விருத்தாசலத்தில் தஞ்சை மராட்டியர் கல்வெட்டுச் செய்தி
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
கி.பி. 1677 ஆம் ஆண்டு பெரும் படையுடன் கர்நாடக
வழியாக தமிழகம் வந்த மராட்டிய மன்னன் சிவாஜி முதலில் செஞ்சியை கைப்பற்றிய பிறகு
வேலுரை வென்றார். அதன் பின் வாலிகண்டபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்த
பீஜப்பூர் அரசின் பிரதிநிதி ஷேர்கானை விரட்டி சென்ற சிவாஜியின் படைகள்
திருவதிகையில் நடைபெற்ற போரில் தோற்கடித்தது. இவ்வெற்றி யின் விளைவாக விழுப்புரம், பண்ருட்டி, கடலூர்,
வடலூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய ஊர்கள் சிவாஜியின் வசம் வந்தன. கொள்ளிடம் ஆற்றின் வடபகுதி வரை தாம் வென்ற
அனைத்துப் பகுதிகளை யும் ஒன்றிணைத்து செஞ்சியை மராட்டிய அரசின் தலைமையிடமாக
மாற்றினார். பிறகு சாந் தாஜி என்பவரை தமது அரச பிரதிநிதியாக நியமித்தார் சிவாஜி. விருத்தா சலம் இர யில் நிலையம் அருகே தஞ்சைமராட்டிய மன்னன்
வேங்கோசி யின் காலத்தை சார்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் கி.பி.1688 ஆம் ஆண்டு
தஞ்சையை தலமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கோசி விருத்தாசலம் கோயி லுக்கு 900 குழி
நிலத்தை தனமாக வழங்கியுள்ளதை குறிப்பிடுகிறது. மேலும் வடலூர் அருகே உள்ள வாலாஜா
ஏரியின் வடக்கு கரையில் அமைந்துள்ள பாவாடை அம்மன் கோயிலில் தஞ்சை மராட்டியர்
கலைப்பாணியுடன் கூடிய சுதை சிற்பங்கள் காணப் படுகின்றன. குறிப்பாக மராட்டிய மன்னன்
சிவாஜி யின் ஒன்றுவிட்ட சகோதர ரான வேங்கோசியின் கல்வெட்டு
விருத்தாசலத் தில் காணப்படுவதாலும், வடலூர் பகுதியில் மராட்டியர்
கலைப்பணியின் தாக்கம் உள்ளதையும் பார்க்கும் போது சிவா ஜிக்குப் பிறகும் வடலூர்
மற்றும் விருத்தாசலம் பகுதி தஞ்சை மராட்டியர் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என லாம். மேலும் இன்று
வடலூரில் வாழ்ந்து வரும் நரிக்குறவர் என்கின்ற குரு விக்காரர்கள் அன்று சிவாஜியின்
படை வீரர்களாகவும், வீரர்களுக்கு உதவியா ளர்களாக பணிபுரிந் தவர்கள். சிவாஜி யின் படைகள் மராட்டிய
தேசம் சென்ற பிறகு இவர்கள் வடலூரிலேயே தங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்க
ஒன்றாகும்.
Comments
Post a Comment