சுதந்திர போராட்டக் காலத்தில் கடலூர் மாவட்டம்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்


ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே கடல்வழி கண்டுபிடிக்க எண்ணிய போர்ச்சுகல் நாட்டை சார்ந்த மாலுமி வாஸ்கோட காமா கி.பி. 1498 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியான கள்ளிக் கோட்டை யில் வந்து இறங்கினான். அப்பகுதி அரசன் சாமரினை சந்தித்து கள்ளிக் கோட்டை, கோவா போன்ற இடங்களில் போர்ச்சுகல் நாடினர் வர்த்தகம் செய்வதற்கான அனுமதியையும் பெற்று சென்றான். கி.பி 1615 ஆண்டுகளில் போர்ச்சுகல் நாட்டினர் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் தங்களது வர்த்தக மையங்களை ஏற்படுத்த எண்ணினார். அதன் விளைவாக விஜயநகர மன்னரை சந்தித்து பரங்கிப்பேட்டையில் தங்களது வர்த்தக மையங்களை தொடங்குவதற்கான கான உரிமையை பெற்றனர். பிறகு கடலூரிலும் தங் களது வர்த்தக நிறுவனங்களை விரிவாக்கம் செய்துகொண்டனர். பிறகு கி.பி. 1623 ஆம் ஆண்டு செஞ்சி நாயக்க மன்னர் கிருஷ்ணப்பரிடம் கடலூரில் தங் களது வர்த்தக மையத்தை ஏற்படுத்து வதற்கான உரிமையை ஹாலந்து நாட்டை சார்ந்த டச்சுக்காரர்கள் பெற்றனர். செஞ்சி மராட்டியர்களின் கைக்கு மாறியதால் கி.பி. 1678 ஆம் ஆண்டு கடலூரில் இருந்த டச்சு காரர்களை பரங்கிப்பேட்டைக்கு விரட்டினர். பரங்கிப்பேட்டையில் குடியேறிய அவர்கள் தங்க ளது வர்த்தக மையமாக அந்நகரை மாற்றினர்.

சுதந்திரபோராட்ட காலம் 

  ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்கள் படிப்படியாக தமது படைபலத்தின் மூலம் அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் இந்தியாவில் இருந்தே விரட்டினர். பிறகு தமது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசுகளையும் ஒழித்து முழுஇந்தியாவையும் கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்த சரியான தலைமை இல்லாதது பெறும் குறையாக இருந்தது. இதனை உணர்ந்த காந்தியடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். அப்போது இந்திய சுதந்திர போராட்டம் சரியான ஒருங்கிணைப்பு இன்றி நடைபெற்று வருவதை கண்டார் . இந்திய சுதந்திர போராட்டத்தின் போக்கை உற்று கவனித்து வந்த காந்தியடிகள் தாம் தென்னாப்பிரிக்காவில் கற்ற சத்தியாக் கிரக போராட்டயுக்தியை இந்திய சுதந்திர போராட்ட களத்தில் விதைத்தார் . விளைவு இந்திய சுதந்திர போராட்டத்தின் தன்னிகரற்ற தலைவராக விளங் கினார். இந்தியாவில் இருந்து ஆங்கிலேய ஆட்சியை அகற்றப்பட வேண்டு மேயானால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட வைக்க வேண்டும் எனக்கருதினார். எனவே இந்தியா முழுவதும் சுற்றுப்ப யணத்தை மேற்கொண்டார். அவ்வாறு கடலூர் மாவட்டத்திற்கு காந்தியடிகள் வருகை புரிந்ததன் விளைவாக இப்பகுதியில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு புதுவுத்வேகத்தை அளித்தது.

 கடலூரில் காந்தி

     கடலூர் மாவட்டதிற்கு 17. 09 .1921 ஆம் ஆண்டு காந்திஜி விழுப்புரம், பண் ருட்டி , கடலூர் வழியாக பறங்கிப்பேட்டை ரயில்நிலை யத்தில் தமது திருப் பாதங்களை பதித்தார் . காரணம் பறங்கிப்பேட்டையில் டச்சு நாட்டை சார்ந்த திருமதி அன்னை மேரி பீட்டர்சன் என்ற  அம்மையார் கல்வி சேவைக்காக சேவா சதனத்தை நிறுவியிருந்தார். மேரி அம்மையார் காந்திஜியின் மீது கரைகாண பக்தி கொண்டவர். அவ்அம்மையாரின் அழைப்பை ஏற்ற காந்தி யடிகள் பறங்கிப்பேட்டைக்கு வருகை புரிந்தார். மேரி அவர்கள் துவக்க  உள்ள கிருத்துவ தேசியகலா சாலைக் கட்டடத்தின் அடித்தள கல்லை நாட்டினார். பிறகு அங்கிருந்து மாலை சுமார் ஆறு மணிக்கு கடலூரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டதிற்கு வருவதாக திட்டம் ஆனால் வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் கடலை கடந்து மேடைக்கு வருவதற்குள் இரவு மணி எட்டாகிவிட் டது.

கடலூரில் காந்தி

  கடலூர் கெடில நதிக்கரையில் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் அரைமணி நேரம் நேரம் காந்தியடிகள் உரையாற்றினார் . காந்தியின் பேச்சை ஆச்சாரிய தமிழில் மொழிபெயர்த்தார். இக்கூட்டத்திற்கு சீனிவாச ஐயங்கார் தலைமை வகித்தார்கள் . கடலூர் அஞ்சலை யம்மாள் பெண்கள் சார்பாக தமது வரவேற் புரையை காந்திக்கு படித்து வழங்கினார் . ‘’ சுயராஜியம் ‘’ என்ற சொல்லுக்கு வேறுபொருள் இருக்கிறதோ இல்லையோ கட்டுப்பாடு என்ற பொருள் உறுதி யாக உண்டு என்பதை கடலூர் மண்ணில் முதன் முதலாக காந்தி அவர்கள் வலியுறுத்தினார்.

இரண்டாவது முறை கடலூர் வருகை

       1927 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பத்தாம் நாள் அதிகாலை 3.30 மணிக்கு திருவனந்தபுரம் விரைவு இரயிலில் கடலூர் வந்து சேர்ந்தார் மகாத்மா காந்தி. அதிகாலை வேலையாக இருந்ததால் நிலையத்தில் இருந்த இரயில் பெட்டியில் அவர் தூங்குவதற்கு இரயில் நிலைய அதிகாரிகள் வசதி செய்து கொடுத்தனர். காந்தி மகான் கடலூர் வந்துள்ள செய்தியை கேள்விப் பட்ட மக்கள் இரயில் நிலையத்தில் திரண்டனர் . காலை ஆறு மணிக்கு கடலூர் நகராட்சி தலைவர் வேணுகோபால் நாயுடுவும் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் அண்ணலுக்கு சிறப்பான வரவேற்பு அளித் தனர் . மீண்டும் காந்திஜியின் திருப்பாதங்கள் இரண்டாவது முறையாக கடலூர் மண்ணில் பதிந்த பெருமை இந்நகர் பெற்றது.

  அன்று கலெக்டர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் வழக்கரிஞர்கள் சங்கம் மற்றும் சுயராஜியம் கட்சியின் சார்பாக சீனிவாசஐ யங்காரும் , திண்டிவனம் பொதுமக்கள் சார்பாக A.V.பாஷியம் ரெட்டியாரும் வரவேற்புரையும் பணமுடிப்பையும் அளித்தனர். இக்கூட்ட மேடையில் கட லூர் மாவட்ட பெண்கள் சார்பாக அஞ்சலையம்மாள் பண முடிப்பையும் வரவேற்புரையையும் காந்திஜிக்கு வழங்கினார்கள்.  காந்தி யடிகள் பேசும் போது நான் இந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக  வழியில் ஒரு வாசகத்தைப் பார்த்தேன். அந்த வாசகத்தை நீங்களும் பின்பற்றினால் போதுமானது. அதாவது ‘’ ஏழைகளை நேசியுங்கள்  நீங்கள் காந்திஜியை நேசித்தவர்களாவீர்கள் ’’ என கூறியது போது மக்களி டையே பெரும் வர வேற்பை பெற்றது. அன்றே நெல்லிக்குப்பம் பொதுக் கூட்டதில் பேச வேண் டிய சூழல் காந்திக்கு ஆனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமது மனைவி கஸ்தூரிபாயை அனுப்பிவைத்தார்.

 சிதம்பரத்தில் காந்தி

      மகாத்மா காந்தி   சிதம்பரம் நகருக்கு இருமுறை வந்துள்ளார்கள் (1927-1934). 16. 2. 1934 ல் சிதம்பரம் நகருக்கு காந்தி அவர்கள் வந்ததற்கு காரணம் நந்த னார் பேரில் அவருக்கு இருந்த அசைக்க முடியாத பற்று. மேலும் அன்றுதான் சுவாமி சகஜானந்தா தலைமையில் காந்தியடிகளின் திருக்கைகளால் நந்தனார் கோயில் கட்டுவதற்கான அடித்தளக்கல் நாட்டப் பட்டப்பட்டது. மேலும் அன்று நடைபெற்ற பொதுக்கூட்டதில் காந்தி அவர்கள் நந்தனாரைப் பற்றி கூறும் போது ‘’ யங் இந்தியா ‘’ வில் சிதம்பர நகரையும் நந்தனாரையும் பற்றி ராஜாஜி எழுதிய கட்டுரை தம்மை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் நந்தனின் திருப் பாதங்கள் பட்ட இந்த புன்னிய பூமியில் எனது பாதங்கள் படுவதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று காந்திஜி குறிப் பிட்டது நந்தனார்பால் காந் திக்கு இருந்த அன்பினை நாம் அறியமுடிகிறது.

கடலூரில் வாஞ்சிநாதன்

  நெல்லை மாவட்ட கலெக்டர் ஆஷ்துரை இந்தியர்களை மிக கீழ்தரமாக நடத்தி வந்தார். இச்செயல்பாட்டிற்கு முடிவுகட்ட எண்ணிய வாஞ்சிநாதன் ஆஷ்துரையை மணியாச்சி இரயில் நிலையத்தில் 1911 ஜூன் மாதம் 17 ஆம் நாள் சுட்டுக்கொன்றார். பிறகு வாஞ்சிநாதனும் சுட்டுக்கொண்டு இறந்தான். வாஞ்சிநாதன் தம்மை சுட முயற்சிப்பதை பார்த்த ஆஷ்துரை தாம் தலையில் அணிந்திருந்த கனத்த தொப்பியை எடுத்து வாஞ்சிநாதன் மீது வீசினார். அதற் குள் வாஞ்சிநாதன் சுட்ட தோட்ட ஆஷ்துரையின் இடது மார்பில் பாய்ந்து ஊயிரை பறித்தது. இந்த நிகழ்வு ஆங்கிலேய அதிகாரிகள் இடத்தே பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிறகு வாஞ்சிநாதன் கைத்துப்பாக்கி சுடும் பயிற்சி எங்கு அளிக்கப்பட்டது என்பது குறித்த விசாரணை குழு அமைக்கப் பட்டது. அக்குழு வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கி சுடும் பயிற்சி புதுச்சேரி யில் வழங்கப்பட்டது என்பதை கண்டறிந்தது . மேலும் முறையான பயிற் சிக்கு பின்னர் கைத்துப்பாக்கியுடன் வாஞ்சிநாதன் கடலூர் திருப்பாதிரிப்புலி யூர் இரயில் நிலையத்தில் புகை வண்டியேறி மணியாச்சிக்கு சென்றதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

கடலூரின் வீர மங்கை அஞ்சலையம்மாள்

         கடலூர் மாவட்டத்தில் தோன்றிய முதல் பெண் சுதந்திரப் போராட் டவீரர் என்ற பெருமைக்கு செந்தக்காரர் திருமதி அஞ்சலையம்மாள் ஆவார் . இவர் கடலூர் முதுநகரில் உள்ள சுண்ணாம்புக்காரர் தெருவில் ( இன்று காந்தி பார்க் வீதி ) உள்ள 38 ஆம் எண்ணுள்ள வீட்டில் கி.பி. 1890 ஆம் ஆண்டு பிறந்தார். திண்ணை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். இளமை முதலே இந் திய சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஆங்கிலேய அடக்குமுறையால் அஞ்சலையம்மாள் பல முறை சிறை சென்றார். சேத்தி யாத்தோப்பு அருகே உள்ள நற்குணம் என்ற ஊரை சார்ந்த காந்தியவாதியான முருகப்பபடையாட்சியை மணந்தார். இவரும் சுதந்திரப் போராட்ட வீரர். அஞ் சலையம்மையாரின் சுதந்திர போராட்டத்திற்கு இவரது கணவர் முழு உறுது ணையாக இருந்தவர். முருகப்பா சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்காகவே சொந்த ஊரை விட்டு தனது மனைவியுடன் கடலூரில் வந்து தங்கினார் .

போராட்டகலத்தில் அஞ்சலையம்மாள்            

  1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது அஞ்சலையம்மையாரின் பொது வாழ்க்கை தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம் , உப்புசத்தியா கிரகம் , 1933 கள்ளுக்கடை மறியல், 1940 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக் கிரகம் போன்ற பல போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார். இதன் விளைவாக கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டார். 1932 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட அஞ்சலையம் மாள் அப்போது நிறைமாத கர்ப்பிணி . வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தை பிறந்துவிடும் என்பதால் அவரை விடுவித்தது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்  அடைக்கப்பட்டார். அப் போது பிறந்தவர்தான் ஜெயவீரன் என்பவர். அஞ்சலையம்மாளின் மூத்தமகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதில் நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென் றார். பிறகு தமிழகம் வந்த காந்தியடிகளார் அம் மாப்பொண்ணின் தீரத்தை கண்டு வியந்து தம்மோடு வார்தாவுக்கு அழைத் துச்சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி அங்கு செவிலியர் படிப்பை படிக்க வைத்தார் . படிப்பு முடிந்த தும் சபர்மதி ஆசிரமத்தில் வளர்ந்தார். சென்னை வந்ததும் பன்மொழி புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார்.

காங்கிரசில் அஞ்சலையம்மாள்

  சிறு வயது முதலே காங்கிரசின் கொள்கையின் மீது அதிக பற்று கொண்டு விளங்கியவர் இவர். அதனால் கடலூர் நகருக்கு வரும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலையம்மாளின் வீட்டில்தான் உணவு உபசரணை நடக் கும். கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தமது வீட் டையே அடமானம் வைத்து கட்சிபணிகளுக்காக செலவிட்டார். ஒரு கட்டத் தில் வீட்டுக்கடன் அடைக்க முடியாததால் வீடு ஏலத்திற்கு வந்தது. அதனை கேள்விப்பட்ட சிலர் தங்களது சொந்த பணத்தை கொடுத்து வீட்டை மீட்டுதந் தனர்.

கதராடை போராட்டம்

      அஞ்சலையம்மாளின் கணவர் நெசவு தொழில் செய்து வந்தவர். இவர் 1932 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது நெசவு தமது குடும்பதொழில் என்று குறிப் பிட்டுள் ளார். மேலும் சைதாப்பேட்டையில் தமது கணவரால் அமைக்கப் பட்டிருந்த கைத்தறி நெசவு கூடத்தில் தயாரிக்கப்பட்ட கதராடைகளை அஞ்சலையம் மாள் பெரியாருடன் சேர்ந்து கிராமந்தோறும் விற்று வந்தார். மேலும் பெரி யார் அவர்கள் தொடங்கிய கதராடை இயக்கத்தில் தம்மை முழுமையாக இணைத்து கொண்ட அஞ்சலையம்மாளின் அர்ப்பணிப்பை கண்ட பெரியார் கடலூர் மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமித்தார். கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கதராடையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களி டையே தமது கணவருடன் இணைந்து ஏற்படுத்தி வந்தார்.

தென்னாட்டின் ஜான்சிராணி

  1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் கடலூர் நகருக்கு வருகை தந்தபோது கட லூர் அஞ்சலையம்மளை சந்திக்க விரும்பினார் . ஆனால் கடலூர் வரும் காந் தியை சந்திக்க மாவட்ட காவல் துறையினரால் அஞ்சலையமளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பர்தா அணிந்து மாறுவேடத்தில் சென்று காந்தி யடிகளை சந்தித்தார் . அவரது துணிச்சலை கண்ட காந்தியடிகள் அஞ்சலை யம்மாளை தென்னாட்டின் ஜான்சி ராணி என்று அழைத்தார். அன்று மாலை கெடிலநதிக்கரையில் காந்தியடிகளின் உரையை கேட்ட முருகப்ப படையாட்சி அதுவரை மது அருந்தும் பழக்கம் உள்ளவராக இருந்தவர் அன்று முதல் மது அருந்துவதை நிறுத்தினார். மேலும் கள்ளுக்கடை மறியளை தீவிரமாக தென் னாற்காடு மாவட்டம் முழுவதும் செய்தார். பல நேரங்களில் சுதந்திரப் போராட்டவீரர்களை கைது செய்து கடலூர் காவல் நிலைய வளாகத்தில் தங் கவைக்கப்படுவர் . அவ்வீரர்களுக்கு காவல் நிலையம் அருகேயே இலவசமாக உணவு சமைத்து கொடுத்து வந்தார் அஞ்சலையம்மாள். இதனை கண்ட காவல்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஒருமுறை செராக்குப்பம் நாராயணசாமி படையாட்சி அவர்களும் அவரது நண்பரிகளின் அழைப்பை ஏற்று அஞ்சலை யம்மாள் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதி யில் கதராடையின் முக்கியத்துவம் , தேச விடுதலை பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெரு முனை பிரசாரங்களை செய்துள் ளார்கள் . அஞ்சலை யம்மாள் மற்றும் முருகப்பபடையாட்சி அவர்களின் முயற்சியால் கடலூர் மாவட்டம் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தமது பெறும்பங்களிப்பை வழங்கியுள்ளது என்றுச் சொன்னால் அதுமிகையன்று.

இரண்டாம் உலகப்போரில் கடலூர் மாவட்டத்தின் பங்கு

  இரண்டாம் உலகப்போரில் கலந்து கொள்வதற்காக கி.பி. 1939 ஆம் ஆண்டு 9,272 ஆயிரம் நபர்களை கடலூரில் இருந்து பணியில் சேர்க்கப் பட்னர். இவர் கள் தேர்வு செய்யப்பட்ட தகவளை கூறும் கல்வெட்டு ஒன்று மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது. இரண்டாம் உலகப் போரில் நேசநாடுகளின் அணியில் இருந்தத இங்கிலாந்து தன்படைகளுக்கு தேவையான வீரர்களை கடலூர் பகுதியில் இருந்தும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வடலூரும் சுதந்திரப் போராட்ட களமும்   

 இந்திய சுதந்திர போராட்டத்தில் செராக்குப்பம் கிராமத்தை சார்ந்த சுப்புராயப் படையாட்சி , பாப்பாம்மாள் அவர்களின் மூன்றாவது மகனான திரு சு . நாரா யணசாமிபடையாட்சி சேரக்குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு ‘’நேதாஜி வாலிபர் சங்கம் ‘’ என்ற அமைப்பை ஏற் படுத்தினார். அவ்வமைப்பின் தலை வராகவும் இவர் இருந்தார். பார்வதிபுரம், காட்டுக்கொல்லை, ஆபத்தாரணபுரம் போன்ற பகுதிகளில் இருந்த இளைஞர் களைதிரட்டி அவர்களிடத்தே காந்தி , நேதாஜி போன்றோர்களின் கருத்துக் களை கூறி இந்திய சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட வைத்தார். மேலும் ஆபத்தாரணபுரம் கிராமத்தை சார்ந்த சிலம்பக்கலை தம்புசாமிப் படையாட்சி  நேதாஜி வாலிபர் சங்கத்தின் பொது காரியதரிசியாக இருந்தார். இவர்களின் பிரச்சார கூடமாக செராக்குப்பம் மாரி யம்மன் கோயில் திடல் விளங்கியது. கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான பூண்டியாங்குப்பம் கிராமத்தை சார்ந்த திரு P.R. சீனி வாசப் படையாட்சி அவர்களின் தலைமையில் 19 . 06 . 1946 ஆம் ஆண்டு செரக்குப்பம் மாரியம்மன் கோயில் திடலில் மிகபெரிய அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  ஒரு முறை வடலூர் நகருக்கு வருகை புரிந்த பசும் பொன்முத்து ராமலிங்க தேவரை நாராயண படையாட்சியும், தம்புசாமி படை யாட்சியும் சந்தித்து தங்களது இளைஞர் அமைப்பை பற்றி கூறினர். உடனே நேதாஜி வாலிபர் சங்கத்தின் இளைஞகர்களை நான் சந்திக்க வேண்டும் விழா விற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். அன்று மாலை மாரியம்மன் கோயில் திடலில் இளைஞர்களிடையே கலந்துரையாடினார் தேவர் அவர்கள். அன்று இரவு வடலூர் பார்வதிபுரம் செம்மல் சீத்தாரம படையாட்சி அவர்கள் வடலூரில் ஏற்பாடுச் செய்திருந்த பொதுக்கூட்டத்தில் தேவர் அவர்கள் தேசியமும் தெய்வீகமும் என்ற தலைப்பில் பேசினார்கள். தேவரின் பேச்சை கேட்ட இளைஞர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது. இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நேதாஜிவாலிபர் சங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் வடலூர் பகுதியில் செயல் பட்டது.  


                 








பரங்கிப்பேட்டை செவாமந்திர் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியின் பாதரட்சை

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு