கடலூர் மாவட்டத்தில் கிடைத்த நாணயப் பதிவுகள்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்

                                                 



கடலூர் மாவட்டம் சங்ககால மன்னர்கள் தொட்டு பல்லவர் ,சோழர், பாண்டியர் , சம்புவராயர், விஜயநகர், ஆற்காடுநவாப் , ஆங்கிலேயர் ஆகிய அரசுகளின் ஆளுகைக்கு உட்படிருந்தபோது அவ்வாட்சியாளர்களால் வெளியி டப்பட்ட நாணயங்கள் இம்மாவட்டத்தில் பரவலாக கிடைக்கப்பட் டுள்ளன. குறிப்பாக வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட ஊர்களில் மட்டுமே இந்நாண யங்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்திருப்பது ஆய்விற்குறிய ஒன்றாகும். மேலும் இந்நாணயங்கள் மூலமாக கடலூர் மாவட்டம் எந்தெந்த அரசுகளின் கீழ் இருந்துள்ளது என்பதையும் , பிற நாட்டினர் இம்மாவட்ட வணிகர்களுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

சங்ககால நாணயம்

           சங்ககாலத்தில் தமிழகத்தை சேர , சோழ , பாண்டிய மன்னர்கள்   ஆட்சி செய்த போது ஆந்திரப் பகுதியில் சாதவாகனர்களின் ஆட்சி நடை பெற் றது. குறிப்பாக கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவை ஆட்சி செய்த சாதவா கன மன்னன் கௌதமிபுத்ர ஸ்ரீ சதகர்ணியின் ( கி.பி. 165 – 194 ) கப்பல் சின் னம் பொறித்த ஈயக்காசு ஒன்று கடலூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டு முதலே கடலூருக்கும் , ஆந்திராவிற் குமிடையே வாணிகத் தொடர்பு இருந்துள்ளதை இக்கண்டு பிடிப்பு உணர்த்து கிறது. மேலும் பண்ருட்டி அருகே உள்ள மாளிகை மேட்டில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வில் செவ்வக வடிவிளான யானை உருவம் பொறித்த செப்புக் காசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தைச் சார்ந்ததாகும்.

ரோமானிய நாணயம்

 சங்ககாலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் கடலூர் மாவட்டத்துடன் வணிக தொடர்பு கொண்டதற்கான தொல்சான்றுகள் அதிக அளவில் கிடைத் துள்ளன. இருப்பினும் குள்ளஞ்சாவடி அருகே உள்ள தொண்டைமாநத்தம் என்ற கிராமத்தில் ரோமானிய நாணயம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தொண்டைமாநத்தம் பகுதி மக்களுடன் ரோமானியர் வணிக உறவு கொண்டி ருந்துள்ளதை அறியமுடிகிறது. மேலும் இவ்வூரில் உள்ள இராமசாமி என்பவர் தமது நிலத்தை சீர் செய்யும் போது உடைந்த கிரேக்க - ரோமானியர்கள் மது , ஆலிவ் எண்ணெய் போன்ற திரவப்பொருட்களை தமிழ கத்திற்கு கொண்டு வரப் பயன்படுத்திய கூம்பு வடிவ அடிப்பாகத்தைக் கொண்ட ஆம்போரா ஜாடி களின் உடைந்த பாகங்கள் மற்றும் வெளிர் சாம்பல் நிற ரௌலட்டட் வகை மட்கல ஓடுகளும், ஒருசில கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகளும் அப்பகுதி யில் இருந்து கிடைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொண் டைமாநத் தம் மக்களுடன் கிரேக்க , ரோமானியர்கள் வர்த்தக தொடர்பு கொண் டிருந்த னர் என்பதை உறுதியாக நம்பப்படுகிறது.  

பல்லவர் நாணயங்கள்

   பல்லவர் காலத்தில் நாணயங்களை பொன், காணம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டமைக் குறித்து கல்வெட்டுக்களின் வாயிலாக அறியமுடிகிறது. காணம் என்பது தங்கக் காசாக இருக்கலாம். மேலும் நாணயங்களை ‘’ மஞ் சாடி , கழஞ்சு ‘’ என்ற பெயரில் அழைக்கப்பட்டதையும் பல்லவர் கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

முதலாம் மகேந்திரவர்மன் நாணயம்

  முதலாம் மகேந்திரவர்மன் கி.பி. 590 முதல் கி.பி. 630 வரை காஞ்சிபுரத் தைத் தலைநகராகக் கொண்டு தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்தவன். இவனது ஆட்சி வடக்கே கிருஷ்ணா ஆற்றிலிருந்து தெற்கே காவிரியாறு வரையில் பரவியிருந்தது. இவர் சிம்ம விஷ்ணுவின் மகன் ஆவார். மகேந்தி ரவர்மனுக்கு குணபரன் , அலுப்தகாமன், சத்துருமல்லன், சித்திரகாரப்புலி, சத்தியசந்தன், பகாபிடுகு, கலகப்பிரியன் ஆகிய விருதுப் பெயர்கள் இருந்தன. இம்மன்னன்னது காலத்தை சார்ந்த காசு ஒன்று கடலூரில் கிடைத்துள்ளது. காசின் முன் பக்கத்தில் வலது பக்கம் நோக்கி காளை நிற்கிறது. காளைக்கு மேல் ‘’ பகாபிடுகு ‘’ என்று தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் வட்டத்திற்குள் சங்கு ஒன்று செங்குத்தாக காட்டப்பட்டுள்ளது. பகாபிடுகு என்பது மகேந்திரவர்மனின் விருது பெயர்களில் ஒன்றாகும்.

இரண்டாம் நரசிம்மவர்மன் நாணயம்

             இராஜசிம்மன் என்று போற்றப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் கி.பி. 698 முதல் கி.பி. 729 வரை 40 ஆண்டுகள் அரசாட்சி செய்த பெருமைக் குறியவன். இவருக்கு இரணசயன், இரணவிக்கிரமன், அபராசிதன், அமித்திர மன்னன், அரிமரத்தனன், அகண்டரசன், அமித்ராசன், தனசூரன், ஸ்ரீநிதி போன்ற விருதுப்பெயர்கள் உண்டு. நரசிம்மவர்மன் இசை, நடனம், நாடகம், சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளில் சிறப்புபெற்றவன். இவனது காலத்தைச் சேர்ந்த காசு ஒன்று கடலூரில் கிடைத்துள்ளது.

        இக்காசின் முன்பக்கத்தில் காளை ஒன்று வலதுபக்கம் நோக்கி நிற்கிறது. காளையின் மேல் ‘’ ஸ்ரீநிதி ‘’ என்று பல்லவகிரந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட வட்டத்தில் மீன் ஒன்று உள்ளது.

பெயரில்லாத பல்லவர் நாணயம்

        இந்நாணயத்தின் முன்பக்கத்தில் வலதுபக்கம் நோக்கி காளை ஒன்று நிற்கிறது. இக்காளைக்கு மேல் பிறை, ஸ்ரீவத்சம் ஆகியன உள்ளன. காசின் பின்பக்கத்தில் கப்பல், கப்பலுக்கு மேல் இரண்டு பாய் மரங்கள் கொடிகளுடன் காணப்படுகின்றன. அலைகளின் மீது கப்பல் செல்வது போன்று காட்டப்பட் டுள்ளது.

 முதலாம் இராசராச சோழனின் செப்புக்காசுகள்     

    கடலூர் மாவட்டத்தில் முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளி யி டப்பட்ட செப்பு நணையங்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள் ளன. வடலூர் காளிக் கோயிலின் கிழக்கு , தெற்குப் பகுதியில் நடைபெற்ற கள ஆய்வில் இராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட இரண்டு செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. நாணயத்தின் முன்பக்கத்தில் நிற்கும் மனித உருவமும் , இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளன. பின் பக்கத்தில் அமர்ந்த மனித உருவத்தோடு கையின் கீழே ‘’ ஸ்ரீராஜராஜ ‘’ என்று மூன்று வரிகளில் நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை ஈழக்காசு என்றும் அழைப்பர் . இந்நாணயங்கள் ஒவ்வொன்றும் எட்டு கிராம் எடை கொண்ட வைகளாகும்.    

வராதராஜன் பேட்டை தங்கப் புதையல்

  குறிஞ்சிப்பாடி அருகே வரதராஜன்பேட்டை கிராமம் அமைந் துள்ளது. இவ் வூர் பண்டைய காலத்தில் சிறப்புற்ற பேருராக இருந்துள்ளது. அதற்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தும் இவ்வூரில் கண்டறியப் பட்டுள்ளன. குறிப்பாக சோழர், கங்கர் , தெலுங்குச் சோழர், விஜய நகர நாயக்கர் என பல்வேறு அரசப் பரம்பரையினர் ஆட்சிசெய்த காலத்தில் வரதராஜன்பேட்டை கிராமம் புகழ்பெற்ற பகுதியாக விளங்கியிருக்க வாய்ப்புள்ளது.

  இவ்வூரை சுற்றிலும் பண்டையகால மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்க ளான முதுமக்கள் தாழிகள் , கட்டடப் பகுதிகளுடன் கூடிய மக்கள் வாழ்வி டப்பகுதி போன்றவை கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐயனார் கோயிலின் கிழக்குப் பகுதியில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தை சார்ந்த தொல்பொருட்களான முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், கருப்பு சிவப்பு நிற மட்கல ஓடுகள் , செங்காவி பூசப்பட்ட வழுவழுப்பான சிவப்பு நிற மட்கல ஓடுகள் , பளபளப்பான கருப்பு நிற மட்கல ஓடுகள், வண்ணக் கல் மணிகள் மற்றும் 8 x 24 x 42 செ.மீ அளவுள்ள செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடப்பகுதி போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் கால ஐயனார் கோயில்

  வரதராஜன்பேட்டை கிராமத்தின் குளக்கரையில் ஐயனார் கோயில் ஒன்றுள் ளது. அக்கோயில் கருவறையில் இரண்டு ஐயனார் சிலைகள் உள்ளன. இரண் டும் யானை மீது அமர்ந்து கையில் செண்டு பிடித்து சவாரி செய்யும் பாங் கில் கம்பிரமாகக் காட்சியளிக்கின்றன. இவ்விரு சிறப்பங்களின் வலது கைகள் உடைந்த நிலையில் உள்ளன. முதலாவது சிற்பத்தின் தலைக் கோலம், முகப் பொலிவு, ஆடை அணிகலன்களின் தன்மை, ஐயனாரின் வாகனமான யானை யின் வடிவமைப்பு போன்றவை முந்தைய சோழர் கலைப்பாணியின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. எனவே இச்சிற்பத்தின் காலம் கி.பி. 10 ஆம் நூற் றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். இரண் டாவது சிற்பம் கி.பி. 15 – 16 ஆம் நூற்றாண்டை சார்ந்த நாயக்கர் கலைப் பாணியின் தாக்கம் உள்ளதால் இச்சிற்பம் விஜயநகர நாயக்க மன்னர்களின் காலத்தில் வழங்கப்பட்டதாக இருக்கலாம்.

தங்கப் புதையல்

   ஐயனார் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் மேடானப் பகுதி ஒன்று உள் ளது. அப்பகுதியில் இருந்து கடந்த 5 . 1 . 1989 ஆம் ஆண்டு இக் கிரா மத்தை சார்ந்த திரு. கலியமூர்த்தி என்பவர் விளிம்புடன் கூடிய மட் பாண்டம் ஒன்று வெளிப்படிருந்ததை தோண்டி எடுத்து அதை குளக்கரையில் இருந்த கல்லில் உடைத்தார். அப்போது தங்க நாணயங்கள் வெளிப்பட்டன. இத்தகவளை கேள் விப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவரிடமிருந்த தங்க நாணயங்களை கைப்பற்றினர். இங்குக் கிடைத்த தங்கப் புதையலில் ஏழு உருக்கிய தங்கக் கட்டிகளும், 13 பொன் வளையங்களும், 77 பெரிய பொற்காசுகளும், 93 சிறிய பொற்காசுகளும் இருந்தன. கிடைக்கப்பட்ட பொற்காசுகளை மூன்று வகையா கப் பிரிக்கலாம். முதல் வகை கங்கர் காலத்தவை ; இரண்டாவது வகை தெலுங்கு சோழ மன்னர்கள் காலத்தது ; மூன்றாவது வகைப் விஜயநகர காலத்தை சார்ந்த பொற்காசுகள்.

கங்கர்கள் காலப் பொற்காசுகள்

  இப்பொற்காசுகள் வட்டவடிவிலானவை. முன்புறம் யானையின் உருவமும், மறுபுறம் மலர்க்கொடிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. யானையின் உருவம் நின்ற நிலையில் கம்பிரமாகக் காணப்படுகிறது. யானையின் துதிக்கை கீழ் வரை நேராக நீண்டு முனை உட்புறம் வளைந்துள்ளது. பெருத்த மத்தகமும், கூர்மையான கண்களும், நீண்ட தந்தமும், விரிந்த காதுகளும், பெருத்த உட லும் , வலுவான கால்களும், நீண்ட வாலும் கொண்டு சிறப்புடன் காணப்படு கிறது. இக்காசின் பின்புறத்தில் வளைந்து வனப்பூட்டும் மலர்க் கொடிகள் காட்டப்பட்டுள்ளன. இவைகளைத் தவிர இக்காசில் எழுத்துக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. இக்காசுகள் 1 ¼ சே.மீ விட்டமுடையவை. இவை ஓவ் வொன்றும் 3800 மில்லி கிராம் முதல் 3650 மில்லிகிராம் வரை எடை கொண் டவை. இக்காசுகளில் காணப்படும் எடைக்குறைவு மக்கள் பயன்படுத்தி இருந் ததினால் ஏற்பட்ட தெயமானமாக இருக்கக்கூடும். இவ்வாறு யானை உருவம் பொறித்த ஆறு காசுகள் மட்டும் இங்கு கிடைத்துள்ளன . இது போன்றயானை உருவம் பொறித்த பொற்காசுகள் கங்கர்கள் காலத்தில் அதிகம் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் இவ்வகை காசுகள் கடலூர் மாவட்டத்தில் கிடைத்திருப் பது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்நாணையங்களின் வாயிலாக கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தலக் காடை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கங்க மன்னர்களின் வளமை யான பொருளாதார நிலையைப்பற்றி அறியமுடிகிறது. மேலும் இந்நாணயங் கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளதால் கங்கநாட்டை சார்ந்த வணிகர் கள் இப்பகுதியில் வாழ்ந்த வணிகர்களோடு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடு படிருந்ததை உணரமுடிகிறது.

கண்டகோபாலன் மாடை

  இக்காசுகள் வட்ட வடிவிலானவை. முன்புறம் உட்குவிந்த நிலையிலும், பின்புறம் மேடாகவும் உள்ளன. மேடாக உள்ள பகுதியில் சிறிய கீறல்கள் மட்டும் உள்ளன. உருவம் மற்றும் எழுத்துக்கள் ஏதும் பொறிக்கப் பட வில்லை. முன்பகுதியில் ‘’ குழல் ஊதும் வேணு கோபாலனின் ‘’ சிறிய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் கால்களைப் பின்னி நின்று இரு கைகளில் புல்லாங்குழலையேந்தி வேணுகானம் இசைக்கும் நிலையில் காணப்படுகின்றது. தலைமீது குடைபோன்ற அமைப்பும் அதன் பக்கங்களில் சங்கு , சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இந் நாணையங்களில் கி.பி. 12 – 13 ஆம் நுற்றாண்டைச் சார்ந்த சோழர்காலத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இதனை நேரில் ஆய்வு செய்த திரு. நடனகாசிநாதன் அவர்கள் இவ்வெழுதுக்களை ‘’ ஸ்ரீகண்ட ‘’ எனப் படித்து அக்காசில் உள்ள கோபாலன் உருவத்தையும் சேர்த்து தெலுங்கு சோழ மன்னன் கண்டகோபாலன் வெளி யிட்ட ‘’ கண்டகோபாலன் மாடை’’ எனக் கூறிப்பிட்டுள்ளார். இவ்வகை பொற் காசுகள் மொத்தம் 71 வரதராஜன் பேட்டையில் கிடைத்துள்ளன. இக்காசுகள் ஒவ்வொன்றும் 1 ½ சே.மீ விட்டமுடையவை. மேலும் கங்கர் காலத்துக் காசுகளை விடச் சற்று உருவில் பெரியவை. இக்காசுகள் ஒவ்வொன்றும் 3.450 மில்லி கிராம் முதல் 3.400 மில்லி கிராம் எடை கொண்டவை. இந்நாணையங் கள் அனைத்தும் கி.பி. 12 – 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

விஜயநகர நாணயங்கள்

   இப்புதையலில் கிடைத்துள்ள காசுகளிலேயே மிகவும் சிறிய பொற் காசுக ளாக விளங்குபவை விஜயநகர காசுகளாகும். இவற்றை கொள்ளு காசுகள் என்றும் மிளகாய் விதை பவுன் என்றும் அழைப்பர். இங்கு மொத்தம் 93 காசுகள் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றும் ¾ சே.மீ விட்டமும் 350 மில்லி கிராம் எடைகொன்டாவை. இந்த 93 பொற்காசுகளும் மொத்தம் 36 கிராம் எடைகொண்டவை. இக்காசுகளின் முன்புறத்தில் குறுக்காக ஒரு கோடும் அதன் மீது வரிசைக்கு நான்கு புள்ளிகள் வீதம் மூன்று வரிசைகளில்  12 புள்ளிகள் பொறிக்கப்பட்டுள்ளன. பின்புறம் வளைவுகள் மற்றும் 12 புள்ளிகள் காணப்படுகின்றன. இந்நாணயங்கள் அனைத்தும் விஜயநகர மன்னரான வீர ராயர் காலத்தில் வெளியிடப்பட்டவைகளாகும். எனவே இந்நாணயங்களை வீரையன் பணம் என்றும் வீரராயர் பணம் என்றும் அழைப்பர். இவ்வகை நாணயங்கள் இம் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி ஆகிய பகுதிகளிலும் கிடைக்கப்பட்டுள்ளன. இவைகள் கி.பி. 15 – 16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.  இம்மூவகை காசுகளும் பொற்காசுகள் என்று அழைக்கப்பட்டாலும் கங்கர் மற்றும் தெலுங்குச் சோழர் காசுகள் 20% வெள்ளி கலந்துள்ளது. ஏனைய விஜயநகர காசுகளில் வெள்ளியும், செம்பும் குறைந்த விழுக்காடுகள் கலந்துள்ளன. எனினும் இவை 14 முதல் 16 காரட் வரை தரமுடையவை களாகும்.

தங்கமெட்டிகள்

  இப்புதையல் தொகுப்பில் காலில் அணியும் தங்கமெட்டிகள் 13 கிடைத்துள் ளன. இவை அனைத்தும் 81½ கிராம் எடையுடையவை. மெட்டிகள் ஒவ்வொன் றும் அதிகபட்ச எடை 13 . 300 மில்லிகிராம் முதல் குறைந்த பட்சம் 2.800 எடையுடையன. இம்மெட்டிகள் 2 செ.மீ விட்டமுடையவை. இம்மெட்டிகளில் தங்கத்தோடு வெள்ளி கலப்பு அதிகமாக உள்ளன. இந்த அணிகலன்களுடன் கங்கர் – தெலுங்குசோழர் – விஜயநகர காலத்துக் காசுகளும் கிடைத்துள்ளன. எனவே இறுதியில் கிடைத்துள்ள விஜயநகர காலத்துக் காசுகளின் காலமான கி.பி. 15 – 16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இம்மெட்டிகளை கருதலாம். விஜயநகர காலத்துச் சிற்பங்களில் மகளிர் அணிந்துள்ள மெட்டிகளோடு இவற்றை ஒப்பிடலாம்.









        

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு