தேவிக்கோட்டையில் இராபர்ட் கிளைவ்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி 

தஞ்சாவூர்

        

         

    ராபர்ட்  கிளைவ் கி.பி. 1725 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 29 ஆம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். இளம் வயதில் கிளைவின் பொறுப்பற்ற போக் குகளை கண்டு வேதனையுற்ற அவரது தந்தை ரிச்சர்ட் கி.பி. 1743 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி மெட்வே என்ற இடத்தில் இருந்து கிளைவை  இந்தியாவில் உள்ள கிழக்கிந்திய கம்பெனிக்கு கணக்கெழுதும் கிளார்க் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அப்போது இராபர்ட்கிளைவுக்கு 18 வயது.  சுமார் 17 மாதப் பயணத்துக்குப் பிறகு , கல்கத்தா வந்து சேர்ந்தார் கிளைவ். கிழக்கிந்தியக் கம்பெனியில் அவருக்குத் தரப்பட்ட சம்பளம் ஆண் டுக்கு ஐந்து பவுண்ட் ஆகும். அதாவது   இந்தியப் மதிப்பில் 50 ரூபாய் யாகும் .கிளார்க் வேலையில் நாட்டமில்லாமலும் உயர் அதிகாரிகளிடம் அரவ ணைத்து போகாமலும் இருப்பதை கண்ட அதிகாரிகள் அவரை சென் னைக்கு பணியிடை மாற்றம் செய்தனர். பிறகு அங்கிருந்து கிளைவை கட லூர்  தேவனாம்பட்டினத்தில் உள்ள புனித டேவிட் கோட் டைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சு  கவர்னர் டூப் லக்ஸ் தமது பெரும் படைகளுடன் கடலூர் தேவனாம்பட்டினத் தில் இருந்த பிரிட்டிஷ்காரர்கள் மீது போர் தொடுத்தார். இரவு கடலூர் தேவனாம்பட்டினத் தின் வடக்குப்பகுதியில் இருந்து பிரெஞ்சு படைகள் தமது தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பமானது பிரெஞ்சு படையை எதிர்க்க தயார் நிலை யில் பிரிட்டிஷார் இருந்தாலும் பிரெஞ்சு வீரர்களின் எண்ணிக் கையை ஒற்றர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷார் கொஞ்சம் கலக்கத்தில் இருந்தார்கள்.

   எந்த போர் பயிற்சியும் இல்லாத இராபர்ட் கிளைவ் இந்த இக்கட்டான சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  சாதுரியமாக செயல்பட்டு பிரெஞ்சு படைகளின் பின்புறம் தைரியமாக வந்து சில வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தார். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத பிரெஞ்சு வீரர்கள் குழப்பத்தில் சிதறுண்டு ஓடினார்கள். அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் படை வீரர்கள். பிரெஞ்சு சிப்பாய்களை வேட்டையாட ஆரம்பித்தனர். பிரெஞ்சு படைகள் சிதறி ஓடியது. இந்த வெற்றி பற்றிய செய்தி இங்கிலாந்து அரசர்வரை தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் கிளைவிற்கு பெரிதான பதவியை கிழக்கிந்திய நிறுவனம் தந்து விடவில்லை. ஆனால் பிரெஞ்சு ஆளுநர் டூப்லக்ஸ்‘’யார் இந்த ராபர்ட்கிளைவ்  நம்மை தோற்கடித்து விட்டானே ‘’  என்று விசாரணை செய்யும் அளவிற்கு கிழக்கிந்திய படையில் பிரபலமானார் கிளைவ். வங்காள பகுதி முழுவதை யும் தமது ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் கிழக்கிந்திய கம்பெனி கிளைவை அனுப்பியது . கி.பி. 1757 ஆண்டு கல்கத்தா அருகில் உள்ள பிளாசி என்னும் ஊரில் வங்காள நவாப்பான சிராஜ்-உத்-தெளலாவை தோற்கடிக்க தமது ராஜதந்திர யுக்தியை கொண்டு சிராஜ்-உத்-தெளலாவின் முக்கிய அதிகாரிகளுக்கும் , படை வீரர்களுக்கும் லஞ்சம் கொடுத்து வளைத்தார் . கிளைவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரி களும்,  சிப்பாய்களும் போர் தொடங்கியவுடன் சிராஜ்-உத்-தெளலாவை போர் கலத்தில் அப்படியே விட்டு சென்றனர் . இறுதியில் கிளைவ் வெற்றி பெற் றார். இவ்வெற்றியின் விளைவாக கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் நிரந்தரமாக நிலைபெற செய்த நாயகன் என்னும் பட்டத்தைப் பெற்றார் கிளைவ். அதோடு மட்டுமன்றி சென்னையின் மேஜர் ஜெனரல் பதவியையும் கிழக்கிந்திய நிறுவனம் கிளைவிற்கு கொடுத்து கெளரவித்தது. தனது நண்பர் எட்மண்ட் மஸ்கில்னேவின் தங்கை  மார்க்ரெட்டை  திருமணம் செய்துகொண் டார் கிளைவ். இவருடைய திருமணம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில் உள்ள செயின்ட் மேரிஸ் சர்ச்சில் கி.பி. 1753 ஆம் ஆண்டு நடந்தது. சிலர் வேப்பேரி சர்ச்சில்  நடந்தது என்றும் கூறுகின்றனர் .

கடலூரில் கிளைவ்

        எலிகு ஏல் என்ற ஆங்கிலேயர் செஞ்சியை ஆண்ட ராமராஜர் என்பவரிடம் சிறிதளவு இடத்தை விலைக்கு வாங்கினார் . அங்கு கி.பி. 1683 ஆம் ஆண்டு புனித டேவிட் கோட்டையை கட்டினார். ஆங்கிலேய பேரரசிற்கு அடித்தளமிட்ட இராபர்ட் கிளைவ் இங்குதான் தமது வாழ்வை தொடங்கினார். கி.பி. 1757 வரை கிளைவ் கடலூரில் தங்கியிருந்தார் . கடலூர் தேவனாம் பட்டினம் புனித டேவிட் கோட்டையையும் , கடலூர் பழையநகர் பகுதியில் உள்ள பேக்டரி ஹவுசும் முக்கிய இராணுவ மற்றும் வர்த்தக கேந்திரமாக கிளைவ் உருவாகினார் . புனித டேவிட் கோட்டை மிகவும் வளிமையானதாகும் . காரணம் இக் கோட்டை அமைந்துள்ள பகுதி ஒரு தீவு பகுதியாகும் . மூன்று பக்கமும் ஆறுகளாலும் ஒரு பகுதி கடலாலும் சூழப்பட்ட பகுதியாகும் . இப் பகுதியில் கிடங்குகள் , அதிகாரிகள் தங்குவதற்கான வீடுகள் , அலுவலகங்கள் , கிருத்துவ தேவாளையம் போன்றவைகள் உள்ளடக்கிய பகுதியாகும் . இவைகளை சுற்றி கோட்டை சுவர் , எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கான சுரங்க வழிகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன. இந்த புனித டேவிட் கோட்டைதான் தமிழகத்தின் முதல் தலைநகரமாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் உருவாக்கி யிருந்தனர். கடலூருக்கு வந்த இராபர்ட் கிளைவ் கார்டன் ஹவுஸ் என்ற கட்டடத்தில் தங்கியிருந்தார். இது தற்போது மாவட்ட ஆட்சியரின் முகாம் கட்டடமாக செயல்பட்டு வந்தது. கடலூர் முது நகரில் ஒரு தெருவின் பெயர் கிளைவ் பெயரில் கிளைவ் ஸ்ட்ரீட் என்று இன்றும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தேவிக்கோட்டை முற்றுகை

   சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் தேவிக் கோட்டை அமைந்துள்ளது. இக் கோட்டையானது தஞ்சை மராட்டியருக்கு சொந்தமானதாகும் . தஞ்சை மராட்டிய மன்னன் சாயாஜிக்கும், பிரதாப் சிங்கிற்கும் இடையே அரியணைப் போட்டி நடைபெற்றது. இச் சூழளில் சாயாஜி தமக்கு தஞ்சை அரியணையை மீட்டு கொடுத்தால் டேவிட் கோட் டைக்கு அருகே உள்ள தேவிக்கோட்டையை  பிரிட்டிஷாருக்கு தருவதாக கூறினார். ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ் தளபதி ஜேம்ஸ் கோப் என்பவரின் தலை மையில் 430 ஐரோப்பிய வீரர்களும்,1000 நாட்டுப்படை வீரர்களையும் கொண்டு தேவிக்கோட்டையை தாக்க முற்பட்டார். ஆனால் போதிய தளவா டங்கள் இல் லாததால் முற்றுகையை விட்டு கடலூர் திரும்பினார். அதன் பிறகு மேஜர் ஸ்டிரிங்கர் லாரன்ஸ் தலைமையில் படை அனுப்பப்பட்டது. இப்படை தேவிக் கோட்டையை முற்றுகையிட்டு கடுமையாக தாக்கியது. ஒரு கட்டத் தில் பிரிட்டிஷ் படைகள் நிலைகுலைந்து போனது. இந்த இக்கட்டான சூழ்நிலை யில் தமது நம்பிக்கைக் குறிய சில வீரர்களோடு கோட்டையின் மையப்பகுதிக்கு சென்று தீரத்துடன் போர்செய்து கோட்டையை கைப்பற் றினான் . இந்த தீரர் செயல் தான் இராபர்ட் கிளைவ்விற்கு மேஜர் ஜெனரல் பதவியை பெற்று தரக் காரணமாக இருந்தது.    

தேவிக்கோட்டை

         நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தேவிக்கோட்டை சாண்டில்யன் எழுதிய ''ராஜபேரிகை '' நாவலில் இடம் பெற்றுள்ளது . தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களுக்கு சொந் தமான இக்கோட்டையில் கி.பி. 1749 ல் மராட்டியருக்கும் ஆங்கிலேய படைக் கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது . இந்த போரின் போது சாதா ரண சிப்பாயாக இருந்த இராபர்ட் கிளைவ்......பிறகு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை ஆளுனராக உயர்வடைய காரணமாக அமைந்து.
       மேலும் இந்த கோட்டையில் மண்டபங்கள் அமைக்க தேவையான கற் களை மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் கோயிலின் முன் மண்டபத்தை பிரித்து வந்து இக் கோட்டைக்கு தேவையான மண்டபங்களை அமைத்துள் ளனர்.




Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு