனை ஒட்டிய
மேற்குப் பகுதியை முதலைப்பள்ளம் என இப் பகுதி மக்கள் அழைகின்றனர். எனவே கோட் டையை
சுற்றி இருந்த அகழியில் பாதுகாப்பிற்காக முதலைகள் வளர்க்கப் பட்டிருக்க வேண்டும்
என்பதை அறியமுடிகிறது. சோழர்கள் காலத்தில் தற் போது உள்ள கோட்டைமேடு பகுதியில்
இப்பகுதியின் நிர்வாக அதிகாரி தங்கு வதற்கான குடியிருப்பொன்று இருந்திருக்க
வேண்டும்.
இப்பண்பாட்டுப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட
செங்கற்கள், பானை ஓடுகள், மற்றும் கட்டடத்தின் கூரைப் பகுதிக்குப்
பயன்படுத்தப்பட்ட’’ ட ‘’ வடி வக் கூரை ஓடுகள் போன்றவை கி.பி. 10 – 12 ஆம்
நூற்றாண்டை சார்ந்தவை களாகும். மேலும் கோட்டைமேட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள
தங்கராசு என் பவருக்கு சொந்தமான முந்திரித்தோப்பு பகுதியில் நடத்தப்பட்ட மேற்கள
ஆய் வுவில் அதிக எண்ணிக்கையிலான பானை ஓடுகள், கல்மணிகள், சிறுமியர் விளையாடப் பயன்படுத்திய
வட்டச் சில்லுகள், வீடுகளில் இருந்து கழிவுநீர் களை வெளியேற்ற அமைக்கப்பட்ட
சுடுமண் குழாய்களின் உடைந்த பாகங் கள் மற்றும் சுடுமண் உறைகேணியின் பாகங்கள்
கிடைக்கப் பட்டுள்ளன. இப் பகுதி மக்கள் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கலாம் .
சோழர் கால கல்வெட்டுக்கள்
சந்தவேளிப்பேட்டை கிராமத்தில் சோழர்காலத்தை
சார்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவ்வூரில் உள்ள கோட்டைமேட்டின் கிழக்
குப் பகுதியில் உருளை வடிவ கல்லில் ஐந்து வரிகளைக் கொண்ட துண்டு கல்வெட்டு ஒன்று
கடந்த 2009 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில்‘’ திருநாமத்து‘’ ,
‘’இறையிளியாக‘’ ஆகிய சொற்கள் காணப்படுகின்றன. கல் வெட்டில் உள்ள திருநாமத்துக்காணி
என்பது சிவபெருமானின் பெயரால் தன மாக வழங்கப்படும் நிலத்தைக் குறிப்பதாகும். எனவே
சோழர் காலத்தில் சந்தவெளிப்பேட்டையில்
இருந்த சிவன்கோயிலுக்கு நில தானம் வழங்கப் பட்ட செய்தியை இக்கல்வெட்டு
குறிப்பிடுகிறது. மேலும் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்தமைதியை
பார்க்கும் பொழுது கி.பி. 12 ஆம் நூற் றாண்டை சார்ந்ததாகும். சந்தவெளிப்பேட்டை
கிழவன் குளத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்வெட்டொன்று இவ்வூர் அம்மன் கோயிலில்
வைக்கப்ப டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள வரிவடிவங்கள் தேய்ந்த நிலையில் உள்ள தால்
கல்வெட்டின் முழுபொருளையும் அறியமுடிய வில்லை. எழுத்து வடி வங்கள் கி.பி. 10 – 11
ஆம் நூற்றாண்டை சார்ந்த எழுத்தமதியோடு ஒத்துள் ளது. எனவே இந்த இரு கல்வெட்டுக்களுமே
சோழர்காலத்தில் வெளியிடப் பட்டவைகளாகும்.
சிவலிங்கங்கள்
சந்தவெளிப்பேட்டையில் இரண்டு சிவலிங்கங்கள்
உள்ளன. முதலாவது சிவலிங்கம் இவ்வூர் பச்சைவாழியம்மன் கோயிலின் பின்புறம் உள்ளது.
120 செ. மீ உயரம் கொண்ட சிவலிங்கத்தின் ஆவுடையார் பத்ம இதழ்களால்
அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிவலிங்கம் அமைந்துள்ள இடத்தில் தரைதளப்
பகுதியுடன் கூடிய சிதைந்த கட்டடப் பகுதி ஒன்று காணப்படுகிறது. 6 x 21 x 21 செ.மீ அளவுள்ள செங்கற்கள்
இக்கட்டடப் பகுதிக்கு பயன்படுதப் பட்டுள்ளன. எனவே இத்த கட்டடப் பகுதியானது பண்டைய
காலத்தில் இவ் வூரில் இருந்த சிவன் கோயிலின் தடையமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும்
சந்தவெளிப்பேட்டை கிராமத்தை முழுமை யாக ஆய்வு செய்ததில் உருளை வடிவ கற்தூண்களின்
பாகங்கள், பக்கவாட்டு சுவர்களுக்குப் பயன்படுத்தப் பட்ட சதுர மற்றும்
செவ்வகவடிவிலான கருங் கற்கள், கோயில் அதிட்டா னத்தின் பாகங்கள் போன்றவை கண்டறியப் பட்டுள்ளன.
இரண்டாவது சிவ லிங்கம் இவ்வூரில் உள்ள முதலைமேட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 110
செ.மீ. உயரம் கொண்ட இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார் பத்ம இதழ்க ளால் அழகாக
அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவைகளின் காலம் கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டாகும்.
சண்டிகேஸ்வரர்
இச்சிலையானது தற்பொழுது உருபடியம்மன்
கோயிலின் கிழக்குப் பகுதி யில் வைக்கப்பட்டுள்ளது. 70 செ.மீ. உயரம் கொண்ட
இச்சிலையின் கேசம் தூக்கிக்கட்டிய நிலையில் உள்ளது. காதில் கனத்த குண்டலம்,
மார்பில் முப் புரிநூல் போன்றவற்றுடன் சுகாசனத்தில் சண்டிகேஸ்வரர் காட்சியளிக்
கிறார். சண்டிகேஸ்வரர் புராணப்படி கையில் கோல் வைத்திருப் பார். எனவே இச் சிலையிலும்
புராண மரபுப்படி கையில் கோலுடன் காட்டப்பட்டுள்ளது. மேலும் சிலையின் முகமானது வட்ட
வடிவத்தில் சதைப்பற்றுடன் உள்ளது. இதில் சோழர் கலைப் பாணியின் ஆரம்ப காலத்தின்
தாக்கம் காணப்படுகிறது. குறிப்பாக இச்சிலையின் உள்ளார்ந்த நிலையை பார்க்கும் போது
பல்லவக் கலை பாணியின் தாக்கமும், சோழர் கலைப் பாணியின் வளர்ச்சி நிலையை யும்
ஒருங்கே இச்சிற்பத்தில் காணப்படுவதால் இதன் காலம் கி.பி. 9 – 10 ஆம்
நூற்றாண்டகும். இச்சிலை சந்தவெளிப்பேட்டையில் அழிக்கப்பட்ட சிவன் கோயிலுக்கு
சொந்தமானதாக இருக்கலாம்.
Comments
Post a Comment