வரலாற்றுக்கு முற்பட்ட கடலூர் மாவட்டம்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
வரலாற்றுக்கு முற்பட்ட கடலூர் மாவட்டம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்தாவணங்களற்ற காலமா கும். இக்காலக்கட்டத்தை கற்காலம் என்பர். சுமார் இரண்டு லட்சம் ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த இம்மனிதர்கள் உணவிற்காக கற்களை கொண்டு வேட்டயாடுவதை தொழிலாக கொண்டிருந்தனர். இவர்கள் விட்டுச்சென்ற கற் கருவிகள் தமிழ்நாட்டின் வடபகுதியில் அதிகம் கிடைக்கின்றன. இருப் பினும் தென்தமிழகத்தில் அதன் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படு கிறது. இது ஆய்வுக்குறிய ஒன்றாகும்.
கற்காலம்
இப்புவியில் தோன்றிய மானுடத்தை
அறிவு பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை கற்காலத்தையே சாரும். காடுகளில் விலங்கோடு
விலங்காக வாழ்ந்த மனித இனம் உணவிற்காக வேட்டையாட முற்பட்ட போது முதலில் கையாண்ட
ஒரே ஆயுதம் கல் ஆயுதமாகும். ஆரம்பக் கட்டத்தில் கையாளப் பட் ட ஆயுங்கள் கரடுமுரடாக முறையற்ற தன்மை கொண்டதாக
இருந்தது. காலம் செல்ல செல்ல அறிவு வளர்ச்சியின் விளைவாக குவார்ட்சைட் வகை
கற்களில் இருந்து கையடக்க கூர்முனை ஆயுதங்களை தயாரித்து வேட்டை யாடவும்,
வேட்டையாடிய விலங்கின் சதைகளை அறுக்கவும் இக்கூர்முனை ஆயுதங்களை பயன்படுத்தினர்.
மேலும் கல் ஆயுதங்களை கையாள்வதற்கு நன்கு பயிற்சி பெறவேண்டிய சூழல் அக்கால
மானுடத்திற்கு தேவைபட்டி ருக்க வேண்டும். காரணம் மனிதர்களை விட பன்மடங்கு வலிமை
மிக்க விலங்குகளை வேட்டையாடி வீழ்த்துவது என்பது மிகக் கடினமான செயல். இதை உணர்ந்ததால்
குழு அமைத்து வேட்டையாடும் உக்தியை விலங்கு களிடமிருந்தே மானுடம் பெற்றிருக்க
வேண்டும். மேலும் வேட்டையாடும் பொழுது கையில் உள்ள ஆயுதம் கைநழுவி விட்டால்
உயிரிழப்பு தடுக்க முடியாததாகிவிடும். இதை தவிற்க எண்ணிய மனிதர்கள் சரியாக கைகளில்
பொருந்தும் வகையில் கூர்மையான ஆயுதங்களை தயாரித்துக் கொண்டனர். இதுவே மனித பரிணாம
வளர்ச்சியின் உச்ச நிலை எனலாம். இச்சிறப்பு வாய்ந்த கற்காலத்தை ஆய்வாளர்கள் பழைய
கற்காலம், புதிய கற்காலம், நுண்கற்காலம் என்று வேறுபடுத்தியுள்ளனர்.
பழைய கற்காலம்
பழைய கற்காலம் முதல் பழங்கற் காலம், இடை பழங்கற்
காலம், கடை பழங்கற் காலம் என மூன்று உட்பிரிவுகளைக் கொண்டதாகும். குறிப்பாக பழைய கற்காலம்
கி.மு. 2,00,000 – கி.மு.10,000 வரை தமிழகத்தில் நிலவியதாக தொல்லியல் ஆய்வாளர்கள்
கூறுகின்றன. மேலும் இக் காலத்தை சார்ந்த
மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் தமிழகத்தின் வடபகுதியில் உள்ள திரு வள்ளுர்,
காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு தெற்கே உள்ள
அரியலூர் போன்ற மாவட்டங்களில் கிடைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் அருகே உள்ள ஒடப்பன்குப்பம் சின்ன ஓடையில் பழங்கற்கால கற்கருவிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக கடலூர்
மாவட்டத்தின் தொன்மையும் தொல்லியல் சிறப்பும் பழைய கற்காலத்திலிருந்தே
தொடங்குகிறது எனலாம்.
புதிய கற்காலம்
கி.மு. 8000 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழகத்தில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகள் பரவலாக
கிடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மனித நாகரிக வளர்ச்சியின் முக்கிய பரிணாம உயர்வு
புதிய கற்கால மக்களிடம் இருந்தே ஆரம்பமாகிறது. இக்காலத்திய மக்கள் நிலையாக ஒரே
இடத்தில் தங்கி வாழ முற்பட்டனர். விலங்குகளை பழக்கவும், தனக்கு தேவையான உணவுப்
பொருட்களை உற்பத்தி செய்யவும் கற்றுக் கொண்டனர். மனித வர லாற்றில் மிக முக்கியக்
கண்டுபிடிப்பான சக்கரத்தை (WHEEL) உலகிற்கு அறி முகப்படுத்திய பெருமை இப்புதிய கற்கால
மக்களையே சாரும். மேலும் நெருப்பின் பயன்பாட்டால் சுடப்பட்ட வலிமையான
மட்பாண்டங்களை உற் பத்தி செய்யக்கற்றுக் கொண்டதும் இக்காலத்தில்தான்.
இந்த உயரிய பண்பாட்டு மக்கள் தமிழகத்தில்
உள்ள வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில்
வாழ்ந்த தற்கான தடையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக கடலூர் மாவட்டதில் கண்டரக்கோட்டை,
கரைமேடு, மாதூர் போன்ற ஊர்களில் புதிய கற்கால கற் கருவிகள், பானை ஓடுகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டரக்கோட்டை
வடலூரில் இருந்து 26 கி.மீ தொலைவில் பண்ருட்டிக்கு
அருகே கண்ட ரக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசியம்மன் கோயில் எதிரே சுமார்
இரண்டு ஏக்கர் பரப்பளவில் கோட்டைமேடு என அழைக்கப் படும் பண்பாட்டுப் பகுதி ஒன்று
உள்ளது. இப்பகுதியிலிருந்து 21 செ.மீ நீள மும், 9 செ.மீ. அகலமும், 19 செ.மீ.
சுற்றளவும் கொண்ட கைகோடரியும், 15 செ.மீ. நீளமும், 8 செ.மீ. அகலமும்,16 செ.மீ.
சுற்றளவும் கொண்ட சிறிய வகை கை கோடரி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இக் கருவிகளின்
கைப் பிடியானது கூர்மையனதகவும், வெட்டும் பகுதி பட்டையாக செதுக்கப்பட்டு கூர்மை
படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்தங்கள் சுமார் 9000 ஆண்டுகள் பழமை யனதாகும்.
நுன்கற்கால கற்கருவிகள்
கடலூர் மாவட்டத்தில் பழைய கற்காலத்தை தொடர்ந்து நுன் கற்கால மக்கள் வழ்ந்ததற்கான தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வடலூரின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள மருங்கூர், முத் தாண்டிக்குப்பம், வீரசிங்கன்குப்பம், நடுக்குப்பம், கீழக்குப்பம், முடப்பள்ளி, பாலக்கொல்லை, நடியப்பட்டு, ஒடப்பன்குப்பம் போன்ற ஊர்களில் அதிக எண்ணிக்கையிலான நுன்கற்கலாத்தை சார்ந்த கற்சீவல்கள் கண்டறியப் பட்டுள்ளன. மேலும் பாலக்கொல்லை கிராமத்திற்கு அருகே உள்ள ஒடப்பன் குப்பம் பெரிய ஓடை பகுதியில் கிடைக்கக்கூடிய பால்நிற குவார்ட்சைட் வகையை சார்ந்த குழாங்கற்களிலிருந்து மிக வலிமையான கூர்முனை ஆயுதங்களை தயாரித்துள்ளனர். இக்கருவிகளைக் கொண்டு மெல்லிய தோலி னையுடைய விலங்கு மற்றும் பறவைகளை வேட்டையாடவும், சதைகளை அறுப்பதற்கும் அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இப்பகுதியில் நான்கு இடங்களில் கல் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட தொழிற் கூடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பகாக ஒடப்பன்குப்பம் கிராமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சின்ன ஓடைக்கும் நடியப்பட்டு கிராமத்தின் கிழக்கு பகுதி யில் ஓடும் பெரிய ஓடைக்கும் இடைப்பட்ட பகுதியில் அதிக அளவிலான முற்று பெறாத சிறிய வகை கல் ஆயுதங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இப்பகு தியில் கற்செதில்கள், பிறைவடிவ கல் ஆயுதங்கள், கற்சீவல்கள், ஊசிமுனை ஆயுதங்களும் கிடைத்துள்ளன. இங்கு சேகரிக்கப்பட்ட கற்கருவிகளை ஆய்வு செய்த தஞ்சை தமிழ் பல்கலைக் கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையைச் சார்ந்த உதவிப்பேராசிரியர் முனைவர் செல்வக்குமார் இக்கற்கருவிகள் கி.மு. 8000 ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment