வடலூர் - வரலாற்றில் மருவாய்

 முனைவர் ஜெ.ஆர் .சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி - தஞ்சாவூர்

         

                      


                வடலூர் - வரலாற்றில் மருவாய்

     சந்தவெளிப்பேட்டையில் கிடைத்த இடைக்கால தொல்பொருட் களைப் போன்றே வடலூரில் இருந்து தெற்கே 4 கி.மீ தூரத்தில் உள்ள உள்மருவாய் கிராமத்திலும் கிடைத்துள்ளது. குறிப்பாக மண்ணேரி என அழைக்கப்படும் மன் னன் ஏரியின் தென்புறமுள்ள நத்தமேடு பகுதியில் உள்ள மேட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செங்கற்கள் , சிவப்பு நிற பானை ஓடுகள், தானி யங்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான மட் பாண்டங்களின் உடைந்த பாகங்கள், வீட்டில் இருந்து கழிவு நீர்களை வெளி யேறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாயின் உடைந்த பாகம்,  கருப்பு, நீலம், மஞ்சள் நிறங்களை கொண்ட கல்மணிகள், மாவரைக்க பயன் படுத்தப்பட்ட திருகை எந்திரத்தின் சுழலும் பகுதி மற்றும் சுடுமண் உறை கேணி போன்றவை கண்டறியப்பட்டன.

செங்கற்கள்

      ஏரியை ஒட்டி உள்ள நத்தமேடு பகுதியில் இருந்து வடக்கு தெற்காக சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் பண்டையகால மக்கள் வாழ்ந்ததற்கான தடை யங்கள் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக பானை ஓடுகள், இரும்பு கச டுகள், வண்ண கல் மணிகள் போன்றவை மண்ணின் மேற்பரப்பிலிருந்து சேக ரிக்கப்பட்டுள்ளன. இதேபகுதியில் கதிரவன் என்பவர் தமது நிலத்தை சீர் செய் யும் போது 4 x 12 x 24 செ.மீ.அளவுகளை கொண்ட செங்கற்கள் கிடைதுள் ளன. இதே அளவுகளைக் கொண்ட செங்கற்கள் சோழர்களின் தலைநகராக விளங்கிய பழையாரில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ளது. 

சுடுமண் உறை கிணறு

 மேலும் இதே பகுதியில் வட்ட வடிவிலான சுடுமண் உறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிணறு  ஒன்று கண்டறியப்பட்டது. இக்கிணற்றுக்கு பயன்ப டுத்தப்பட்டுள்ள உறைகள் ஒவ்வொன்றும் 260 செ.மீ.சுற்றளவும், 86 செ.மீ. விட்டமும்,16 செ. மீ. உயரமும் கொண்டவைகளாகும். இதே போன்ற சுடுமண் உறைகேணிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள தர்மநல்லூர், வடஹரிராஜபு ரம், சிதம்பரம் ஓமகுளம் போன்ற பகுதிகளில் கிடைக்கப்பட்டுள்ளன. மருவாய் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள சுடுமண் உறைகிணறு கி.பி. 11 – 12 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். குறிப்பாக சுடுமண் உறைகிணறுகளை அமைக் கும் தொழில்நுட்பத்தை தமிழர்கள் சங்க காலத்திலேயே அறிந்திருந்தனர் என் பதை ‘’யுறைக்கிணற்றுப் புறச்சேரி‘’ என்ற பட்டினப்பாலை வரியின் மூலம் அறியமுடிகிறது.  

சுடுமண் குழாய்கள்

      செங்கற்கள் கிடைத்த அதே பண்பாட்டுப் பகுதியில் 15 செ.மீ . நீளம் கொண்ட உடைந்த சுடுமண் குழாய்கள் கிடைத்துள்ளன. இவை வீடுகளில் இருந்து கழிவு நீர்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டவைகளா கும். வீடுகளில் இருந்து கழிவு நீர்களை வெளியேற்று வதற்காக இது போன்ற சுடுமண் குழாய்களை சங்ககால முதலே தமிழர்கள் பயன்படுத்தியமைப் பற்றி ‘’நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து‘’  என்ற பரி பாடல் வரிகளின் மூலம் சுடுமண் குழாய்களின் பயன்பாடு பற்றி அறிய முடிகிறது. மேலும் உறையூர், அரிக்கமேடு, வசவசமுத்திரம், திருக்கோயிலூர், கரூர், கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ள அகழாய்வு களில் கழிவு நீர் களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

திருககை எந்திரம்

   மேலும் இதே பகுதியில் பஞ்சாரம் என்பவரின் நிலத்தில்  25 செ.மீ. அகல மும் 10 செ.மீ. உயரமும் கொண்ட அக்கால மக்கள் பயன்படுத்திய மாவரைக் கும் திருகை எந்திரத்தின் சுழலும் மேற்பகுதி கிடைத் துள்ளது. இதன் நடுப்பகு தியில் தானியங்களை இடுவதற்காக 5 செ.மீ. விட்டம் கொண்ட துளை  காணப்படுகிறது. இப்பண்பாட்டுப் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள் அனைத்தும் கி.பி. 9 -முதல் கி.பி. 13 - ஆம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தைச் சார்ந்தவைகளாகும். எனவே சோழர்கள் காலத்தில் மருவாய் நாத்தமேடுப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

                 




Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு